Thursday, 21 October 2010

Tenses-காலம்

  • ஒரு செயல் எப்பொழுது நடைபெற்றது என்பதை கூறும் சொல் Tense எனப்படும்.
  • மூன்று வகையான காலம் உள்ளது
    1. நிகழ்காலம்(Present Tense)
    2. இறந்த காலம்(Past Tense)
    3. எதிர்காலம்(Future Tense)
  • Example:
    1. பாலா படிக்கிறார்.
    2. பாலா படித்தார்
    3. பாலா படிப்பார்

    பாலா படிக்கிறார் இதில் இப்பொழுது பாலா படிப்பதை குறிக்கிறது. அதாவது நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு செயலை குறிக்கிறது. எனவே இது Present Tense ஆகும்.
    பாலா படித்தார். இதில் பாலா படித்தது நேற்றோ அல்லது அதற்கு முன்போ நடந்து முடிந்ததை குறிப்பிடுகிறது. இவ்வாறு கடந்த காலத்தில் நடந்து முடிந்த ஒரு செயலை சொல்வது Past Tense ஆகும்.
    பாலா படிப்பார் இதில் பாலாவுக்கு நாளையோ அல்லது அதற்கு பிறகோ எப்பொழுது நேரம் கிடைக்குமோ அப்பொழுது செய்யும் செயலைச் சொல்வதால் இது Future Tense ஆகும்
  • சில செயல்கள் வழக்கமாக நடைபெற்று வரும், சில செயல்கள் நடந்து முடிவடைந்திருக்கும் ஒரு சில செயல்கள் இனிமேல் தான் நடைபெற வேண்டும் என்ற நிலையில் இருக்கும். இது போலவே சில செயல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடங்கி அது நேற்று நடந்து இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம். இவ்வாறு கூறுவதை 4 பிரிவுகளில் பிரிக்கலாம்.
    1. Simple
    2. Perfect
    3. Continuous
    4. Perfect Continuous
  • இவை ஒவ்வொன்றும் காலத்திற்கு ஏற்றபடி 3 பிரிவுகளாகப் பிரியும். மொத்தம் 12 பிரிவுகளில் ஆங்கில இலக்கணத்தை பிரிக்கலாம்
    1. Simple Present Tense
    2. Simple Past Tense.
    3. Simple Future Tense
    4. Present Perfect Tense.
    5. Past Perfect Tense.
    6. Future Perfect Tense.
    7. Present Continuous Tense.
    8. Past Continuous Tense.
    9. Future Continuous Tense.
    10. Present Perfect Continuous Tense.
    11. Past Perfect Continuous Tense.
    12. Future Perfect Continuous Tense.
  • வினைச் சொல் காலத்திற்கு ஏற்ப மாறுவதைப் போல அந்த வினையை அதாவது செயலை செய்பவருக்கு ஏற்றபடியும் மாறும். 
  • Exaample:
    1. நான் விளையாடுகிறேன்
    2. நீ விளையாடுகிறாய்.
    3. அவன் விளையாடுகிறான்
    4. அவர்கள் விளையாடுகிறார்கள்
    5. அது விளையாடியது

வாக்கியம் (Sentence):
  • பல சொற்கள் சேர்ந்து வந்து ஒரு முற்றுப்பெற்ற பொருளைத்தருமானால் அது வாக்கியம் எனப்படும்.
  • A group of words which give a complete meaning is called Sentence.
  • Example:
    1. He is studying.(அவன் படித்துக் கொண்டிருக்கிறான்)
    2. She who is wearing a green skirt is my sister (பச்சை பாவாடை அணிந்திருக்கும் பெண் என்னுடைய சகோதரி)
Types of Sentences: 
The sentences are of 4 types they are
  1. Positive sentence (உடன்பாட்டு வாக்கியம்)
  2. Negative Sentence(எதிர்மறை வாக்கியம்)
  3. Question Sentence(வினா வாக்கியம்)
  4. Exclamatory Sentence(வியப்பு வாக்கியம்)
1.Positive sentence (உடன்பாட்டு வாக்கியம்) :
  • இது ஒரு செய்தி வாக்கியம்.
  • Example:
    1.He is reading a newspaper(அவன் செய்திதாள் படிக்கிறான்).
    2 I am playing(நான் விளையாடுகிறேன்)
2.Negative Sentence(எதிர்மறை வாக்கியம்):
  • இல்லை என்ற பொருள் தரும் வாக்கியம் எதிர்மறை வாக்கியம்
  • Example:
    1.He does not drink(அவன் குடிப்பதில்லை)
3.Question Sentence(வினா வாக்கியம்):
  • கேள்விகளை கேட்க பயன்படும் வாக்கியம்
3.1.yes/no question type:
  • சில கேள்விகளுக்கு பதில் Yes அல்லது No என்று வர வேண்டும். அந்த மாதிரி கேள்விகளை Yes/No type question என்கிறோம். 
  •  Example:

