Friday 18 February 2011

Present Continuous Tense(நிகழ்கால தொடர்வினை)

  • ஒரு செயல் தொடர்ந்து நடைபெறுவதை continuous என்கிறோம். செயலானது நிகழ்காலத்தில்ல் தொடர்ந்து நடைபெற்று வந்தால் அ்தை Present Continuous Tense என்கிறோம்.
    Example:
    1. நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
    2. நான் மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
    இதில் எழுதும் மற்றும் சாப்பிடும் செயலானது நான் பேசும் போது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  • அதே போல் ஒரு செயல் நம் கண்முன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதைத் தெரிவிக்க Present Continuous Tense உதவுகிறது
    Example:
    1. அவள் dance ஆடுகிறாள்.
    2. மழை பெய்கிறது.
Present Continuous Tense வாக்கியங்களை அமைக்க:
  • Present Continuous Tense வாக்கியங்களை அமைக்க verb உடன் ing சேர்க்க வேண்டும். 
  • verb உடன் 'ing' சேர்த்தால் அதை present participle என்கிறோம்.
  • continuous வாக்கியங்களை அமைக்க கண்டிப்பாக Auxilary verb தேவைப்படும்.
    Subject Auxiliary verb
    I am
    you are
    we are
    they are
    He is
    she is 
    It  is
  • ஒரு Present Continuous Tense வாக்கியத்தை அமைக்க

    Subject+Auxiliary verb+present participle
    (ie) is/am/are+verb+ing
  • Example:
    1. அவள் பாடிக்கொண்டு இருக்கிறாள்
      She is singing
    2. அவன் போய்க்கொண்டு இருக்கிறான்
      He is going
    3. நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்
      I am seeing
    4. நான் என்னுடைய நண்பனுக்கு email அனுப்பிக்கொண்டிருக்கிறேன்
      I am sending an email to my friend
    5. நான் அம்மாவிடம் பேசிக் கொண்டு இருக்கிறேன்.
      I am talking to my mother

7 comments: