Wednesday, 26 January 2011

Study English every Day-26/01/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
  1. சீக்கிரம் திரும்பி வா.
    Come back soon
  2. பிறகு எப்பொழுதாவது வந்து என்னைப் பார்.
    Come and see me some time again
  3. என்னை 8 மணிக்கு எழுப்பு.
    Wake me up at 8'o clock
  4. என்னை அதிகாலையில் எழுப்பி விடு.
    Wake me up early in the morning.
  5. நான் வரும்வரை இங்கே காத்திரு.
    Wait here till I get back
  6. இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்.
    Hold on with both hands.
  7. தாமதிக்காதே.
    Don't be late (or)
    Don't delay
  8. கவலையைவிடு
    Don't worry
  9. நான் யாரை நம்புவது.
    Whom can I trust?
  10. நீ நேரத்தை வீணாக்குகிறாய்.
    You are simply wasting your time
  11. அது என் தவறல்ல.
    It was not my fault
  12. அவன் ஒரு பெரிய தொல்லை.
    He is a nuisance.
 Try Yourself:
      கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும். 
  1. பூவைப்பறிக்காதே.
  2. இனி அப்படி செய்யாதே.
  3. கையைக்கழுவு.
  4. லைட் போடு.
  5. பென்சிலால் எழுதாதே.பேனாவினால் எழுது.
  6. எனக்கு சொல்ல/தெரிவிக்க மறக்காதே.
  7. எனக்கு உதவி செய்யப்போகிறாயா? இல்லையா?
  8. பூட்சின் கயிற்றை இழுத்துக்கட்டு.
  9. உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ.
  10. உணவை நன்றாக மென்று தின்னவும்.

7 comments:

  1. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமதானமும் உண்டாகடும்
    உங்களுடைய இந்த நல்ல பணிகள் தொடர வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    ஜக்கரிய்யா - துபை (UAE)

    ReplyDelete
  2. thank you for your good work..

    ReplyDelete
  3. Hi சிவ சதீஸ், HVL, salihoo, தங்கம்பழனி, கிறுக்கன், நெடுஞ்சாவடியார், பலே பிரபு
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete