Showing posts with label Daily Tips. Show all posts
Showing posts with label Daily Tips. Show all posts

Thursday, 10 February 2011

Study English every Day-10/02/11(ஆங்கிலபயிற்சி)

 Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.

  1. நாளுக்கு நாள் நீ குண்டாகிக் கொண்டிருக்கிறாய்.
    You are getting fatter day by day
  2. அவளுக்கு எப்பொழுதுமே பேசுவதில் விருப்பம்.
    She is fond of talking
  3. நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன்.
    I have quit drinking
  4. குடையை எடுத்து செல்.
    Take an umbrella with you
  5. நீயே உன்னுடைய வேலைகளைச் செய்யக் கற்றுக்கொள்.
    Learn to do your work yourself
  6. என்னிடம் 50 ரூபாய் குறைவாக உள்ளது.
    I am short of fifty rupees.
  7. உன்னுடைய shoe கடிக்கிறதா?
    Does your shoes pinch you?
  8. கடனில் பொருட்களை வாங்காதே.
    Don't buy on credit
  9. இன்று என்னால் எதுவும் படிக்க முடியவில்லை.
    I couldn't study anything.
  10. நீங்கள் செக் ஏற்றுக்கொள்வீர்களா?
    Do you accept cheques?
Try Yourself: 
         கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும். 
  1. என்னுடைய புத்தகத்தை கொண்டு வர மறக்காதே
  2. இந்த ஆடை எனக்கு இறுக்கமாக உள்ளது
  3. எனக்கு நல்ல புத்தகங்களை கொடு
  4. நீ எனக்கு 5 ரூபாய் குறைவாகக் கொடுத்துள்ளாய்
  5. இந்த துணி துவைத்தால் சுருங்குகிறது
  6. இந்தக் கடையில் எல்லாவிதமான பழங்களும் கிடைக்கும்.
  7. இங்கிருந்து கடைத்தெரு எவ்வளவு தொலைவு?
  8. அது அதிகத் தொலைவு
  9. இது புத்தம் புதிது
  10. நான் நேற்று இரவு ஒரு நல்ல புத்தகம் படித்தேன்.

Tuesday, 8 February 2011

Daily Tips(வீடு)

            ஆங்கிலத்தில் house,home,residence மூன்று வார்த்தைகளுமே வீட்டைக் குறிக்க பயன்படுகிறது.ஆனால் எது எது எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்பதை இனி பார்க்கலாம.

House:
  • house என்பதை வெறும் கட்டடத்தை குறிக்கப் பயன்படுத்தலாம்.
  • மற்றவர்கள் வீட்டைப் பற்றிப் பேசும் போது house என்று சொல்ல வேண்டும்
  • Example:
    1. "நான் அவளுடைய வீட்டுக்கு போனேன்" என்று சொல்லI went to her house என்று சொல்லலாம்.I went to her home என்று சொல்லக் கூடாது.
    2. "அவள் என்னுடைய வீட்டுக்கு வந்தாள்' என்று சொல்ல she came to my house என்று சொல்ல வேண்டும்.
Home:
  • house என்பதை வெறும் வீட்டைக்குறிக்கவும் அடுத்தவருடைய வீட்டைப்பற்றி சொல்லவும் பயன்படுத்துகிறோம்.
  • home என்பது ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசிக்கும் வீட்டைக் குறிப்பிட உதவும்.
  • home வார்த்தையை use பண்ணும் போது அதன் முன் my,our,his,her போன்ற pronouns use  பண்ணக்கூடாது.அதே போல் homeக்கு முன்னால் to என்ற வார்த்தை use பண்ணக்கூடாது
  • Example:
    1. "அவள் வீட்டிற்க்கு போனாள்" என்று சொல்ல She went home என்று சொன்னால் போதும் . She went to home என்று சொல்லக் கூடாது.
    2. "நான் என்னுடைய வீட்டுக்கு போனேன் என்று சொல்ல I went home  என்று சொல்ல வேண்டும். I went to home (or) I went to my home என்று சொல்லக் கூடாது.
  • "வீட்டில்" என்று சொல்ல at home என்று சொல்ல வேண்டும்.
  • Example:
    1. "அவள் வீட்டில் இருக்கிறாள்"  என்று சொல்ல she is at home என்று சொல்ல வேண்டும்.
    2. "அவர் இன்று வேலைக்கு செல்லவில்லை. வீட்டில் தான் இருக்கிறார்"  என்று சொல்ல He didn't go to office today. He is at home 
    3. வீட்டில் எல்லோரும் நலமா? என்றுக் கேட்க How is everybody at home? என்று கேட்கலாம்.
Residence: 
  • அலுவலகம்  தொடர்பான விஷயங்களில் வீட்டைப் பற்றிக் குறிப்பிடும் போது Residence என்று சொல்ல வேண்டும்.
  • Example:
    1. Residence Phone number வீட்டு தொலைபேசி எண்
    2. Residence Address வீட்டு முகவரி
    3. உங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவரை வீட்டிற்க்கு அழைப்பதற்கு Please come to my residence என்று சொல்லலாம்.

Wednesday, 2 February 2011

Daily Tips(டிப்ஸ்)-Wake up



Wakeup

  • தூக்கத்திலிருந்து எழுப்பு என்று சொல்ல Wake up என்று சொல்ல வேண்டும்.
  • அவனை எழுப்பு என்று சொல்ல wake up him என்று சொல்லக்கூடாது. Wake him up என்று தான் சொல்ல வேண்டும்.
  • இதே போல் அவர்களை எழுப்பு என்று சொல்ல wake them up என்றும், என்னை எழுப்பு என்று சொல்ல wake me up என்றும், அவளை எழுப்பு என்று சொல்ல wake her up என்றும் சொல்ல வேண்டும்.
Example: 
  1. என்னை 8 மணிக்கு எழுப்பு.
    Wake me up at 8'o clock
  2. நான் அவனை 6 மணியிலிருந்து எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.
    I have been trying to wake him up since 6'0 clock
  3. என்னை அதிகாலையில் எழுப்பி விடு.
    Wake me up early in the morning.
  4. நீ எப்பொழுது எழுந்திருக்கிறாய்?
    When do you wakeup?
  5. அவனை எழுப்புங்கள்.
    Please wake him up

Wednesday, 10 November 2010

Daily Tips-12( வேலை பற்றி பேச)

  1. நீ இப்பொழுது ஏதாவது வேலை செய்கிறாயா? அல்லது என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய் எனக் கேட்க கீழ்க்கண்டவற்றில் எதேனும் ஒன்றைக் கேட்கலாம்
    1. What are you doing now?
    2. Are you working anywhere?
    3. Are you employed?
    4. What do you do?
    5. What do you do for living?
    6. What sort of work do you do?
    7. What line of work are you in?
  2. யாராவது உங்களிடம் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எனக்கேட்டால் கீழே உள்ளவற்றில் உங்களுக்கு பொருத்தமான பதிலைச் சொல்லலாம்.
    1. நான் ஆசிரியராக இருக்கிறேன் எனச் சொல்ல  I am a teacher என்று சொல்லலாம். இதே போல் படித்துக் கொண்டிருக்கிறேன்
      என்று பொதுவாக சொல்ல I am a student  என்று சொல்லலாம், lawer எனச் சொல்ல  I am a lawer என்று சொல்லலாம்.
    2. I work as a programmer
    3. I work in television/sales/IT
    4. I work with computers (or) I work with children
    5. வேலைப்பார்க்கும் company name சொல்ல I am working in HCL என்று சொல்லலாம்.
    6.  MBA படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல I am doing MBA என்று சொல்லலாம்.
    7.  நான் painter ஆக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன் எனச் சொல்ல I am undergoing training as a painter என்று சொல்லலாம்.
    8.  நான் வியாபாரம் செய்கிறேன் எனச் சொல்ல I am doing business என்றும், என்னுடைய குடும்ப தொழிலை செய்கிறேன் எனச் சொல்ல I am looking after my family business  என்று சொல்லலாம்.
    9.  I have got a part-time job.
    10. I do some voluntary work
    11. எனக்கு வேலை இல்லை என்று சொல்ல
      I am unemployed
      I am out of work
      I am not working at the moment
      Iam retired என்று சொல்லலாம்
    12.  என்னுடைய வேலை பறிபோய் விட்டது என்று சொல்ல I have been made redundant (or) I have been redundant three months ago என்று சொல்லலாம்.
    13.  I am a house wife
    14. I stay at home and look after the children.
      வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல I am in search of a job அல்லது I am hunting for a job என்று சொல்லலாம்.
  3. யாரிடம் வேலை செய்கிறாய்? என்று கேட்க who do you work for? என்று கேட்கலாம்.
    யாராவது உங்களிடம் who do you work for? என்று கேட்டால் நீங்கள் work  பண்ணும் company name சொல்ல I work for cisco/TCS/HCL/CTS என்று சொல்லலாம். நான் யாரிடமும் வேலை செய்யவில்லை சொந்தமாக வேலை செய்கிறேன் என்று சொல்ல
    1. I am self employed
    2. I work for myself
    3. I have my own business
    இவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம்.
  4. நீ இப்பொழுது எங்கே வேலை செய்கிறாய்? என்று கேட்க
    1. Where do you work?
    2. Where are you working?
    என்று கேட்கலாம். இதற்கு பதில் சொல்ல I work in an office/a shop/a bank/a call center இவற்றில் ஏதாவது உங்களுக்கு பொருத்தமானதை சொல்லலாம். நான் வீட்டில் இருந்து வேலை செய்கிறேன் என்று சொல்ல I work from home என்று சொல்லலாம்.

