Saturday 27 November 2010

Simple Future Tense(வருங்காலம்)-II

Positive  வாக்கியங்களை negative ஆக மாற்ற :
  • Simple present and simple past tense வாக்கியங்களை negative ஆக மாற்ற not மற்றும் helping verb(do,does,did) ஐப் பயன்படுத்தினோம் simple future tense வாக்கியங்களை negative ஆக மாற்ற not மட்டும் சேர்த்தால் போதும்.
  • Example :அவள் வாங்குவாள் (she will buy) என்பதை அவள் வாங்க மாட்டாள் என negative ஆக சொல்ல not சேர்த்து she will not buy என்று சொன்னால் போதும்
  • will மற்றும் not என்பதை பேசும்போது won't என்று சுறுக்கமாக சொல்லலாம்.shall மற்றும் not சேர்த்து சுறுக்கமாக shan't சொல்லலாம்.ஆனால் பேசும் போது பொதுவாக shan't use பண்ணுவது இல்லை
  • positive Negative
    நான் வாங்குவேன்(I will buy) நான் வாங்க மாட்டேன்(I will not buy/I won't buy)
    நாங்கள் வாங்குவோம்(We will buy) நாங்கள் வாங்கமாட்டோம்.(We wont buy)
    அவள் வாங்குவாள்(She will buy) அவள் வாங்கமாட்டாள்(she won't buy)
    அவன் வாங்குவான்(He will buy) அவன் வாங்கமாட்டான். (He won't buy)
    அவர்கள் வாங்குவார்கள் (They will buy) அவர்கள் வாங்கமாட்டார்கள். (They won't buy)
    நாளைக்கு நான் வருவேன்.(I will come tomorrow) நாளைக்கு நான் வரமாட்டேன். (I won't come tomorrow)
Simple future வாக்கியங்களை Questions ஆக மாற்ற : 
1.yes/no question type:
  • சில கேள்விகளுக்கு பதில் Yes அல்லது No என்று வர வேண்டும். அந்த மாதிரி கேள்விகளை Yes/No type question என்கிறோம்.
  • இனிமேல் செய்யப்போகும் செயல்களை questions ஆக கேட்க will/shall ஐ முதலிலும் அதன் பிறகு subject ஐயும்  அதன் பிறகு verb ஐயும் சேர்த்தால் கிடைக்கும்.

    Will/Shall+subject(I,we,you,they,it,he,she)+verb
  • அவள் வாங்குவாள்(she will buy), அவள் வாங்கமாட்டாள்(she won't buy) அவள் வாங்குவாளா? என்று கேட்க Will she buy? என்று கேட்கலாம்.
  •  Some More examples:


    அவள் வாங்குவாளா? Will she buy?
    அவன் வாங்குவானா? Will he buy?
    அவன் ஓடுவானா? Will he run?
    அவன் வருவானா? Will he come?
    அவர்கள் வருவார்களா? Will they come?
    அது கடிக்குமா? Will it bite?
2.Permission Questions:
  • Shall  என்ற keyword I மற்றும் we உடன் சேர்ந்து வாக்கியம் அமைக்கும் போது அது permission கேட்கும் கேள்வியாக அமையும்.
  • Example:


    நான் போகலாமா? Shall I go?
    நாம் போகலாமா? Shall we go?/Shall we move?
    நான் படிக்கலாமா? Shall I read?
    இந்த email அனுப்பட்டுமா? Shall I send this email?
    நான் உள்ளே வரலாமா? Shall I come in?
    உன்னுடைய room ஐ பண்னலாமா? Shall I use your room?
3.Information Questions:
  • Information qustion களை கேட்க என்ன,எங்கே,எப்பொழுது, ஏன், யார்,யாரை போன்ற question words தேவைப்படும்.

  • question word+Will/Shall+subject+verb?
     
  • Some example:


    அவன் என்ன வாங்குவான்? What will he buy?
    அவள் எப்பொழுது வருவாள்? When will she come?
    நீ எங்கு வாங்குவாய்? Where will you buy?
    நீ எப்படி போவாய்? How will you go?
    நீ எங்கே தங்குவாய்? Where will you stay?
    நான் எங்கே தங்குவது? Where will I stay?
    நான் எப்பொழுது வரலாம்? When will I come?
    அவர்கள் என்ன நினைப்பார்கள்? What will they think?
    நாம் எங்கே தூங்குவது? Where will we sleep?

Friday 26 November 2010

Simple Future Tense(வருங்காலம்)

  • இனி மேல் நடக்கப்போகும் செயல்களைச் சொல்ல Simple future tense பயன்படுகிறது.
  • Example:
    நான் நாளை ஊருக்கு போகிறேன். இதில் போவது என்ற செயல் இன்னும் நடைபெறவில்லை நாளை தான் நடக்கும்.இதே போல் இனிமேல் நடைபெற போகும் செயல்களைச் சொல்ல Simple future tense பயன்படுத்த வேண்டும்.
Simple future tense வாக்கியங்களை அமைக்க:
                 நான் ஒரு laptop வாங்குகிறேன் ( நிகழ்காலம்) I buy a laptop
                 நான் ஒரு laptop வாங்கினேன்(கடந்த காலம்) I bought a laptop
   நான் ஒரு laptop வாங்குவேன் என்று சொல்ல என்ன வினைச்சொல் பயன்படுத்த வேண்டும்?.
  • Simple future tense வாக்கியங்களை அமைக்க present tense form of verb use பண்னால் போதும் ஆனால் அதனுடன் will அல்லது shall என்ற keword use பண்ன வேண்டும்.

    Will/Shall+present tense verb
  • Shall என்பது I மற்றும் we  என்பதுடன் மட்டும் சேரும் .Will என்பது you,they,it,he  மற்றும் she போன்றவற்றுடன் சேரும். 
    Subject
    I/We Shall
    You will
    they will
    it will
    he  will
    she will
    so நான் ஒரு laptop வாங்குவேன் என்று சொல்ல I shall buy a laptop என்று சொல்ல வேண்டும.
  • ஆனால் தற்போது நடைமுறையில் I மற்றும் we உடன் will சேர்த்து பேசப்படுகிறது. எனவே I shall buy a laptop என்றும் I will buy a laptop என்றும் கூறலாம்.
சில Simple future tense வாக்கியங்கள: 
 


நான் பார்ப்பேன் I shall see/I will see
நாங்கள் பார்ப்போம் We shall see/We will see
நீ பார்ப்பாய் You will see
அவன் பார்ப்பான் He will see
அவள் பார்ப்பாள் She will see
அவர்கள் பார்ப்பார்கள் They will see
நான் போவேன் I shall go/I will go
நாங்கள் போவோம் We shall g/We will go
நீ போவாய் You will go
நான் வாங்குவேன் I shall buy/I will buy
நாங்கள் வாங்குவோம் We shall buy/We will buy
நீ வாங்குவாய் You will buy
நான் வருவேன் I will come/I shall come 
நான் காத்திருப்பேன் I will wait/I shall wait
நினைவில் வைத்துக்கொள்ளவும்:
  • எதிர்காலத்தில் நடக்கப்போகும் உண்மைகள், மாறுபடாத இவற்றைச் சொல்லும் போது simple present tense use பண்ண வேண்டும்.(To talk about facts in the future or plans that will not change use the simple present tense)
  • Example:
    1. Tomorrow is Sunday 
    2. Summer vacation ends on friday.
    3. The new library opens next week.
    4. We fly to London on Monday.
Going to +Verb 
  • எதிர்காலத்தில் செய்ய திட்டமிட்ட செயல்கள் மற்றும் செய்யப்போகும் வேலைகள் போன்றவற்றை சொல்லும் போது going to மற்றும் verb சேர்த்து சொல்லலாம்.
  • Example:
    1. I am going to visit the temple tomorrow.
    2. I am going to see the new movie next week
    3. My friend is going to move to london next year.
    4. Dad is going to buy a new cycle.
    5. My sister is going to have another baby soon
    6. It is going to be rain tomorrow
    7. I hope someone is going to fix the problem soon
    8. You are going to help me, aren't you?
    9. My friends are going to teach me how to play chess.
    10. Mom and dad are going to buy a new laptop.
    11. Are you going to read your book now?

