Monday, 28 February 2011

Study English every Day-28/02/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
  1. நாம் அவளை நம்பி இருக்க முடியாது.
    We cannot rely on her
  2. நதிக்கு மேல் பாலம் உள்ளது.
    The bridge is over the river
  3. அவன் புகை பிடிக்கும் பழக்கத்திற்க்கு அடிமையாக உள்ளான்.
    He is addicted to smoking
  4. அவன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளான்.
    He was admitted in the hospital
  5. அவள் அறைக்குள் சென்றாள்.
    She went into the room.
  6. அவன் ராஜாவைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்.
    He was enquiring about Raja.
  7. நான் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.
    I was about to go.
  8. அவனுக்குத் தன் வெற்றியில் முழு நம்பிக்கை இருந்தது.
    He was sure of success.
  9. அவன் தன் வேலையில் ஈடுபட்டிருந்தான்.
    He was busy in his work (or)
    He was absorbed in his work.
  10. அவளுக்கு ஒரு காது செவிடு.
    She is deaf in one ear.
Try Yourself:
       கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
  1. நாம் ஆங்கில மொழியை அறிந்திருக்க வேண்டும்.
  2. உன்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு திருப்தி அடைகிறேன்.
  3. உனக்கு மற்றவர்களை சமாளிக்கத் தெரியாது.
  4. நான் பழைய மோதிரத்தை மாற்றி புதியது பெற்றேன்.
  5. என் கதையைக் கேட்டு அவனுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.
  6. நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
  7. நீங்கள் இன்னும் நோயிலிருந்து குணமடையவில்லை.
  8. அவன் தன் பலவீனத்தை நன்கு அறிவான்.
  9. அவன் என்னை அங்கே போவதிலிருந்து தடுக்கிறான்.
  10. அவனுக்கு வாழைப்பழம் மிகவும் பிடிக்கும்.

4 comments:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  2. Present, Madam! When is the final exam? March is coming up. :-)

    ReplyDelete
  3. He was admitted in the hospital..not to the hospital..

    ReplyDelete