Wednesday, 19 January 2011

Future Perfect Tense(எதிர் கால வினைமுற்று)

         எதிர் காலத்தில் ஒரு செயல் முடிவடைந்திருக்கும்/நடைபெற்றிருக்கும் என முன்கூட்டியே தீர்மானிப்பது Future Perfect Tense ஆகும்.
Example:
  1. நாளை இந்த நேரத்தில் நான் வேலையில் சேர்ந்திருப்பேன்
  2. நாளை அவர்கள் Londonஐ அடைந்திருப்பார்கள்
Future Perfect Tense வாக்கியங்களை அமைக்க‌:             Future Perfect Tense வாக்கியங்களை அமைக்க‌ subject உடன் will/shall have மற்றும் verb ன் past participle form use பண்ண வேண்டும்.


 
 

 
 

subject+Will/Shall have
  +past participle
 I மற்றும் we உடன் shall have உம் You,We,They,He,She,It உடன் will have உம் சேர்க்க வேண்டும். Example:
  1. "நாளை இந்த நேரத்தில் நான் வேலையில் சேர்ந்திருப்பேன்" என்று சொல்ல Tomorrow by this time I will have joined the job.
  2. "நாளை அவர்கள் Londonஐ அடைந்திருப்பார்கள்" என்று சொல்ல Tomorrow they will have arrived London. 
Future Perfect Tense Question வாக்கியங்களை அமைக்க‌:         நாளை இந்த நேரத்தில் ஒரு செயலை முடித்திருப்பாயா எனக் கேட்க Future Perfect Tense உதவுகிறது

will/shall+subject+have+past participle
Example:
  1.  நீ பார்த்திருப்பாயா?
    Will you have seen?
  2. நீ அடுத்த வருடம் தேர்வில் பாஸாயிருப்பாயா?
    Will you have passed the SSLC exam by the next year?
  3. உன் அக்கா London லிருந்து திரும்பி வந்திருப்பாரா?
    Will your sister have returned from London?
  4. அவள் போயிருப்பாளா?
    will she have gone?

8 comments:

  1. Good post...

    Regards
    http://hari11888.blogspot.com

    ReplyDelete
  2. Super training.... Keep it up

    ReplyDelete
  3. I was Searching for Grammar Explanation in tamil for a very long time. Found this. Very Nice

    ReplyDelete
  4. Very nice but I need more examples

    ReplyDelete
  5. Tq.It is very usefull for me bt i need some more examples.

    ReplyDelete
  6. Ahoj všem! Chci doporučit zdroj se spolehlivými online kasiny online-ruleta-czech.cz

    ReplyDelete
  7. Very useful thank ur support

    ReplyDelete