Monday, 14 February 2011

Study English every Day-14/02/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.

  1. அங்கே இருப்பது யார்?
    Who is there?
  2. இது உன் பென்சில் அது என் பென்சில்.
    This is your pencil. That is mine.
  3. இதனால் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.
    It doesn't matter to me.
  4. இது என் முறை இல்லை
    It is not my turn.
  5. ரொம்ப மழை பெய்கிறது
    It is raining heavily
  6. இதனால் ஒன்றும் மாறாது.
    It doesn't make any difference
  7. உங்களால் எனக்கு ஒரு பேனாவோ பென்சிலோ கொடுக்க முடியுமா?
    Will you please give me either a pen or a pencil?
  8. இப்பொழுது என்ன செய்ய முடியும்?
    What can be done now?
  9. நான் ஆடுவதை நிறுத்தி விட்டேன்
    I have given up dancing
  10. என்னுடைய இரண்டு கால்களும் காயமடைந்து உள்ளன‌
    Both of my legs have been injured.
Try Yourself: 
         கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
  1. மேஜையின் மீது இரண்டு புத்தகங்கள் இருந்தன.
  2. கூடையில் 10 ஆப்பிள்கள் உள்ளன.
  3. நான் இப்புத்தகத்தில் மூன்றில் இரண்டு பாகம் படித்து விட்டேன்.
  4. எங்கேனும் சென்று கொண்டிருக்கிறாயா?
  5. யாராவது வந்திருக்கிறார்களா?
  6. ஆம். உங்களுக்காக யாரோ காத்திருக்கிறார்கள்.
  7. இங்கே யாரும் வரவில்லை.
  8. அவன் அடிக்கடி என்னை சந்திக்க வருகிறான்
  9. அவன் வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களை கண்டிருக்கிறார்.
  10.   வாருங்கள் பஸ்ஸில் போகலாம்

3 comments: