- நிகழ்காலத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் செயலைக் குறிப்பிட simple present tense உதவுகிறது.
அலுவலகம் செல்வது,சாப்பிடுவது,பேப்பர் படிப்பது, Mail check பண்றது போன்ற வழக்கமான ,மாறாத செயல்கள் குறித்து பேசும் போது simple present tense வரும். - ஒரு வாக்கியத்தை உருவாக்க simple present tense உதவுகிறது (To make a statement)
Example:- He talks very fast
- Prem likes sweets
Simple Present Tense வாக்கியம் அமைக்கும் முறை(How to write Simple Present Tense):
- ஒரு செயலை Simple Present Tense ல் சொல்ல அந்த செயலை குறிக்கும் verbஐ மட்டும் சொன்னால் போதும்.
- உதாரணமாக, நான் கிரிக்கெட் விளையாடுகிறேன். இதில் விளையாடுவது என்னும் செயலை சொல்ல play என்ற verb இருக்கிறது. I play cricket என்று சொல்லலாம்
- ஒரு verb அதை செய்யும் நபருக்கேற்ப மாறுபடும்.Subject III person singular ஆக இருந்தால் verb உடன் 'S' சேரும்
play என்ற வினைச்சொல் personக்கு ஏற்ப மாறுவதைப் பார்க்கலாம்.Person Singular Plural I Verb Verb II Verb Verb III Verb+s Verb
I play | Ist person singular |
We play | Ist person plural |
You play | IInd person singular/Plural |
They play | IIIrd person Plural |
He plays | IIIrd person singular |
She plays | IIIrd person singular |
It plays | IIIrd person singular |
- The words am,is and are are the simple present forms of the verb 'be'
Person Singular Plural I I am We are II you are you are III He is/She is/It is They are - Example:
- I am in the garden
- we are in our bedrooms
- Our dod is black
- She is also pretty
- Computers are very expensive.
- ஒரு பொருள் இருப்பதை குறிக்க there பயன்படுகிறது.
Example:
அங்கு ஒரு மரம் இருக்கிறது எனச்சொல்ல There is a tree என்று சொல்ல வேண்டும் - Singular noun ஆக இருந்தால் there உடன் is சேர்த்தும், plural noun ஆக இருந்தால் there உடன் are சேர்த்தும் பயன்படுத்தவும்.
Example:- There is nothing to do when it rains
- There are cows outside
- There is a cat sitting on the bench
- There is a girl called priya in my class
- There மற்றும் is சேர்த்து there's என்றும் சொல்லலாம்.
Example:- There's nothing to do when it rains
- There's a cat sitting on the bench
- There's a girl called priya in my class
- அங்கு இல்லை என்று சொல்ல there isn't(is not) மற்றும் there aren't(are not) என்று சொல்லலாம்
Simple Present Tense எங்கெல்லாம் use பண்ண வேண்டும்:
- எப்பொழுதும் உண்மையாக நடக்கும் செயல்களை குறிப்பிட
- The earth goes around the sun
- Nurses take care of patients in the hospitals
- In london most stores close at 6.00PM.
- Water boils at 100 degree centigrade.
- Cats don't like water
- I come from India.
- He doesn't speak Hindi.
- We live in London.
- The sun rises in the east
- The sun sets in the west
- திரும்ப திரும்ப நடக்கும் செயல்கள் மற்றும் நம்முடைய பழக்க வழக்கங்கள் பற்றி சொல்ல(For repeated actions or habits)
- I get up at 6'oclock every day
- He usually reaches at the department at 9.00AM
- My neighbour usually practices violin at midnight.
- Many countries dumpnuclear waste underground.
- Dad jogs in the park everyday
- I dont see them very often
- திட்டமிட்ட எதிர்கால செயல்களைப் பற்றி சொல்ல(To indicate a planned future action)
- My little sister starts school tommorrow
- The train leaves in 5 minutes
- Next week I go on holiday to Paris.
- We leave Bombay early tomorrow and arrive Madras 3 hours later.