Tuesday, 2 November 2010

Daily Tips-11(நேரம் பற்றி பேச)

நேரம் பற்றி  பேச தேவைப்படும் சில தகவல்கள்.(about time)
  • ஒருவரிடம் Time என்ன என்று கேட்க
    1. What's the time now?
    2. What time is it?
    3. Do you know what time it is?
    4. Have you got the right time?
    என்று கேட்கலாம். 
  • இதையே கொஞ்சம் பணிவாக கேட்க   Could you tell me the time please? என்று கேட்கலாம். அல்லது simple ஆக      Time please?  என்று கேட்கலாம்.
  • ஆங்கிலத்தில் Time சொல்லும் போது முதலில் மணி(hour) அப்புறம் நிமிடங்கள்(minutes) சொல்லி am அல்லது pm சொல்ல வேண்டும். இரவு 12 மணியிலிருந்து பகல் 12 மணி வரை am என்று சொல்ல வேண்டும். பகல் 1 மணியிலிருந்து இரவு 11.59 வரை pm ஆகும்.
    Example:
         10.30am
         2.10 pm
  • Time சொல்லும் போது பெரும்பாலும் use ஆகும் சொற்கள்
    Column1 Column2
    Exactly  மிகச்சரியாக
    about ஏறத்தாழ/கிட்டத்தட்ட
    almost பெரும்பாலும்/சற்றேகுறைய
    just gone இப்பொழுதுதான் கடந்தது
    fast வேகமாகச் செல்கிறது
    slow மெதுவாக செல்கிறது
    Past கடந்த
    To இன்னும் இருக்கிறது
    Quarter கால்மணி நேரம்
    Half அரைமணி நேரம்
    noon/midday நண்பகல்/மதியம்
    midnight நடு இரவில்/நள்ளிரவு


  •  முழு மணிநேரத்தை சொல்லும் போது '0 clock என்பதை சேர்த்து சொல்லலாம்.
    Example: 12 'o clock, 3 'o clock, 10 'o clock
  • ஆங்கிலத்தில் minute முதலிலும் hour இரண்டாவதும் வைத்து time சொல்லலாம்
  • ஆங்கிலத்தில் 'past' என்பதை மணி நேரம் கடந்து 30 நிமிடங்கள் வரை சொல்லலாம். அதாவது மணி இப்பொழுது 10.30 என்று வைத்துக் கொள்வோம் இதை சொல்லும் போது half past ten என்று சொல்ல வேண்டும். 11.15 என்பதை சொல்ல quarter past 11 என்று சொல்லலாம்.
  • ஆங்கிலத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் சொல்ல to என்பதை பயன்படுத்தி இனி வரப்போகும் மணி நேரத்தை சொல்லலாம். அதாவது மணி இப்பொழுது 10.45 என்று வைத்துக் கொள்வோம் இதை சொல்லும் போது 15 minutes to 11 என்று சொல்லலாம் அல்லது quarter to 11  என்று சொல்லலாம். 2.40 என்பதை சொல்ல twenty to 3 என்று சொல்லலாம்.


Rule
1. 01 முதல் 30 நிமிடங்களை சொல்லும் போது முடிவடைந்த மணி நேரம் மற்றும் past use பண்ண வேண்டும்
2. 31 முதல் 59 நிமிடங்களை சொல்லும் போது வரப்போகும் மணி நேரம் மற்றும் to use பண்ண வேண்டும்
இந்த படத்தை நினைவு வைத்துக்கொள்ளவும்

நினைவில் வைத்துக் கொள்ளவும்
  • நாம் time சொல்லும் போது காலை முதல் 12 மணி வரை morning, 12 மணி முதல் 5 மணி வரை afternoon 5 மணிக்கு பிறகு 9 மணி வரை
     evening அதன் பிறகு night.
  • ஆங்கிலத்தில் காலையில் என்று சொல்ல in the morning, மதியத்தில் என்று சொல்ல in the afternoon, மாலையில் என்று சொல்ல in the evening, இரவில் என்று சொல்ல at night  என்றும் சொல்ல வேண்டும்.
Some Example:
  1. 10.30 am
    half past 10 (or) 10.30 in the morning
  2. 11.15 pm
    quarter past 11 (or) 11.15 in the afternoon
  3. 9.45 pm
    quarter to 10 (or) at night 9.45
  4. 4.25 pm
    25 past 4 (or) 4.25 in the evening
  5. 7.55 am
    5 to 8 (or) 7.55 in the morning
  6. 8.10 pm
    10 past 8 (or) in the evening 8.10
  7. 3.28 pm
    28 past 3 (or) about/around half past 3
  8. 5pm
    5 o'clock
  9. quarter past one
    1.15
  10. half past two
    2.30
  11. quarter to two
    1.45
  12. five past one
    1.05
  13. ten past one
    1.10
  14. twenty to two
    1.40
  15. ten fifteen
    10.15
Questions Related with time
  1. What time do you usually wakeup?
  2. What time do you usually getup?
  3. What time do you usually start work?
  4. What time do you usually have lunch?
  5. What time do you usually have dinner
  6. What time do you usually go to bed?
  7. What time do you usually go to sleep?

Friday, 29 October 2010

Daily Tips-10(நாட்கள் பற்றி பேச)

             பேசும் போது சில நேரம் நாட்களை பற்றி குறிப்பிட வேண்டும். அதற்கு தேவைப்படும் சில தகவல்கள்.
 


The day before yesterday நேற்றைக்கு முந்தினநாள்
yesterday நேற்று
today இன்று
tomorrow நாளை
the day after tomorrow நாளை மறுநாள்
last night நேற்று இரவு
tonight இன்று இரவு
tomorrow night நாளை இரவு
in the morning காலையில்
in the afternoon மதியத்தில்
in the evening மாலையில்
yesterday  morning நேற்று காலையில்
yesterday afternoon நேற்று மதியத்தில்
yesterday evening நேற்று மாலையில்
this morning இன்று காலையில்
this afternoon இன்று மதியத்தில்
this evening இன்று மாலையில்
tomorrow morning நாளை காலையில்
tomorrow afternoon நாளை மதியத்தில்
tomorrow evening நாளை மாலையில்
last week போன வாரம்
last month போன மாதம்
last year போன வருடம்.
this week இந்த வாரம்
this month இந்த மாதம்
this year இந்த வருடம்
next week அடுத்த வாரம்
next month அடுத்த மாதம்
next year அடுத்த வருடம்.
now இப்பொழுது
then பிறகு/அப்பொழுது
immediately(or) Straight away உடனே
soon சீக்கிரம்
earlier முன்னாடி
later பிறகு
five minutes ago 5 நிமிடங்கள் முன்பு
an hour ago ஒரு மணி நேரம் முன்பு
a week ago ஒரு வாரம் முன்பு
two weeks ago இரு வாரம் முன்பு
a month ago ஒரு மாதம் முன்பு
a year ago ஒரு வருடம் முன்பு
a long time ago ரொம்ப நாள் முன்பு
in ten minutes time (or) in ten minutes பத்து நிமிடங்களில்
in an hours time (or)in an hour ஒரு மணி நேரத்தில்
in a week's time(or)in a week ஒரு வாரத்தில்
in ten day's time (or) in ten days பத்து நாட்களில்
in three week's time (or) in three weeks மூன்று வாரங்களில்
in two months time(or)in two months இரண்டு மாதங்களில்
in ten years time (or) in ten years பத்து வருடங்களில்
the previous day முந்தின நாள்(அதற்கு முன் நாள்)
the previous week முந்தின வாரம்
the previous month போன மாதம்
the previous year போன வருடம்
the following day தொடர்ந்து வருகிற நாள்
the following  week தொடர்ந்து வருகிற வாரம்
the following month தொடர்ந்து வருகிற மாதம்
the following year தொடர்ந்து வருகிற வருடம்
every day (or)daily தினமும்/எல்லா நாளூம்
every week (or) weekly எல்லா வாரமும்/வாரம்தோறும்
every month (or) monthly எல்லா மாதமும்
every year(or) yearly எல்லா வருடமும்/வருடம்தோறும்
never ஒருபோதும் இல்லை
rarely அரிதாக
occasionally அவ்வப்போது
sometimes சிலநேரம்/சில வேளையில்
often (or) frequently அடிக்கடி/பல முறை/பல தடவை
usually (or) normally வழக்கமாய்/சாதாரணமாய்
always எப்பொழுதும்/இடைவிடாது
Note:
1.கால இடைவெளிகளை சொல்ல ஆங்கிலத்தில் for என்ற சொல் use ஆகிறது
Example:
  1. I lived in london for 8 months(நான் londonல் 8 மாதங்கள் இருந்தேன்.)
  2. I have worked here for 2 years.(நான் இங்கு 2 வருடங்கள் வேலை பார்த்தேன்)
  3. I am going to dubai tomorrow for 2 weeks  (நான் நாளை துபாய்க்கு 2 வாரங்கள் செல்கிறேன்.)
  4. We went to swimming for a long time.(நாங்கள் ரொம்ப நேரம் swimming போயிருந்தோம்)

Monday, 25 October 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-9

நண்பரிடம் அவரைப் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றி விசாரிப்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
  1. உன்னுடைய Parents என்ன செய்கிறார்கள் எனக் கேட்க What do your parents do? என்று கேட்கலாம். உன்னுடைய அப்பா என்ன செய்கிறார் அல்லது அம்மா என்ன செய்கிறார் என தனிதனியாக கேட்க விரும்பினால் What does your father do? What does your mother do? என்று கேட்கலாம்.
  2. உன்னுடைய Parents  எப்படி இருக்கிறார்கள் என்று கேட்க How are your parents? என்று கேட்கலாம். உன்னுடைய அப்பா/அம்மா  எப்படி இருக்கிறார்கள் என்று கேட்க How is your dad/mom? என்று கேட்கலாம்.வீட்டில் எல்லோரும் நலமா? என்றுக் கேட்க How is everybody at home? என்று கேட்கலாம். எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்று சொல்ல All are fine என்று சொல்லலாம்.
  3. உன்னுடைய parents எங்கே வசிக்கிறார்கள் எனக் கேட்க  Where do your parents live? என்று கேட்கலாம்
  4. உன்னுடைய தாத்தா,பாட்டி இன்னும் இருக்கிறார்களா எனக் கேட்க Are your grand parents still alive? என்று கேட்கலாம்
  5. உனக்கு அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை இருக்கிறார்களா எனக்கேட்க Do you have any brothers or sisters?  என்று கேட்கலாம்.
    1. எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் எனச் சொல்ல Yes, I have got a brother (or)  Yes I have got an elder brother என்று சொல்லலாம்.
    2. எனக்கு ஒரு தம்பி இருக்கிறார் எனச் சொல்ல Yes, I have got a younger brother என்று சொல்லலாம்.
    3. இதே போல் அக்கா இருக்கிறார் எனச் சொல்ல Yes,I have got an elder sister என்றும் தங்கை இருக்கிறார் எனச் சொல்ல Yes,I have got a younger sister என்றும் சொல்லலாம்
    4. என் கூட பிறந்தது 2 பெண்கள் என்று சொல்ல  Yes,I have got two sisters என்றும்  2 பசங்க என்று சொல்ல Yes,I have got two brothers என்றும் சொல்லலாம்.
    5. இல்லை நான் கருவேப்பிலை கொத்து மாதிரி வீட்டிற்கு ஒரே பிள்ளை என்று சொல்ல No,I am an only child எனச்சொல்லலாம்.
    1. உனக்கு திருமணம் ஆகவில்லையா எனக் கேட்க Are you single? என்று கேட்கலாம்.
    2. உனக்கு boy friend/girl friendஇருக்கிறாரா எனக்கேட்க Do you have a boy friend/girl friend? என்று கேட்கலாம்
    3. உனக்கு திருமணம் ஆகிவிட்டதா எனக்கேட்க Are you married? என்று கேட்கலாம்.
    4. யாராவது உனக்கு திருமணம் ஆகிவிட்டதா எனக்கேட்டால் ஆமாம் என்று சொல்ல  Yes, I am married எனச் சொல்லலாம்.
    5. எனக்கு நிச்சயம் ஆகிவிட்டது என்று சொல்ல I am engaged என்று சொல்லலாம்
  6. உனக்கு குழந்தை இருக்கிறதா எனக்கேட்க கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றைக் கேட்கலாம்
    1. Do you have any children?
    2. Have you got any kids?
  7. யாராவது உங்களிடம் உனக்கு குழந்தை இருக்கிறதா? எனக்கேட்டால்
    1. எனக்கு 2 குழந்தைகள் என்று சொல்ல Yes,I have two children
    2. ஒரு பொண்ணும் பையனும் என்று சொல்ல Yes I have got a boy and a girl.
    3. குழந்தை இல்லை என்று சொல்ல I dont have any children  என்று சொல்லலாம்

Tuesday, 12 October 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-8

இன்றைய Tips ல் புதிதாக சந்திக்கும் நபரிடம் அவர் எங்கிருந்து வருகிறார், எங்கு வசிக்கிறார்,யாருடன் இருக்கிறார், அவருடைய contact details கேட்பது பற்றி பார்க்கலாம்.
  1. நீங்கள் யாரிடமாவது அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்க அதாவது அவர்களுடைய native place பற்றி கேட்க கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை கேட்கலாம்.
    1. Where are you from?
    2. Where do you come from?
    3. Whereabouts are you from?
    யாராவது உங்களிடம் Where are you from? என்று கேட்டால் I am from India. (or) I am from Nagercoil என்று நீங்கள் எங்கிருந்து வருகிறீர்களோ அதைச் சொல்லவும்
  2. நீங்கள் ஒருவரிடம் Where are you from? என்று கேட்டு அவர் I am from America. என்று சொல்கிறார். America  வில் எங்கே என்று கேட்க கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை கேட்கலாம்.
    1. What part of America do you come from?
    2. Whereabouts in America are you from?
  3. நீங்கள் இப்பொழுது எங்கே வசிக்கிறீர்கள் எனக் கேட்க Where do you live? என்று கேட்கலாம் யாராவது உங்களிடம் Where do you live? என்று கேட்டால் நீங்கள் தற்பொழுது வசிக்குமிடத்தை கீழே உள்ள முறைகளில் சொல்லலாம்

    1. I live in London.
    2. I live in Oxford near London
    3. I am originally from India now live in London
    4. I was born in India but grew up in England
  4. நீங்கள் யாருடன் வசிக்கிறீர்கள் என்று கேட்க கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை கேட்கலாம்.
    1. Who do you live with?.
    2. Do you live with anybody?
    நான் கணவருடன் இருக்கிறேன் என்று சொல்ல  I live with my husband அல்லது பெற்றோருடன் இருக்கிறேன் என்று சொல்ல I live with my parents அல்லது friends கூட இருக்கிறேன் என்று சொல்ல I live with my friends என்று சொல்லலாம். தனியாக வசிக்கிறேன் என்று சொல்ல I live on my own.என்று சொல்லலாம்
  5. நீங்கள் தனியாகவா வசிக்கிறீர்கள் என்று கேட்க Do you live on your own?  என்று கேட்கலாம். யாராவது Do you live on your own? என்று உங்களிடம் கேட்டால்
    1. தனியாக இருக்கிறேன் என்று சொல்ல I live on my own
    2. இன்னொருவருடன் share பண்ணி இருக்கிறேன் என்று சொல்ல I share with one other person
    3. >இன்னும் 3 பேருடன் share பண்ணி இருக்கிறேன் என்று சொல்ல I share with three others
  6. யாரிடமாவது phone number அல்லது address கேட்க What's your phone number?/What's your address? என்று கேட்கலாம். இதையே பணிவாக கேட்க Could I take your phone number?/Could I take your address? என்று கேட்கலாம்

Sunday, 10 October 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-7


  1. உங்கள் friend அல்லது wife/husband  கூட இருக்கும் போது யாரிடமாவது Introduce  ஆக வேண்டி இருந்தால் I am sunitha என்று உங்கள் பெயர் சொல்லி Introduce ஆகி விட்டு This is Prem, My friend அல்லது This is Prem,My husband என்று சொல்லி அவர்களையும் Introduce பண்ணி வைக்கவும்.

  2. உங்கள் எதிலிருப்பவர் சொன்ன பெயர் ஒருவேளை உங்களுக்கு கேட்கவில்லை என்றால் I am sorry, I didn't catch your name என்று சொல்லுங்கள். உங்களிடம் யாராவது இப்படி சொன்னால் அவருக்கு புரியும்படி உங்கள் பெயரை நிறுத்தி நிதானாமாக சொல்லவும்.

  3. நீங்கள் உங்கள் நண்பரையோ அல்லது உங்கள் உறவினரையோ இன்னொருவருக்கு அறிமுகப்படுத்தும் போது அவர்கள்  இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருந்தால் அவர்களிடம் உங்களுக்கு ஏற்கனவே ஒருவரை ஒருவர் தெரியுமா எனக்கேட்க Do you know each other? எனக்கேளுங்கள்.

  4. அவர்கள் தெரியும் எனச்சொன்னால் உங்களுக்கு ஒருவரை ஒருவர் எப்படி தெரியும் எனக்கேட்க How do you know each other? எனக்கேட்கலாம்.

  5. உங்களிடம் ஒருவர் உங்களுடன் படித்த ஒருவரை தெரியுமா எனக் கேட்டால் Ya, We know each other. We were at school together என்று சொல்லலாம். உங்களுடன் வேலை பார்க்கும் ஒருவரை தெரியுமா எனக்கேட்டால்  Ya. We work together. அல்லது We used to work together எனச்சொல்லலாம். நண்பர்கள் மூலமாக தெரியும் எனச்சொல்ல We know each other through friends எனச்சொல்லலாம்.

    Person1 Person2 & Person 3
    My name is Charli I am Sunitha. This is Prem, My husband

    I am Sunitha. This is Prem, My friend
    I am sorry, I didn't catch your name
    Do you know each other? Ya we know each other
    How do you know each other? We work together 

    We used to work together

    We were at school/college together

    We travelled together

    through friends
    Nice to meet you
    Pleased to meet you

Tuesday, 5 October 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-6




  1. நீங்கள் யாருடைய கவனத்தையாவது திருப்ப வேண்டும் என்றால் பேசுவதற்கு முன் Excuseme என்று சொல்லி பேச ஆரம்பிக்கவும்.



  2. யாராவது உங்களிடம் மன்னிப்புக் கேட்க Sorry என்று சொன்னால் நீங்கள் 
    1. No problem
    2. Its Ok அல்லது Thats Ok
    3. Dont worry about it
    இதில் எதாவது ஒன்றை சொல்லலாம்.



  3. யாரிடமாவது நீங்கள் English பேசுவீர்களா எனக் கேட்க Do you speak English? எனக் கேட்கலாம்.



  4. யாராவது உங்களிடம் Do you speak English? எனக் கேட்டால் உங்களுக்கு கொஞ்சம் தான் தெரியும் எனசொல்ல
    1. I don't speak much English (or) I dont speak fluent English
    2. I only speak very little English
    3. I speak a little English
    இதில் ஏதாவது ஒன்றை சொல்லலாம்.



  5. யாராவது பேசுவது உங்களுக்கு புரியவில்லை என்றால் I don't understand என்று சொல்லலாம்.
    அவரிடம் நிறுத்தி நிதானமாக பேச சொல்ல Please speak more slowly எனச் சொல்லலாம்.
    அவர் பேசுவது உங்களுக்கு சுத்தமாக புரியவில்லை என்றால் அவரிடம் Please write it down என்று எழுதி கேட்கலாம்.
    அல்லது அவரை திரும்ப பேச சொல்ல Could you please repeat that? என்று சொல்லலாம்.
Today's Lesson
Column1 Column2
1 Excuseme
2 Sorry
3 No Problem
4 Its Ok / Thats Ok
5 Dont worry about that
6 Do you speak English?
7 I dont speak much English
8 I only speak very little English
9 I speak a little English
10 I dont understand
11 Please speak more slowly
12 Please write it down
13 Could you please repeat that?
Today's Thought: ____________________________________________________________________________

Effort is important, but knowing where to make an effort makes all the difference ___________________________________________________________________________