Wednesday, 15 September 2010

ஆங்கில Vocabulary பயிற்சி-1 (Vocabulary related with family and Marriage)

           ஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் சேர்ந்து தான் sentence /conversation ஆகிறது. இந்த பயிற்சியில் நாம் ஆங்கிலத்தில் தங்கு தடையின்றி பேசுவதற்கு தேவையான வார்த்தைகள் படிக்க இருக்கிறோம். இதில் பல உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவையாக இருக்கலாம். தெரிந்தது எனினும் ஒரு முறை படித்து கொள்ளவும்.
            இன்றைய பயிற்சியில் குடும்பத்தில், உறவுகளில் உள்ளவர்களை எவ்வாறு ஆங்கிலத்தில் அழைப்பது,உறவு முறைகளை எவ்வாறு ஆங்கிலத்தில் சொல்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
 

Vocabulary related with the family
Fatherஅப்பா
Motherஅம்மா
Sonமகன்
Daughterமகள்
Parentபெற்றோர்
Childகுழந்தை
Husbandகணவர்
Wifeமனைவி
Brotherசகோதரன்
Sisterசகோதரி
Uncleமாமா/சித்தப்பா
Auntyமாமி/அத்தை/சித்தி
Nephewஉடன்பிறந்தார் மகன்( சகோதரன்/சகோதரி மகன்)
Nieceஉடன்பிறந்தார் மகள்( சகோதரன்/சகோதரி மகள்) 
Relationசொந்தம்/உறவு
Relativeசொந்தக்காரங்க
Twinஇரட்டைக் குழந்தைகளுள் ஒன்று
Grandfather/Granddad/Grandpaதாத்தா
Grandmother/Granny/Grandmaபாட்டி
Grandparentபெற்றோரைப் பெற்றவர்
Grandsonபேரன்
Grand daughterபேத்தி
Grand childபேரக்குழந்தைகள்
Cousinஅத்தை/மாமா/சித்தப்பா/பெரியப்பா குழந்தைகள்
God fatherஞானத்தகப்பன்
Godmohterஞானத்தாய்
Stepfatherதாயின் கணவன்
Stepmotherதந்தையின் மனைவி/மாற்றாந்தாய்
Stepsonகணவன்/மனைவியின் மகன்
Stepdaughterகணவன்/மனைவியின் மகள்
Stepbrother/half-brotherமாற்றாந்தந்தை/மாற்றாந்தாயின் மகன் 
Stepsister/half-sisterமாற்றாந்தந்தை/மாற்றாந்தாயின் மகள்

 
Vocabulary related with the marriage
Singleதிருமணமாகாதவர்
Engagedநிச்சயம் செய்யபட்ட
Marriedதிருமணம் ஆன
Separetedபிரிந்து தனிதனியாக வாழ்பவர்
Divorsedவிவாகரத்தான
Marriage/Weddingதிருமணம்
Brideமணமகள்
Bridegroomமணமகன்
Fianceநிச்சையிக்கப்பட்ட ஆண்
Fianceeநிச்சையிக்கப்பட்ட பெண்
Boyfriendகாதலிக்கும் பையன்
Girlfriendகாதலிக்கும் பெண்
Mother-in-lawமாமியார்
Father-in-lawமாமனார்
Son-in-lawமருமகன்
Daughter-in-lawமருமகள்
Sister-in-lawநாத்தனார்
Brother-in-lawகணவன்/மனைவியின் அண்ணன்/தம்பி
Adoptedதத்து எடுத்த
Widowவிதவை
Widowerமனைவியை இழந்தவர்
Infantபிறந்த குழந்தை/7 வயதுக்கு உட்பட்ட குழந்தை
Toddlerதளிர்நடை நடக்கும் குழந்தை
Note: 
  1. Grandfather என்பதை சுருக்கி Grand'pa எனவும், Grandmother என்பதை சுருக்கி Grand'ma எனவும் கூறலாம்.
  2. Father என்பதற்கு dad அல்லது daddy எனவும், Mother என்பதற்கு mom அல்லது mummy எனவும் கூறலாம்.
  3. ஆங்கிலத்தில் சித்தப்பா,பெரியப்பா,மாமா என்ற எல்லா ஆண் உறவையும் Uncle என்று தான் கூப்பிட வேண்டும். அது போல சித்தி, பெரியம்மா, அத்தை, மாமி என்ற எல்லா பெண் உறவையும் Aunt அல்லது Aunty  என்று  கூப்பிட வேண்டும். 
  4. எந்த ஆணையும் மரியாதையுடன் அழைக்க Sir என்றும், பெண்ணை மரியாதையுடன் அழைக்க Madam அல்லது Mam என்றும் சொல்ல வேண்டும்.
  5. தாயின் உடன்பிறந்தவர்களுடைய குழந்தைகள் மற்றும் தந்தையின் உடன்பிறந்தவர்களுடைய குழந்தைகளை Cousin என்று தான் சொல்ல வேண்டும். Cousin brother அல்லது Cousin sister என்று கண்டிப்பாக சொல்லக்கூடாது.
  6. Husband ஐ Hubby என்றும் சொல்லலாம்.

14 comments:

  1. For today's class: Present!!!

    ReplyDelete
  2. சூப்பர்,அனைவரும் புரிந்துகொள்ளும்படி தெளிவாகவும் எளிமையாகவும் பயனுள்ளதாக இருக்கிறது..
    தொடரட்டும் உங்கள் பணி...
    பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. இன்றைய வகுப்புக்க வந்தேனய்யா புக்மார்க் செஞ்சேன் ஐயா..

    ReplyDelete
  4. வகுப்புக்கு வந்த சித்ரா,மாணவன்,சுதா அனைவருக்கும் நன்றி. வாலுத்தனம் பண்ணாம good students ஆ இருக்கணும்

    ReplyDelete
  5. Superb..........visit http://hari11888.blogspot.com

    ReplyDelete
  6. இந்த மாதிரி ஒரு வலைதளத்தைதான் தேடிகிட்டு இருந்தேன் .பயனுள்ள ப்ளாக் நன்றி

    ReplyDelete
  7. மிகவும் நன்றி PalaniWorld

    ReplyDelete
  8. 'Vocabulary related with the marriage',
    'Vocabulary related with marriage'
    இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
    இதில் எது சரி.

    ReplyDelete
  9. எமன் vocabulary in english??

    ReplyDelete
  10. Good and continue your services which may help many

    ReplyDelete
  11. எனது குழந்தை என் மாமா குழந்தைகளை எப்படி கூப்பிடுவது... உறவு முறை

    ReplyDelete
  12. தம்பியின் மனைவியை எப்படி அழைப்பது

    ReplyDelete