Monday 25 October 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-9

நண்பரிடம் அவரைப் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றி விசாரிப்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
  1. உன்னுடைய Parents என்ன செய்கிறார்கள் எனக் கேட்க What do your parents do? என்று கேட்கலாம். உன்னுடைய அப்பா என்ன செய்கிறார் அல்லது அம்மா என்ன செய்கிறார் என தனிதனியாக கேட்க விரும்பினால் What does your father do? What does your mother do? என்று கேட்கலாம்.
  2. உன்னுடைய Parents  எப்படி இருக்கிறார்கள் என்று கேட்க How are your parents? என்று கேட்கலாம். உன்னுடைய அப்பா/அம்மா  எப்படி இருக்கிறார்கள் என்று கேட்க How is your dad/mom? என்று கேட்கலாம்.வீட்டில் எல்லோரும் நலமா? என்றுக் கேட்க How is everybody at home? என்று கேட்கலாம். எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்று சொல்ல All are fine என்று சொல்லலாம்.
  3. உன்னுடைய parents எங்கே வசிக்கிறார்கள் எனக் கேட்க  Where do your parents live? என்று கேட்கலாம்
  4. உன்னுடைய தாத்தா,பாட்டி இன்னும் இருக்கிறார்களா எனக் கேட்க Are your grand parents still alive? என்று கேட்கலாம்
  5. உனக்கு அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை இருக்கிறார்களா எனக்கேட்க Do you have any brothers or sisters?  என்று கேட்கலாம்.
    1. எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் எனச் சொல்ல Yes, I have got a brother (or)  Yes I have got an elder brother என்று சொல்லலாம்.
    2. எனக்கு ஒரு தம்பி இருக்கிறார் எனச் சொல்ல Yes, I have got a younger brother என்று சொல்லலாம்.
    3. இதே போல் அக்கா இருக்கிறார் எனச் சொல்ல Yes,I have got an elder sister என்றும் தங்கை இருக்கிறார் எனச் சொல்ல Yes,I have got a younger sister என்றும் சொல்லலாம்
    4. என் கூட பிறந்தது 2 பெண்கள் என்று சொல்ல  Yes,I have got two sisters என்றும்  2 பசங்க என்று சொல்ல Yes,I have got two brothers என்றும் சொல்லலாம்.
    5. இல்லை நான் கருவேப்பிலை கொத்து மாதிரி வீட்டிற்கு ஒரே பிள்ளை என்று சொல்ல No,I am an only child எனச்சொல்லலாம்.
    1. உனக்கு திருமணம் ஆகவில்லையா எனக் கேட்க Are you single? என்று கேட்கலாம்.
    2. உனக்கு boy friend/girl friendஇருக்கிறாரா எனக்கேட்க Do you have a boy friend/girl friend? என்று கேட்கலாம்
    3. உனக்கு திருமணம் ஆகிவிட்டதா எனக்கேட்க Are you married? என்று கேட்கலாம்.
    4. யாராவது உனக்கு திருமணம் ஆகிவிட்டதா எனக்கேட்டால் ஆமாம் என்று சொல்ல  Yes, I am married எனச் சொல்லலாம்.
    5. எனக்கு நிச்சயம் ஆகிவிட்டது என்று சொல்ல I am engaged என்று சொல்லலாம்
  6. உனக்கு குழந்தை இருக்கிறதா எனக்கேட்க கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றைக் கேட்கலாம்
    1. Do you have any children?
    2. Have you got any kids?
  7. யாராவது உங்களிடம் உனக்கு குழந்தை இருக்கிறதா? எனக்கேட்டால்
    1. எனக்கு 2 குழந்தைகள் என்று சொல்ல Yes,I have two children
    2. ஒரு பொண்ணும் பையனும் என்று சொல்ல Yes I have got a boy and a girl.
    3. குழந்தை இல்லை என்று சொல்ல I dont have any children  என்று சொல்லலாம்

17 comments:

  1. அருமை உறவுமுறைகளைப்பற்றி உரையாடுவதற்கு அழகாக விளக்கி எழுதியுள்ளீர்கள் சூப்பர்
    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
    பகிர்ந்தமைக்கு நன்றி

    //தமிழரின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help
    நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்
    அலட்சியபடுத்தாமல் மறக்கமால் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்//
    முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.

    இதைப்பற்றி மேலும் தகவல் அறிய http://www.urssimbu.blogspot.com/

    நேரம் கிடைக்கும்போது நம்ம தளத்திற்கு வருகைதந்து இந்த மாணவனின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாய் இருக்குமாறு பணிவன்புடன் அழைக்கிறேன்
    http://www.urssimbu.blogspot.com/

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  2. Well noted .,Thanks Miss

    Deepavali purchase mudinthathaa Sunitha
    Ange ellaam ippo enna fashionnu solveengalaa!

    ReplyDelete
  3. Roma nalla padam melum ungal pani thodarattum
    dhinam dhinam ungal pathivugalai podungal
    Thank You

    ReplyDelete
  4. Thanks very good post
    All the best

    ReplyDelete
  5. Good Morning, Madam! How are you, Madam?

    ReplyDelete
  6. Thank you மாணவன். Vote போட்டாச்சு.
    கண்டிப்பாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்.

    ReplyDelete
  7. Thank you priya.
    தீபாவளிக்கு dress லாம் எடுத்தாச்சு. தீபாவளிக்கு கலக்கிற வேண்டியது தான்.பட்டாசு இன்னும் வாங்கல. ஒரு கைத்துப்பாக்கியாவது வாங்கிடணும். Fashion பார்த்து சொல்றேன். நீங்க purchase முடிச்சாச்சா? தீபாவளி பலகாரம் லாம் இந்த பக்கமும் கொஞ்சம் அனுப்புங்க

    ReplyDelete
  8. Thank you Uma.தமிழ்ல type பண்ண ரொம்ப நேரம் எடுக்கிறது. அதனால தினமும் பதிவு போட முடியவில்லை

    ReplyDelete
  9. Hello chitra,
    how r you?
    உங்க trip லாம் எப்படி இருந்துச்சு?. நான் ரொம்ப கவலையா இருக்கேன். என்னுடைய எல்லா postயும் பண்ணி ஒரு blogல போட்டுருக்காங்க. comments மட்டும் copy பண்ணல. எது originalனு எனக்கே சந்தேகமாய் இருக்குது. அதனால class காலவறையின்றி மூடப்படுகிறது.

    ReplyDelete
  10. Thank you ராசேசு.

    ReplyDelete
  11. பதிவுலகில் பதிவுத்திருட்டு என்பது சகஜம்தான் இதயெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துகொள்ளாதீர்கள்
    உங்களின் உண்மையான உழைப்பிற்கு நிச்சயம் பலன் இருக்கும் அதுமட்டுமல்லாமல் படிக்கும் வாசகர்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியும் எது உண்மையான பதிவு என்று

    so don't worry be happy

    படைப்பாளியாய் நமது படைப்புகள் திருடப்படுகிறது எனும்போது மிகுந்த மன உளைச்சலும் கவலையாகத்தான் இருக்கும்

    என்ன செய்வது இதுபோன்ற நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் வேறொன்றும் சொல்வதற்கில்லை
    இதயெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துகொள்ளாமல்
    மீண்டும் புது உத்வேகத்துடன் உற்சாகத்துடனும் எழுத வருவீர்கள் என்னைப்போன்ற பலரை ஏமாற்ற மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்.....

    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  12. பதிவுலகில் பதிவுத்திருட்டு என்பது சகஜம்தான் இதயெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துகொள்ளாதீர்கள்
    உங்களின் உண்மையான உழைப்பிற்கு நிச்சயம் பலன் இருக்கும் அதுமட்டுமல்லாமல் படிக்கும் வாசகர்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியும் எது உண்மையான பதிவு என்று

    so don't worry be happy

    படைப்பாளியாய் நமது படைப்புகள் திருடப்படுகிறது எனும்போது மிகுந்த மன உளைச்சலும் கவலையாகத்தான் இருக்கும்

    என்ன செய்வது இதுபோன்ற நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் வேறொன்றும் சொல்வதற்கில்லை
    இதயெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துகொள்ளாமல்
    மீண்டும் புது உத்வேகத்துடன் உற்சாகத்துடனும் எழுத வருவீர்கள் என்னைப்போன்ற பலரை ஏமாற்ற மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்.....

    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  13. @sunitha
    நன்றி சுனிதா !
    கண்டிப்பாக ! உங்களுக்கு ஸ்வீட்ஸ் கொடுக்க எனக்கும் விருப்பம் தான்;எப்படி அனுப்புவது என்று தான் தெரியவில்லை!
    ஆமாம் ;நீங்க இன்னும் இந்த கைத்துப்பாக்கி பழக்கத்தை விடவே இல்லையா(ஒரு வேளை கிளாசுக்கு ஒழுங்கா வரலைன்னா மிஸ் கைத்துப்பாக்கி காட்டி பயப்படுத்துவாங்களோ!);
    பாருங்க என் 3 வது படிக்கும் மகன் கூட பட்டாசு தான் வேண்டும் என்கிறான்!
    இங்கே சாரீஸ்ல ஆல் ஓவர் எம்ப்ரோடியரி போட்ட கிரேப் தான் பேஷன் சுனிதா
    இப்போ கர்ல்ஸ் choice எல்லாம் printed T shirt ;polo shirts ஜீன்ஸ் தான்

    ReplyDelete
  14. அடடா .,வருத்த பட வேண்டாம் சுனிதா ;கண்டிப்பாக மனதில் வலி இருக்க தான் செய்யும்;உங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொண்டு உங்களுக்கு இறைநிலை உதவ வேண்டி கொள்கிறேன் .நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் சுனிதா
    எல்லாம் எழுதி முடித்த பிறகு நீங்கள் புக் வடிவில் போடுங்கள் ;அதற்கு நாங்களும் எங்களால் முடிந்த அளவு உதவுகிறோம்
    ஓகே வா ! சரி இப்போ ஸ்மைல் பண்ணுங்க :) :)
    ஆஹா ! மிஸ் ஸ்மைலிட்டாங்க ! மிஸ் ஸ்மைலிட்டாங்க !

    ReplyDelete
  15. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு எங்களுக்கு ஆங்கிலம் எழிமையாக கற்றுத்தர நீங்க எடுக்கும் முயற்சிகளுக்கு மிக்க நன்றி .நீங்கள் அனுப்பும் பாடங்களை தவறாது படிக்கிறேன் .பலனும் அடைகிறேன் .நன்றி

    ReplyDelete