Sunday, 2 January 2011

Past Perfect Tense(கடந்த கால வினைமுற்று)-II

Past Perfect Tense(கடந்த கால வினைமுற்று) வாக்கியங்களை negative ஆக மாற்ற: 
  • Past Perfect Tense வாக்கியங்களை negative ஆக மாற்ற subject உடன் helping verb ஆன had மற்றும்  keyword ஆன not மற்றும் வினைச்சொல்லின் past participle form சேர்க்க வேண்டும்.

    subject+had+not+past participle
  • subject எதுவாக இருந்தாலும் past perfect tense ல் சொல்லும் போது had மட்டுமே வரும். 
  • had மற்றும் not சேர்த்து hadn't என்றும் சொல்லலாம்.
  • Example:
    1. நான் எழுதியிருந்தேன்(positive)
      I had written
      நான் எழுதியிருக்கவில்லை(negative)
      I had not written
    2. நான் பார்த்திருந்தேன்(positive)
      I had seen
      நான் பார்த்திருக்கவில்லை(negative)
      I had not seen
Past Perfect Tense(கடந்த கால வினைமுற்று) வாக்கியங்களை question வாக்கியங்களாக மாற்ற: 
  • Past Perfect Tense வாக்கியங்களை question வாக்கியங்களாக  மாற்ற helping verb ஆன had முதலிலும் அதன்பிறகு subject மற்றும் வினைச்சொல்லின் past participle form சேர்க்க வேண்டும்.

    Had+subject+past participle
  • Example:
    1. நீ எழுதியிருந்தாயா?
      Had you written?
    2.  நீ பார்த்திருந்தாயா?
      Had you seen?
    3. நீ என்னை அழைத்திருந்தாயா?
      Had you called me?
    4. நீ எடுத்தியிருந்தாயா?
      Had you taken?
    5. நீ costly jewels அணிந்திருந்தாயா?
      Had you worn costly jewels?
  • மேலே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது ஆமாம் என்று சொல்ல yes,I had என்றும் இல்லை என்று சொல்ல No, I hadn't என்றும் சொல்லலாம். 
  • Example:
    1.நீ சினிமாவுக்கு போயிருக்கவில்லையா? என்று கேட்க Had you not gone to the cinema?
    இதற்கு ஆமாம் நான் போயிருந்தேன் என்று சொல்ல Yes, I had என்றும்   இல்லை நான் போயிருக்கவில்லை என்று சொல்ல No, I hadn't என்றும் சொல்ல வேண்டும்.

14 comments:

  1. மிக அருமையான பாடங்கள்...

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு தோழி!!

    ReplyDelete
  3. வழக்கம்போலவே பாடங்கள் அருமை

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!

    ReplyDelete
  4. புது வருடம் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.....

    ReplyDelete
  5. WISH U HAPPY AND PROSPEROUS NEW YEAR SUNITHA!

    10 NAAL CLASS LEAVENNU NEENGA SOLLAVE ILLAE!!

    GET PERMISSION FROM US BEFORE TAKING LEAVE!!

    ILLAINNA KOVITCHUKUVOM !HA HAA

    ONE DOUBT

    Had you gone to the cinema?
    Yes .,I had

    Had you not gone to the cinema?
    Yes .,I hadn't

    Is it correct
    OR
    Both answers are same as you mentioned above

    Pl advise Miss

    ReplyDelete
  6. Teacher, Sunday vanthu classes vachchu irunthu irukkeenga.... ithu nallaa illai, sollitten... STRIKE!!!!!!!!!!! STRIKE!!!!!!!!!!

    ReplyDelete
  7. Cut adikkirathukkuththaan class.... !!! neenga weekdays la nadaththunaa .... naanga strike panna vasathiyaai irukkum... weekend naa....chummaave leavuthaane!!! ha,ha,ha,ha,ha,ha....

    ReplyDelete
  8. -- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

    உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மிஸ் லீவ்! நோ ஹோம் வொர்க்., ஜாலி ஜாலி !!

    ReplyDelete
  10. Thank you Rajvel,பலே பாண்டியா,மாணவன்,

    ReplyDelete
  11. Hello priya,
    இனிமேல் உங்க கிட்ட சொல்லிட்டு விடுறேன்

    உங்களுடைய 2 பதில்களும் சரி தான்
    இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. Jaleela akka,

    உங்களுடைய வருகைக்கும்,விருதுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete