Tuesday, 12 October 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-8

இன்றைய Tips ல் புதிதாக சந்திக்கும் நபரிடம் அவர் எங்கிருந்து வருகிறார், எங்கு வசிக்கிறார்,யாருடன் இருக்கிறார், அவருடைய contact details கேட்பது பற்றி பார்க்கலாம்.
  1. நீங்கள் யாரிடமாவது அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்க அதாவது அவர்களுடைய native place பற்றி கேட்க கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை கேட்கலாம்.
    1. Where are you from?
    2. Where do you come from?
    3. Whereabouts are you from?
    யாராவது உங்களிடம் Where are you from? என்று கேட்டால் I am from India. (or) I am from Nagercoil என்று நீங்கள் எங்கிருந்து வருகிறீர்களோ அதைச் சொல்லவும்
  2. நீங்கள் ஒருவரிடம் Where are you from? என்று கேட்டு அவர் I am from America. என்று சொல்கிறார். America  வில் எங்கே என்று கேட்க கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை கேட்கலாம்.
    1. What part of America do you come from?
    2. Whereabouts in America are you from?
  3. நீங்கள் இப்பொழுது எங்கே வசிக்கிறீர்கள் எனக் கேட்க Where do you live? என்று கேட்கலாம் யாராவது உங்களிடம் Where do you live? என்று கேட்டால் நீங்கள் தற்பொழுது வசிக்குமிடத்தை கீழே உள்ள முறைகளில் சொல்லலாம்

    1. I live in London.
    2. I live in Oxford near London
    3. I am originally from India now live in London
    4. I was born in India but grew up in England
  4. நீங்கள் யாருடன் வசிக்கிறீர்கள் என்று கேட்க கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை கேட்கலாம்.
    1. Who do you live with?.
    2. Do you live with anybody?
    நான் கணவருடன் இருக்கிறேன் என்று சொல்ல  I live with my husband அல்லது பெற்றோருடன் இருக்கிறேன் என்று சொல்ல I live with my parents அல்லது friends கூட இருக்கிறேன் என்று சொல்ல I live with my friends என்று சொல்லலாம். தனியாக வசிக்கிறேன் என்று சொல்ல I live on my own.என்று சொல்லலாம்
  5. நீங்கள் தனியாகவா வசிக்கிறீர்கள் என்று கேட்க Do you live on your own?  என்று கேட்கலாம். யாராவது Do you live on your own? என்று உங்களிடம் கேட்டால்
    1. தனியாக இருக்கிறேன் என்று சொல்ல I live on my own
    2. இன்னொருவருடன் share பண்ணி இருக்கிறேன் என்று சொல்ல I share with one other person
    3. >இன்னும் 3 பேருடன் share பண்ணி இருக்கிறேன் என்று சொல்ல I share with three others
  6. யாரிடமாவது phone number அல்லது address கேட்க What's your phone number?/What's your address? என்று கேட்கலாம். இதையே பணிவாக கேட்க Could I take your phone number?/Could I take your address? என்று கேட்கலாம்

13 comments:

  1. தொடரட்டும் உங்கள் பணி!

    ReplyDelete
  2. Madam

    Are you from Nagercoil?

    ReplyDelete
  3. Sunitha
    Pl clarify
    Normally we are asking

    Where are you coming from ? Isn't correct?

    Could i ask

    Which part of America do u come from
    or
    Which part of America are you coming from

    Thanks for sharing Sunitha

    ReplyDelete
  4. இன்றுதான் உங்கள் ப்ளாக் வந்தேன், மிக எளிதான விளக்கங்கள், வாழ்த்துக்கள்!
    அப்படியே ஆங்கில சொற்களின் சரியான உச்சரிப்பு முறை பற்றியும் எழுதுங்களேன் (நேரம் கிடைத்தால்)
    நன்றி.

    ReplyDelete
  5. good post.very useful thanks sunitha..

    ReplyDelete
  6. Hi Priya...
    Thats an interesting question. I was expecting this question :)
    When we ask "Where do you come from?", it means that we are interested in knowing the place where the person usually resides. But when we ask "Where are you coming from?", it means that we are interested in knowing where the person was before coming here.

    So for example, if the person normally resides in Madurai and if he had traveled to Coimbatore and then to Chennai, when you ask him "Where do you come from?", he would say "Madurai". However when you ask "Where are you coming from?", he would say "Coimbatore"

    That said, nowadays, in slang, people ask both these questions interchangeably and the real meaning of the question can only be understood from the context in which the questions were asked :)

    ReplyDelete
  7. Now I understoodppa.Thanks for the definiation MissSunitha

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ha,ha,ha,ha,ha,ha.... I am still laughing out loud, seeing your comment to my post.... ha,ha,ha,ha,ha....

    ReplyDelete
  10. வகுப்பு நடப்பது இப்பத்தாங்க தெரிஞ்சுகிட்டேன் சுட்டிபொண்ணு சித்ராவையே வலிய வந்து கூப்பிட்டிருக்கீங்க.. நானும் பதிஞ்சுக்கிறேன் வகுப்புல.. நன்றி..

    ReplyDelete