    உனக்கு தெரியுமா? என்று யாராவது கேட்டால் தெரியும்(yes) அல்லது தெரியாது(No) என பதில் சொல்லுவோம்.
3.2Information Question type: 
  • நாம் ஒருவரிடம் உனக்கு பிடிக்குமா எனக் கேட்டு அவர் பிடிக்காது எனப் பதில் சொன்னால் அவரிடம் ஏன் பிடிக்காது எனக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்பதற்கு Question word வேண்டும்  
  • என்ன,எங்கே,எப்பொழுது, ஏன், யார்,யாரை  போன்ற சொற்களை கேள்வி சொல்(Question word) என்கிறோம்.
  • இதைப் போல என்ன,எங்கே,எப்பொழுது, ஏன், யார்,யாரை போன்ற வார்த்தைகள் இடம்பெறும் கேள்விகளை Information Question என்கிறோம்.
  • தெரிந்து கொள்ள வேண்டிய வினாச் சொற்கள்


    What? என்ன?
    When? எப்பொழுது?
    Where? எங்கே?
    Which? எது?
    Why? ஏன்?
    Who? யார்?
    Whom? யாரை?
    How? எப்படி?
    How far? எவ்வளவு தூரம்?
    How long? எவ்வளவு நேரம்?
    How often? எப்பொழுதெல்லாம்?
    How much? எவ்வளவு?
    How many? எத்தனை?
    To whom? யாருக்கு?
  • Example:
    1.What is your name?(உனது பெயர் என்ன?)
4.Exclamatory Sentence(வியப்பு வாக்கியம்):
  • It makes a sudden feeling
  • Example:
    1.Vow. What a beauty?(ஆஹா! என்ன அழகு)
    2.Alas! I have failed.(ஐயோ! நான் தோற்றுவிட்டேன்)

32 comments:

  1. தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Sunitha,

    I really appreciate your amazing service. I hope, it will continue.

    Sri....

    ReplyDelete
  3. PRESENT, Madam!
    (p.s. nijamaa - naan naaLaikku tour poRen... Will be back by Monday... please grant me leave and forgive my absence. Thanking you.)

    ReplyDelete
  4. very good sunitha வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. Thank you எஸ்.கே

    ReplyDelete
  6. Welcome ஸ்ரீ.
    Thanks a lot for your comment.

    ReplyDelete
  7. Hi chithra,
    ensoy.
    எதாவது ஈ or கொசு பிடிக்கிற திருவிழாவா? "சென்று வா மகளே வென்று வா"

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு டீச்சர்
    ஹய்யா! எங்க இங்கிலீஷ் டீச்சர் தமிழும் நல்லா பேசறாங்க
    எனக்கு simple past tense க்கும் perfect present tense யையும் பயன் படுத்தும் போது
    சற்று குழப்பி கொள்கிறேன்
    விளக்கம் கொடுங்கள் டீச்சர்

    ReplyDelete
  9. தங்கள் தளத்துக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்

    ReplyDelete
  10. Good work சுனிதா. நானும் என்னுடைய வலைப்பதிவில் இணைப்பு கொடுத்திருக்கிறேன்.

    ReplyDelete
  11. Thank you priya.
    past tense perfect present tense lesson வரும் போது சொல்றேன்.

    ReplyDelete
  12. Welcome மகாதேவன்-V.K. Thanks a lot

    ReplyDelete
  13. Welcome எம்.ஞானசேகரன்.
    Thanks a lot

    ReplyDelete
  14. Very nice blog. Continue your good work. Its vry useful to me,

    All the best

    ReplyDelete
  15. Dear Sister,

    Thank you Very much for your best effort. Now I am getting clarified with my doubts.

    I have a small doubt Please explain me.

    //He is studying ( அவன் படித்துக் கொண்டிருக்கிறான்)
    She who is wearing a green shirt is my sister (பச்சை பாவாடை அணிந்திருக்கும் பெண் என்னுடைய சகோதரி)//


    He is studying ( அவன் படித்துக் கொண்டிருக்கிறான்) என்று வரும் போது She who is wearing a green shirt பச்சை பாவாடை அணிந்து கொண்டிருக்கும் பெண் என்றுதானே வரும்.

    அதற்கு பதிலாக She who was wore a green shirt is my sister (பச்சை பாவாடை அணிந்துள்ள பெண் என்னுடைய சகோதரி) என்று எழுதலாமா?

    நன்றி
    HBA.

    ReplyDelete
  16. Sir, kindly tell how to make a sentence by using those tenses.

    ReplyDelete
  17. இந்த பகுதி அடிப்படையில் ஆங்கிலம் கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளவை. நன்றி . சுனிதா மாதவதாஸ்.

    ReplyDelete
  18. I am just seeing a websie really good but one suggestion english coverstion with peoples so updated your websites

    ReplyDelete