Wednesday 24 November 2010

Answers for Test Your English-2(Simple Past Tense விடைகள்)

இந்த பதிவில் Simple past tense நன்கு புரிவதற்க்காக சில பயிற்ச்சிகளை கொடுத்துள்ளேன்.சந்தேகம் இருப்பின் ஒருமுறை பாடங்களை இங்கு சென்று படித்துக் கொள்ளவும்
  1. Complete the sentences with the simple past tense of the verbs in parentheses.
    1. The boys whispered (whisper) secrets to each other.
    2. Uncle Ben hurried (hurry) to catch his bus.
    3. We returned (return) our books to the library.
    4. She kissed (kiss) the frog and it changed (change) into a prince.
    5. Someone taped (tap) me on the shoulder.
    6. The baby cried (cry) when we took her toy away.
    7. John pinned (pin) the badge onto his jacket.
    8. Two doctors rushed (rush) into the room.
    9. This is the house that we lived (live) in when I was younger.
    10. Grandad lowered (lower) himself into the chair.
  2. Write was or were in the blank spaces in the following passage.
        It was a beautiful summer day and there wasn’t a cloud in the sky. Mom, Dad and I were all in the garden. Dad was in the vegetable garden planting some seeds and Mom and I were busy with other jobs. The sun was hot and soon I was feeling very tired. Mom and Dad weren’t tired at all. They went on working for a long time. I was glad when it was time to go inside and have a drink. 
  3. Choose the correct past tense verb in each sentence below.
    1. I  lost (losed / lost) my watch in the park.
    2. Sara hurt (hurt / hurted) his knee when he fell (falled / fell).
    3. I kicked the ball hard and it broke(breaked / broke) a window.
    4. My new shoes cost(cost / costed) a lot of money.
    5. I got(getted / got) this book from the library.
    6. We had a garage where we kept(keeped / kept) our car.
    7. Asha showed (shew / showed) me the cut on her knee.
    8. The glass fell (falled / fell) off the table and broke (breaked / broke).
    9. We sold(selled / sold) our old car and bought (buyed / bought) a new one.
    10. The bell rang(ringed / rang) and we all went (goed / went) to school.
    11. The dog  caught (catched / caught) the ball in its mouth.
    12. The man knelt (kneeled / knelt) down to talk to the little boy.
    13. I  met (meeted / met) my friend in the park.
    14. Our cat ran (runned / ran) onto the road in front of a car.
    15. Nivi  wrote (writed / wrote) a letter to her best friend.

Sunday 21 November 2010

Test your English-2(Simple Past Tense கேள்விகள்)

இந்த பதிவில் Simple past tense நன்கு புரிவதற்க்காக சில பயிற்ச்சிகளை கொடுத்துள்ளேன்.சந்தேகம் இருப்பின் ஒருமுறை பாடங்களை இங்கு சென்று படித்துக் கொள்ளவும்
  1. Complete the sentences with the simple past tense of the verbs in parentheses.
    1. The boys________ (whisper) secrets to each other.
    2. Uncle Ben ________ (hurry) to catch his bus.
    3. We________ (return) our books to the library.
    4. She ________ (kiss) the frog and it ________ (change) into a prince.
    5. Someone ________ (tap) me on the shoulder.
    6. The baby ________ (cry) when we took her toy away.
    7. John ________ (pin) the badge onto his jacket.
    8. Two doctors ________ (rush) into the room.
    9. This is the house that we ________ (live) in when I was younger.
    10. Grandad ________ (lower) himself into the chair.
  2. Write was or were in the blank spaces in the following passage.
        It ________ a beautiful summer’s day and there ________ n’t a cloud in the sky. Mom, Dad and I ________all in the garden. Dad ________ in the vegetable garden planting some seeds and Mom and I ________ busy with other jobs. The sun ________ hot and soon I ________feeling very tired. Mom and Dad ________n’t tired at all. They went on working for a long time. I ________glad when it ________ time to go inside and have a drink. 
  3. Choose the correct past tense verb in each sentence below.
    1. I  ________ (losed / lost) my watch in the park.
    2. Sara ________ (hurt / hurted) his knee when he (falled / fell).
    3. I kicked the ball hard and it ________(breaked / broke) a window.
    4. My new shoes ________(cost / costed) a lot of money.
    5. I ________(getted / got) this book from the library.
    6. We had a garage where we ________(keeped / kept) our car.
    7. Asha  ________ (shew / showed) me the cut on his knee.
    8. The glass ________ (falled / fell) off the table and (breaked / broke).
    9. We ________(selled / sold) our old car and (buyed / bought) a new one.
    10. The bell ________(ringed / rang) and we all (goed / went) into school.
    11. The dog  ________ (catched / caught) the ball in its mouth.
    12. The man  ________ (kneeled / knelt) down to talk to the little boy.
    13. I  ________ (meeted / met) my friend in the park.
    14. Our cat ________(runned / ran) onto the road in front of a car.
    15. Nivi  ________ (writed / wrote) a letter to her best friend.

Thursday 18 November 2010

Simple Past Tense ( கடந்த காலம்)-II

2.Simple Past வாக்கியங்களை Questions ஆக மாற்ற :
1.yes/no question type:
  • சில கேள்விகளுக்கு பதில் Yes அல்லது No என்று வர வேண்டும். அந்த மாதிரி கேள்விகளை Yes/No type question என்கிறோம்.
  • இந்த மாதிரி கடந்த காலத்தில் நடந்து முடிந்த செயல்களை கேள்விகளாக கேட்க Did என்ற helping verb உதவுகிறது. இதில் helping verb subjectக்கு முன்னால் வர வேண்டும்.
  • Example : 
    I went (நான் போனேன்). இதை negative ஆக நான் போகவில்லை என்று சொல்ல I did not(didn't) goஎன்று சொல்ல வேண்டும்
    நான் போனேனா? என்று கேள்வியாக கேட்க Did I go? என்று கேட்க வேண்டும்.இதற்கு பதில் சொல்லும் போது ஆமாம் நான் போயிருந்தேன்(Yes,I went) என்று சொல்லலாம் அல்லது இல்லை நான் போகவில்லை(No, I didn't go) என்று சொல்லலாம்
  • கேள்வியானது past tense ல் இருந்தால் பதிலும் past tense ல் தான் இருக்க வேண்டும்,
    நீ அவளை பார்த்தாயா?(Did you see her?)
    ஆமாம் நான் அவளைப் பார்த்தேன்(yes, I saw her)
  • Some more Example
    1. நேற்று நீ சீக்கிரம் எழுந்தாயா?(Did you get up early yesterday?)
      ஆமாம் நான் சீக்கிரம் எழுந்தேன்.(Yes I got up early)
    2.  நீ இட்லி சாப்பிட்டாயா?(Did you eat idly?)
      ஆமாம்(yes, I did)
    3. இந்த கவிதை நீ எழுதினாயா?(Did you write this poem?)
      நான் இதை எழுதவில்லை. ஆனால் என் தம்பி எழுதினான்.(No, I didn't write it, but my brother did.)
2.Information Question:
  • நான் ஒரு laptop வாங்கினேன் என்று நண்பர் யாராவது சொன்னால் நமக்கு எப்பொழுது வாங்கினாய்?, எங்கு வாங்கினாய்? ஏன் வாங்கினாய்?, எவ்வளவு விலை? என்று கேட்க தோன்றும்.
  • இதைப் போலமேலும் தகவல் சேகரிக்க கேட்கும் கேள்விகளை Information question என்கிறோம்.
  • Information qustion களை கேட்க என்ன,எங்கே,எப்பொழுது, ஏன், யார்,யாரை போன்ற question words தேவைப்படும்.
  • தெரிந்து கொள்ள வேண்டிய வினாச் சொற்கள்(Question words)
    Question words வினாச் சொற்கள்
    What? என்ன?
    When? எப்பொழுது?
    Where? எங்கே?
    Which? எது?
    Why? ஏன்?
    Who? யார்?
    Whom? யாரை?
    How? எப்படி?
    How far? எவ்வளவு தூரம்?
    How long? எவ்வளவு நேரம்?
    How often? எப்பொழுதெல்லாம்?
    How much? எவ்வளவு?
    How many? எத்தனை?
    To whom? யாருக்கு?
  • கடந்த காலத்தில் நடைப்பெற்ற செயல்களை Information question களாக கேட்க  helping verb did முன்னால் question word(what,when,why,how போன்ற)  சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • Example:


    எப்பொழுது வாங்கினாய்? When did you buy?
    எங்கு வாங்கினாய்? Where did you buy?
    நீ என்ன வாங்கினாய்? What did you buy?
    எவ்வளவு விலை? How much did it cost?
    எங்கே ஒடினாய்? Where did you run?
    ஏன் ஒடினாய்? Why did you run?
    எப்பொழுது ஒடினாய்? When did you run?
    எப்படி ஒடினாய்? How did you run?
    நீ எங்கே போனாய்? Where did you go?
    நீ எப்படி போனாய்? How did you go?
    நீ எப்படி வந்தாய்? How did you come?
    நீ யாருடன் வந்தாய்? Whom did you come with?
    நீ ஏன் அவளுடன் போனாய்? Why did you go with her?
    நீ அவர்களை எப்பொழுது சந்தித்தாய்? When did you meet them?
    நேற்று நீ யாரைச் சந்தித்தாய்? Whom did you meet yesterday?
  • Who என்ற question word உடன் did என்ற helping verb சேராது.


    உன்னுடன் யார் வந்தது? Who came with you?
    யார் என்னுடைய புக் எடுத்தது? who took my book?
    கதவைத் தட்டியது யார்? Who knocked at the door?
    Biscuit எடுத்தது யார்? Who took the biscuit?
    யார் எல்லா கதவையும் மூடியது? Who closed all the doors?

Wednesday 17 November 2010

Simple Past Tense ( கடந்த காலம்)

  • நடந்து முடிந்த செயல்களைக் குறிப்பிட simple past tense பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு செயல் கடந்த காலத்தில் தொடங்கி கடந்த காலத்திலே முடிவடைந்து விட்டால் அந்த செயலை சொல்லும் போது நாம் simple past tense பயன்படுத்த வேண்டும்.
  • Example:
    நான் ஒரு laptop வாங்கினேன்.
    இதில் வாங்கினது என்ற செயல் முடிவடைந்து விட்டது. இச்செயல் நேற்று முடிந்திருக்கலாம், ஒரு வாரத்திற்கு முன் முடிந்திருக்கலாம், ஒரு மாதத்திற்கு முன் நடந்திருக்கலாம் அல்லது 5 or 6 வருடங்களுக்கு முன் நடந்திருக்கலாம்.
  • ஒரு செயல் எப்பொழுது நடந்திருந்தாலும் பரவாயில்லை செயல் முடிவடைந்து விட்டது அவ்வளவு தான். எனவே நடந்து முடிந்த செயல்களைக் குறிப்பிட simple past tense பயன்படுத்த வேண்டும்.
  • இப்பொழுது ஒரு laptop வாங்குவதைப் பற்றி பார்க்கலாம்.
    1. நான் நேற்று ஒரு laptop வாங்கினேன்.(I bought a laptop yesterday)
    2. நான் போன மாதம் ஒரு laptop வாங்கினேன்.(I bought a laptop last month)
    3. நான் 5 வருடங்கள் முன் இந்த laptop ஐ வாங்கினேன்.(I bought this laptop 5 years back)
  • வழக்கமாக கடந்த காலத்தில் நடைப்பெற்ற பழக்கமான செயல்களையோ, திரும்ப திரும்ப நடைப்பெற்ற செயல்களைச் சொல்ல உதவுகிறது.
    Example:
    1. When I was a child, we always went to the theater to watch movies.
    2. We went out for a meal every evening on holiday.
    3. He got up at 7'o cloc every morning to go to work.
Simple Past Tense வாக்கியங்களை அமைக்கும் முறை:
  • கடந்த காலத்தில் நடந்து முடிந்த செயல்களை வாக்கியங்களாக அமைக்கும் போது past tense verbs use பண்ண வேண்டும். 
  • Example:
    நான் ஒரு laptop வாங்கினேன்(I bought a laptop)
    இதில் வாங்கு என்ற செயலைச் சொல்ல buy என்ற verb இருக்கிறது. வாங்கினேன் என கடந்த காலத்தில் சொல்ல bought என்று சொல்கிறோம். இதே போல் வினைச் சொற்கள் காலத்திற்கேற்ப மாறுபடும்.
(list of verbs பின்னர் தருகிறேன்.)

 Past Tense Verbs:
         சில வினைச் சொற்கள் நிகழ் காலத்திலும், கடந்த காலத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும்


Verb Meaning
Cut வெட்டு
hit தட்டு
put போடு
Set ஒன்று சேர் 
Shut மூடு
Spread பரப்பு
Telecast ஒளிபரப்பு
Burst வெடி
Cost விலை
Let அனுமதி/விடு
Broadcast ஒலிபரப்பு
Hurt காயப்படுத்து
Read வாசி
Example:
  1. I bought a new TV. It cost 10000Rs 
  2. I cut a tree yesterday.
  3. I hurt my leg when I jumped off the walk.
Was and Were:
  • was என்பது past form of am and is. I , he ,she , it இவைகளுடன் was வரும்
  • were என்பது past form of are. we, you,they இவைகளுடன் were வரும்



I
He was
She
It


We
You Were
They
Example:
  1. Ten years ago,I was only a baby.
  2. It was very cold on monday
  3. Prema and I were in the garden.
  4. Those were my best dresses.
Note:
         subject singular ஆக இருந்தால் was வரும். subject plural ஆக இருந்தால் were வரும்
Positive  வாக்கியங்களை negative ஆக மாற்ற :
  • Simple Past  வாக்கியங்களை negative ஆக மாற்ற did என்ற helping verb பயன்படுகிறது
  • Column1 Column2
    I
    He
    She did
    It
    We
    You
    They
  • இல்லை என்று பொருள் தர not சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • Example:
    நான் வாங்கினேன்(I bought) இதை நான் வாங்கவில்லை என்று சொல்ல I did not buy என்று சொல்ல வேண்டும.
  • இதில் bought என்ற past tense verb, negative ஆக மாறும் போது buy என்று மாறியுள்ளது.
Note:
  1. did என்பது ஒரு past tense சொல். ஓரு வாக்கியத்தில் 2 past tense சொற்கள் இருக்க கூடாது. எனவே கடந்த கால செயல்களை negative ஆக மாற்றும் போது வாக்கியத்தில் did சேர்த்து present tense verb பயன்படுத்த வேண்டும.
  2. did மற்றும் not சேர்த்து didn't என்று சொல்லலாம்.
  3. Example:
Positive Negative
I bought I didnt buy
I ran I didn't run
I went I didn't go
I wrote I didn't write
I saw him I didn't see him
He cried  He didn't cry
You said You didn't say
They agreed They didn't agree
We danced We didn't dance