Tuesday 25 January 2011

Study English every Day-25/01/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
  1. இன்று என்ன தேதி?
    What is the date today?
  2. அவர் ஆபிஸை விட்டு எத்தனை மணிக்கு வெளியே வருவார்?
    What time does he leave his office?
  3. அவர் 6 மணிக்கு ஆபிஸை விட்டு வெளியே வருவார்.
    He leaves his office at 6'o clock
  4. அவர் சரியான நேரத்திற்கு வந்துவிட்டார்.
    He came at the right time
  5. நீங்கள் அரைமணிநேரம் தாமதமாக வந்தீர்கள்.
    You are late by half an hour
  6. படுக்கையிலிருந்து எழும்பும் நேரமாகிவிட்டது.
    It is time to getup
  7. காலம் எவ்வளவு வேகமாக பறக்கிறது.
    How time flies
  8. நேரத்தைப் பயன்படுத்திக் கொள்.
    Make the best use of your time
  9. ஆசிரியர் பள்ளிக்கு எத்தனை மணிக்கு வருவார்?
    When does the teacher come to school?.
  10. அவர் பள்ளிக்கு ஒன்பது மணிக்கு சற்று முன்பு வருவார்.
    He comes to school a  little before nine.
Try Yourself:
      கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும். 
  1. சீக்கிரம் திரும்பி வா
  2. பிறகு எப்பொழுதாவது வந்து என்னைப் பார்.
  3. என்னை 8 மணிக்கு எழுப்பு.
  4. என்னை அதிகாலையில் எழுப்பி விடு.
  5. நான் வரும்வரை இங்கே காத்திரு.
  6. இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்.
  7. தாமதிக்காதே.
  8. கவலையைவிடு
  9. நான் யாரை நம்புவது
  10. நீ நேரத்தை வீணாக்குகிறாய்.
  11. அது என் தவறல்ல.
  12. அவன் ஒரு பெரிய தொல்லை.

5 comments:

  1. வழக்கம்போலவே பயனுள்ள பாடங்கள்

    பகிர்வுக்கு நன்றிங்க மேடம்

    ReplyDelete
  2. Hi Chitra,மாணவன்,சிவ சதீஸ்,HVL
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    அனைவருக்கும் இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete