Sunday, 13 March 2011

Present Continuous Tense(நிகழ்கால தொடர்வினை)-II

Present Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக்கியங்களை negative ஆக மாற்ற: 
         Present Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக்கியங்களை negative ஆக மாற்ற subject மற்றும் auxiliary verb உடன் not என்ற keyword சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Subject+Auxiliary verb+not+verb+ing
 

Example:
  1. நான் விளையாடிக்கொண்டிருக்கவில்லை.
    I am not playing.
  2. இப்பொழுது மழை பெய்துக் கொண்டிருக்கவில்லை
    It is not raining.
  3. நான் TV பார்த்துக் கொண்டிருக்கவில்லை
    I am not watching TV.
Present Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக்கியங்களை Question வாக்கியங்களாக‌ மாற்ற: 
Question word+Auxiliary verb+subject+verb+ing

Example:

  1. நீ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்?
    What are you doing?
  2. எங்கே போய்க் கொன்டிருக்கிறாய்?
    Where are you going?
Yes/No type Question: 
              Auxiliary verb+subject+verb+ing
Example:

  1. நீ வாசித்துக் கொண்டிருக்கிறாயா?
    Are you reading?
  2. அவன் விளையாடிக் கொண்டிருக்கிறானா?
    Is he playing?
  3. அவள் பாடிக் கொண்டிருக்கிறாளா?
    Is she singing?

Saturday, 5 March 2011

Study English every Day-05/03/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.

  1. உங்களை காக்க வைப்பதற்காக என்னை மன்னிக்கவும்.
    I am sorry to keep you waiting
  2. உங்களைக் காக்க வைத்ததற்காக மன்னிக்கவும்.
    I am sorry to have kept you waiting
  3. நான் உங்களது வீட்டிற்கு வரலாம் என நினைத்தேன்.
    I thought of coming to your house
  4. தாமதமானதற்காக மன்னிக்கவும்.
    Excuse me for being late.
  5. எனக்கு அங்கு போவதில் விருப்பம் இல்லை.
    I don't like going there.
  6. இந்த ஏரியாவில் ஒரு வீட்டைத் தேடி கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
    Locating a house in this area is very difficult
  7. அந்த காலேஜில் சீட் வாங்குவது மிகவும் கடினம்.
    Getting a seat in that college is very difficult.
  8. நீ அங்கே போவதை நான் பார்த்தேன்.
    I saw you  going there.
  9. அவன் ஆங்கிலம் பேச விரும்புகிறான் ஆனால் வாயைத் திறக்க பயப்படுகிறான்.
    He likes to speak English. But he is afraid of opening his mouth.
  10. இந்த கேள்வியை கேட்பதற்காக என்னை மன்னிக்கவும்.
    Excues me for asking this question.