Tuesday 14 September 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-4

            நம்முடைய போன பயிற்சியில் நண்பர்களை பார்த்தால் பேசவும், நலம் விசாரிக்கவும் வீட்டிற்க்கு  வந்தவரை உட்கார சொல்லி உபசாரம் செய்வது வரை பார்த்தோம்.இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் இங்கு சென்று பார்க்கவும்.
            இந்த பயிற்சியில் வீட்டிற்க்கு வந்தவரிடம் சகஜமாக பேசுவது பற்றி பார்க்கலாம்.




  1. வீட்டிற்க்கு வந்த நண்பர் எதுவும் வேண்டாம் என்று சொன்னால் அவரிடம் கொஞ்சம் juice ஆவது குடியுங்கள் என்று சொல்ல  Why don't you have some juice atleast? என்று சொல்லுங்கள்.




  2. நாம் சாப்பிடும் போது அல்லது வீட்டிற்க்கு வந்த நண்பரை மதியம் சாப்பிட அழைக்க Come on,have lunch with us என்று கூப்பிடுங்கள் அல்லது How about having lunch with us? என்று கேட்கலாம்.





  3. சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சாதம் வேணும் என்று கேட்க Rice please? என்று சுருக்கமாக கேட்கலாம். விருந்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொது சாதம் வேண்டும் என்று பணிவாக கேட்க May I have some more rice please? என்று கேட்கலாம்.





  4. நண்பர் உங்களிடம் snacks/drinks/tea/coffee ஏதாவது சாப்பிடுகிறீர்களா எனக் கேட்டால் உங்களுக்கு வேண்டும் என்றால் Yes please என்று சொல்லலாம் அல்லது 'நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்' என்று விளையாட்டாக சொல்ல I won't say no என்று சொல்லலாம்.





  5. நண்பரிடம் பேசி விட்டு விடை பெறும் போது சுருக்கமாக Bye.See you , See you soon அல்லது See you later என்று சொல்லலாம். நேரமாகிறது புறப்பட வேண்டும் என்று சொல்ல Sorry, it is getting late, I have got to leave now. See you later என்று கூறுங்கள். மீண்டும் சந்திக்கலாம் என்று சொல்ல See you again என்று சொல்லலாம். பிறகு சந்திக்கலாம் என்று சொல்ல See you later என்று சொல்லலாம்.

  6. நண்பரிடம் விடை பெறும் போது அவர் ஏதாவது தூரமாக பயணம் செய்தால் Have a nice journey என்று சொல்லலாம். இது போல் Have a niceday , Have a nice week end என்றும் சொல்லலாம்

No comments:

Post a Comment