Tuesday, 2 November 2010

Daily Tips-11(நேரம் பற்றி பேச)

நேரம் பற்றி  பேச தேவைப்படும் சில தகவல்கள்.(about time)
  • ஒருவரிடம் Time என்ன என்று கேட்க
    1. What's the time now?
    2. What time is it?
    3. Do you know what time it is?
    4. Have you got the right time?
    என்று கேட்கலாம். 
  • இதையே கொஞ்சம் பணிவாக கேட்க   Could you tell me the time please? என்று கேட்கலாம். அல்லது simple ஆக      Time please?  என்று கேட்கலாம்.
  • ஆங்கிலத்தில் Time சொல்லும் போது முதலில் மணி(hour) அப்புறம் நிமிடங்கள்(minutes) சொல்லி am அல்லது pm சொல்ல வேண்டும். இரவு 12 மணியிலிருந்து பகல் 12 மணி வரை am என்று சொல்ல வேண்டும். பகல் 1 மணியிலிருந்து இரவு 11.59 வரை pm ஆகும்.
    Example:
         10.30am
         2.10 pm
  • Time சொல்லும் போது பெரும்பாலும் use ஆகும் சொற்கள்
    Column1 Column2
    Exactly  மிகச்சரியாக
    about ஏறத்தாழ/கிட்டத்தட்ட
    almost பெரும்பாலும்/சற்றேகுறைய
    just gone இப்பொழுதுதான் கடந்தது
    fast வேகமாகச் செல்கிறது
    slow மெதுவாக செல்கிறது
    Past கடந்த
    To இன்னும் இருக்கிறது
    Quarter கால்மணி நேரம்
    Half அரைமணி நேரம்
    noon/midday நண்பகல்/மதியம்
    midnight நடு இரவில்/நள்ளிரவு


  •  முழு மணிநேரத்தை சொல்லும் போது '0 clock என்பதை சேர்த்து சொல்லலாம்.
    Example: 12 'o clock, 3 'o clock, 10 'o clock
  • ஆங்கிலத்தில் minute முதலிலும் hour இரண்டாவதும் வைத்து time சொல்லலாம்
  • ஆங்கிலத்தில் 'past' என்பதை மணி நேரம் கடந்து 30 நிமிடங்கள் வரை சொல்லலாம். அதாவது மணி இப்பொழுது 10.30 என்று வைத்துக் கொள்வோம் இதை சொல்லும் போது half past ten என்று சொல்ல வேண்டும். 11.15 என்பதை சொல்ல quarter past 11 என்று சொல்லலாம்.
  • ஆங்கிலத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் சொல்ல to என்பதை பயன்படுத்தி இனி வரப்போகும் மணி நேரத்தை சொல்லலாம். அதாவது மணி இப்பொழுது 10.45 என்று வைத்துக் கொள்வோம் இதை சொல்லும் போது 15 minutes to 11 என்று சொல்லலாம் அல்லது quarter to 11  என்று சொல்லலாம். 2.40 என்பதை சொல்ல twenty to 3 என்று சொல்லலாம்.


Rule
1. 01 முதல் 30 நிமிடங்களை சொல்லும் போது முடிவடைந்த மணி நேரம் மற்றும் past use பண்ண வேண்டும்
2. 31 முதல் 59 நிமிடங்களை சொல்லும் போது வரப்போகும் மணி நேரம் மற்றும் to use பண்ண வேண்டும்
இந்த படத்தை நினைவு வைத்துக்கொள்ளவும்

நினைவில் வைத்துக் கொள்ளவும்
  • நாம் time சொல்லும் போது காலை முதல் 12 மணி வரை morning, 12 மணி முதல் 5 மணி வரை afternoon 5 மணிக்கு பிறகு 9 மணி வரை
     evening அதன் பிறகு night.
  • ஆங்கிலத்தில் காலையில் என்று சொல்ல in the morning, மதியத்தில் என்று சொல்ல in the afternoon, மாலையில் என்று சொல்ல in the evening, இரவில் என்று சொல்ல at night  என்றும் சொல்ல வேண்டும்.
Some Example:
  1. 10.30 am
    half past 10 (or) 10.30 in the morning
  2. 11.15 pm
    quarter past 11 (or) 11.15 in the afternoon
  3. 9.45 pm
    quarter to 10 (or) at night 9.45
  4. 4.25 pm
    25 past 4 (or) 4.25 in the evening
  5. 7.55 am
    5 to 8 (or) 7.55 in the morning
  6. 8.10 pm
    10 past 8 (or) in the evening 8.10
  7. 3.28 pm
    28 past 3 (or) about/around half past 3
  8. 5pm
    5 o'clock
  9. quarter past one
    1.15
  10. half past two
    2.30
  11. quarter to two
    1.45
  12. five past one
    1.05
  13. ten past one
    1.10
  14. twenty to two
    1.40
  15. ten fifteen
    10.15
Questions Related with time
  1. What time do you usually wakeup?
  2. What time do you usually getup?
  3. What time do you usually start work?
  4. What time do you usually have lunch?
  5. What time do you usually have dinner
  6. What time do you usually go to bed?
  7. What time do you usually go to sleep?

14 comments:

  1. அருமை
    நேரத்தைப்பயன்படுத்துவதுபற்றி தெளிவாக எழுதியுள்ளீர்கள் விரிவாக தெரிந்துகொண்டேன்
    மிகவும் பயனுள்ளதாக இருந்தது இன்றைய பாடமும்

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    வாழ்க வளமுடன்
    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  2. madam
    could you please give me your personal mail id.
    send me test mail to
    shiva.satish@gmail.com

    ReplyDelete
  3. Present, Madam!
    What time is it? Am I late for the class? :-)

    ReplyDelete
  4. Thank you Sunitha for this post.

    "Sunitha
    Like my work? Support me by clicking some advertisements"

    Sure I'll clicking and help you :-)

    ReplyDelete
  5. நன்றி. தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
  6. நேரம் பற்றிய பல உபயோகமான (சரியான)
    தகவல்களை தெரிந்து கொண்டேன்.

    மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்க.

    உங்களுக்கும் மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்
    எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும்
    வாழ்வில் எல்லா மேன்மைகளையும்
    நிறைவாகப் பெற்று வளமோடு
    வாழ வேண்டுமென வாழ்த்தி மகிழ்கிறேன்.

    நன்றி. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  7. வகுப்பு இன்றும் பிரயோசனமாக இருந்தது ரீச்சர்....

    ReplyDelete
  8. நீங்கள் உங்கள் பதிவில் வாக்குப் பட்டைகளைச் சேர்த்தால் இப்பதிவுகள் பலரை சென்றடையும் அல்லவா..??

    ReplyDelete
  9. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

    http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

    ReplyDelete
  11. நல்ல காரியங்களை தொடர்ந்து செய்துகொண்டே இருங்கள், இறைவனின் உதவி உங்களுக்கு இருக்கும்

    ReplyDelete
  12. தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete