Wednesday, 22 September 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-5

            நம்முடைய போன பயிற்சிகளில் நண்பர்களை பார்த்தால் பேசவும், நலம் விசாரிக்கவும் வீட்டிற்க்கு  வந்தவரை உட்கார சொல்லி உபசாரம் செய்வதும், வந்தவரிடம் சகஜமாக பேசுவது பற்றியும்  பார்த்தோம்.இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் இங்கு சென்று பார்க்கவும்.
            இந்த பயிற்சியில் நீண்ட நாட்களாக பார்க்காத நண்பர் அல்லது உறவினரிடம் பேசுவது பற்றி பார்க்கலாம்.


  1. சின்ன வயதில் பழகிய நபரை அல்லது நண்பரை சந்திக்கும் போது "உன்னை/உங்களை நான் இதுக்கு முன்னால் எங்கேயோ பார்த்திருக்கேன்" என்று சொல்ல I have seen you somewhere  என சொல்லலாம் இதையே கொஞ்சம் மரியாதையாக சொல்ல Sir, I have seen you before  என்றும் சொல்லலாம்.



  2. நீண்ட நாட்களாக பார்க்காத நண்பரிடம் இப்போது என்ன வேலை செய்கிறார் எனக் கேட்க  What are you doing now? (or) Where are you working now? எனக் கேட்கலாம். அவர் எங்கு தங்கி இருக்கிறார் எனக் கேட்க Where are you staying? என்று கேளுங்கள்



  3. உங்கள் நண்பரிடம் உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா? எனக் கேட்க Are you married? எனக் கேட்கலாம். அவர் திருமணம் ஆகி விட்டது என சொன்னால் எப்பொழுது திருமணம் ஆனது எனக்கேட்க When did you get married? எனக்கேளுங்கள்



  4. நீங்கள் நெடுநாளாக வீட்டிற்க்கு வெளியே பார்த்த நபரிடம் திடீரென பேசும் சந்தர்ப்பம் அமைந்தால் அவரிடம் முதலில் உங்கள் பெயர் சொல்லி அறிமுகம் ஆகி கொண்டு அவரைப்பற்றி விசாரியுங்கள்
       Hello I am Sunitha.
       Your face is quite familiar to me.
       Do you live around here?

    உங்கள் முகம் மிகவும் பழகிய முகம் போல இருக்கிறது. நீங்கள் அருகில் தான் வசிக்கிறீர்களா? எனக் கேட்கலாம்.



  5. உங்கள் நண்பர் வீட்டிலோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவரின் நண்பரையோ, உறவினரையோ சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் முதலில் உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு உங்கள் நண்பரை அவருக்குத் தெரியுமா எனக் கேட்க
        Hello, I am Sunitha.
        I have seen you  before
        Are you related to Mr.Prem?
    என்று கேளுங்கள்



  6. பொழுது போகாமல் Bus/train காத்திருக்கும் போது பக்கத்தில் இருப்பவரிடம் பேச்சு கொடுக்க weaher பற்றி பேசலாம். ரொம்ப குளிராக இருக்கு எனச்சொல்ல It is too cold today, isn't it? என்று ஆரம்பிக்கலாம். யாராவது உங்களிடம் It is too cold today, isn't it? எனச்சொன்னால் ஆமாம் எனச் சொல்ல  yes, it is so என்று சொல்லுங்கள்

10 comments:

  1. present டீச்சர்,
    சின்ன செய்தியாக இருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    உங்களின் பொன்னான பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  2. உங்கள் பிளாக் மிக நன்றாக உள்ளது. இதை பிரபலப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வகுப்பிற்கு வந்தேனுங்கோ... இன்னிக்கும் நல்ல விளங்கிச்சு..

    ReplyDelete
  4. வகுப்பிற்கு வந்தேனுங்கோ... இன்னிக்கும் நல்ல விளங்கிச்சு..
    வாழ்த்துக்கள் சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
    ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
    http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

    ReplyDelete
  5. Thank you மாணவன்

    ReplyDelete
  6. Thank you எஸ்.கே.
    கண்டிப்பாக செய்கிறேன்.

    ReplyDelete
  7. Thank you ம.தி.சுதா .
    கண்டிப்பாக செய்கிறேன்.

    ReplyDelete