Friday, 15 October 2010

ஆங்கில இலக்கணம்-Auxiliary Verbs

  • Auxiliary verbs என்பது துணை வினைச் சொற்கள்.
  • ஒரு வாக்கியத்தில் கண்டிப்பாக ஒரு Main verb அல்லது Auxiliary verb இருக்க வேண்டும்.
  • Auxiliary verbs are used together with a main verb to give grammatical information and therefore add extra meaning to a sentence, which is not given by the main verb. 
  • Example:
    1. ராமன் ஓடினான்(Raman ran) இதில் ஒடினது ஒரு செயல் அதனால் ran (past tense of run)என்ற main verb பயன்படுத்த வேண்டும்.
    2. நான் ஒரு doctor( I am a doctor).  என்று என்னுடைய நிலையை பற்றி குறிப்பிடும் போது am என்ற auxiliary verb பயன்படுத்த வேண்டும்.
    3.புதிதான பழங்கள் (fruits are fresh)  என்று பழங்களின் நிலையைப் பற்றி சொல்லும் போது are என்ற auxiliary verb பயன்படுத்த வேண்டும்.
  • So செயல்களைப் பற்றிக் குறிப்பிட Main verb களைப் பயன்படுத்த வேண்டும். நிலை/தன்மை களைப் பற்றிக் குறிப்பிட Auxiliary verb களைப் பயன்படுத்த வேண்டும்.
Types of Auxiliary Verbs:
  1. Be verbs
  2. do verbs
  3. have verbs
  4. Modal verbs
1.Be verbs:
  •  Be என்றால் இரு என்று பொருள்.
  • ஆங்கிலத்தில் மொத்தம் 7 Be verbs
    am , is , are , was , were , will be , shall be
  • காலங்களுக்கு ஏற்ற மாதிரி be verbs பயன்படுத்தப்படும்.
    Tense Auxiliary Verbs
    Present tense am , is , are
    Past tense was , were
    Future tense Will be , shall be 
  • ஆங்கிலத்தில் மொத்தம் 7 subject கள் உள்ளன. I , We, You, He , She , It , They
  • Subject க்கு ஏற்றவாறு Auxiliary verb களை 3 காலங்களிலும் பயன் படுத்துவதை பார்க்கலாம் .
    Present Tense Past Tense Future Tense
    I am I was I shall be
    We are We were We shall be
    You are  You were You will be
    He is He was He will be
    She is She was She will be
    It is It was It will be
    They are They were They will be

21 comments:

  1. மிகவும் பயனுள்ள விசயங்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்! மிக எளிமையான விளக்கம்!

    ReplyDelete
  3. As I MAY suffer from fever on weekends, I MAY NOT attend the class. Please forgive my absence and grant me leave on weekends. Thanking you.
    Sincerely
    Chitra Solomon

    ReplyDelete
  4. Welcome V.Radhakrishnan
    Thanks a lot for your comments

    ReplyDelete
  5. Thanks a lot எஸ்.கே.

    ReplyDelete
  6. Hello chitra,
    Leave granted. உடம்ப கவனிச்சிக்கங்க(swine flu symptom மாதிரி இருக்குது)
    அப்பாடி சித்ரா 2 நாள் leave. பொட்டு வெடி, வெடிகுண்டு பயமில்லாமல் class நடத்தலாம்.
    மறக்காம கணவர், குழந்தைகளோட Monday class க்கு வந்துருங்க

    ReplyDelete
  7. ha,ha,ha,ha.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... fever வருவதற்கு முன்னே symptoms எல்லாம் சொல்லி diagnose வேற செஞ்சிட்டாங்கப்பா.... டாக்டர் வாழ்க!

    ReplyDelete
  8. Teacher ,I have noted as well
    நானும் நிறைய வாக்கியம் சொல்லி பார்த்து கொண்டேன்
    வினை சொல்(Verb &Auxiliary verb) இல்லாமல் வாக்கியம் அமைக்க முடியவில்லை

    யூ டூ புருடஷ் என்று கேட்பதாக வருகிறதே
    கேள்வி வாக்கியம் என்பது வேறு, இல்லையா டீச்சர்

    நிறைய சந்தேகம் வருகிறது ;சில்லி கேள்வியாக இருக்குமோ என்று தயக்கமா இருக்கிறதுபா

    ReplyDelete
  9. Hello chitra,
    நீங்க Fever வர்றதுக்கு முன்னே leave கேட்கும் போது, நான் அது என்ன fever ன்னு diagnose பண்ண கூடாதா? இது தான் "வருமுன் காப்பது"

    ReplyDelete
  10. Hello priya,
    Thanks for your comment.
    கேள்வில என்னங்க chilli கேள்வி, onion கேள்வி. எல்லாமே easy ஆன கேள்வி தான் பதில் தான் ரொம்ப கஷ்டம் :-).
    நீங்க நிறைய கேள்வி கேட்டுருப்பீங்கன்னு ஆவலா வந்தேன். ஆனா நீங்க பெர்மிஷன் கேட்டுட்டு இருக்கீங்க. சீக்கிரமா கேள்விகளை அனுப்புங்க.

    ReplyDelete
  11. தொடரட்டும் உங்கள் பணி!

    ReplyDelete
  12. Ha ha

    Thanx Miss.,
    like yr humour senseppa,
    Kelvi silliyaa irunthaalum answer sensibleaa irugguthu.Little busy with Poozhasppa

    Best wishes for Ayutha poozha and Saraswathi poozhas To You .

    ReplyDelete
  13. கரெக்ட் ஆக கிளாஸ்க்கு வந்துடுறேன்.... கிளாஸ் leader க்கு என் மேல காண்டு..... அதான்.... attendance போடாமா விடுறா, ma'm

    ReplyDelete
  14. Welcome சைவகொத்துப்பரோட்டா

    ReplyDelete
  15. Hi very nice class
    continue on the regular class

    ReplyDelete
  16. i really want to learn this method but i have many task to do so so could i proceed now. good grammar

    ReplyDelete