Tuesday 8 February 2011

Daily Tips(வீடு)

            ஆங்கிலத்தில் house,home,residence மூன்று வார்த்தைகளுமே வீட்டைக் குறிக்க பயன்படுகிறது.ஆனால் எது எது எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்பதை இனி பார்க்கலாம.

House:
  • house என்பதை வெறும் கட்டடத்தை குறிக்கப் பயன்படுத்தலாம்.
  • மற்றவர்கள் வீட்டைப் பற்றிப் பேசும் போது house என்று சொல்ல வேண்டும்
  • Example:
    1. "நான் அவளுடைய வீட்டுக்கு போனேன்" என்று சொல்லI went to her house என்று சொல்லலாம்.I went to her home என்று சொல்லக் கூடாது.
    2. "அவள் என்னுடைய வீட்டுக்கு வந்தாள்' என்று சொல்ல she came to my house என்று சொல்ல வேண்டும்.
Home:
  • house என்பதை வெறும் வீட்டைக்குறிக்கவும் அடுத்தவருடைய வீட்டைப்பற்றி சொல்லவும் பயன்படுத்துகிறோம்.
  • home என்பது ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசிக்கும் வீட்டைக் குறிப்பிட உதவும்.
  • home வார்த்தையை use பண்ணும் போது அதன் முன் my,our,his,her போன்ற pronouns use  பண்ணக்கூடாது.அதே போல் homeக்கு முன்னால் to என்ற வார்த்தை use பண்ணக்கூடாது
  • Example:
    1. "அவள் வீட்டிற்க்கு போனாள்" என்று சொல்ல She went home என்று சொன்னால் போதும் . She went to home என்று சொல்லக் கூடாது.
    2. "நான் என்னுடைய வீட்டுக்கு போனேன் என்று சொல்ல I went home  என்று சொல்ல வேண்டும். I went to home (or) I went to my home என்று சொல்லக் கூடாது.
  • "வீட்டில்" என்று சொல்ல at home என்று சொல்ல வேண்டும்.
  • Example:
    1. "அவள் வீட்டில் இருக்கிறாள்"  என்று சொல்ல she is at home என்று சொல்ல வேண்டும்.
    2. "அவர் இன்று வேலைக்கு செல்லவில்லை. வீட்டில் தான் இருக்கிறார்"  என்று சொல்ல He didn't go to office today. He is at home 
    3. வீட்டில் எல்லோரும் நலமா? என்றுக் கேட்க How is everybody at home? என்று கேட்கலாம்.
Residence: 
  • அலுவலகம்  தொடர்பான விஷயங்களில் வீட்டைப் பற்றிக் குறிப்பிடும் போது Residence என்று சொல்ல வேண்டும்.
  • Example:
    1. Residence Phone number வீட்டு தொலைபேசி எண்
    2. Residence Address வீட்டு முகவரி
    3. உங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவரை வீட்டிற்க்கு அழைப்பதற்கு Please come to my residence என்று சொல்லலாம்.

11 comments:

  1. She came to my house house.... னு ரெண்டு தடவை எதற்கு சொல்லணும், டீச்சர்? அவ ஒரு தடவை வந்தா ...இரண்டு தடவை வந்த மாதிரி இருக்குமோ?

    ReplyDelete
  2. Thank u sunitha....

    ReplyDelete
  3. useful post to every one... everyone must know this...

    By
    http://hari11888.blogspot.com

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. மிக்க நன்றி!. ஆங்கிலம் இதைவிட எளிதாக யாரால் கற்றுத்தர முடியும்..? தொடர்க..

    ReplyDelete
  6. Thanks Sunitha

    - puduvaisiva

    ReplyDelete
  7. ஆங்கில கற்க நல்ல பதிவு.

    ReplyDelete
  8. மிகவும் உபயோகமான பதிவு. மிக்க நன்றி. என்னுடைய வீட்டில் கொண்டு வந்து கொடுக்க முடியுமா? அல்லது கொண்டு வந்து கொடு என்பதை எவ்வாறு கூறுவது என்று சொல்லித் தாருங்களேன்.

    --ராஜா.

    ReplyDelete