Sunday 30 January 2011

Study English every Day-30/01/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
  1. இது எனக்கு கட்டுப்படி ஆகாது.
    Sorry, I can't afford it.
  2. எனக்கு குறை கூற ஒன்றுமில்லை.
    I have no complaints (or)
    I don't have any complaint
  3. எனக்கு ஒன்றும் வேண்டாம்.
    I don't want anything. (or)
    I want nothing.
  4. நீ சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
    I can't accept what you say
  5. நீ இதை அனுமதிக்கக் கூடாது.
    You should not allow this
  6. யாரையும் ஏமாற்றாதே.
    Don't cheat anybody
  7. மற்றவர்களிடம் குறை காணாதே.
    Don't find fault in others.
  8. இதை நான் எப்படி செய்வேன்.
    How can I do this
  9. இதை என்னால் செய்ய இயலாது.
    I can't do this
  10. எனக்கு பாடத் தெரியாது
    I don't know how to sing
 Try Yourself:
      கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
  1. அவளுக்கு விடுமுறை கிடைக்கவில்லை.
  2. எவரிடமும் கடிந்து பேசாதே
  3. நீங்கள் கூறுவதை நான் முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்.
  4. அப்பா சொல்கிறபடி செய்.
  5. எனக்கு ஒன்றும் மறுப்பு இல்லை.
  6. என்னிடம் சில்லறை இல்லை.
  7. ஆமாம் அது உண்மை தான்.
  8. தப்பாக நினைக்க வேண்டாம்.
  9. கண்டபடி பேசாதே.
  10. என்னால் இனி காத்திருக்க இயலாது.

9 comments:

  1. பயனுள்ள பாடங்களை பகிர்ந்தமைக்கு நன்றிங்க மேடம்

    உங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. thanks mam.

    "காலை வாரி விட்ராதடா"..
    இதை எப்படி மேடம் இங்கிலிஷ்ல சொல்றது.

    ReplyDelete
  3. afford - என்னும் வார்த்தையை வேறு எந்த பொருளிலாவது பயன் படுத்த இயலுமா மேடம்.

    ReplyDelete
  4. படித்து விட்டோம், நன்றி

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Present, Madam!!!!!!!!!

    How are you, Madam?

    ReplyDelete
  7. Thank you மாணவன்,கமலேஷ்,salihoo,Chitra,பலே பிரபு

    ReplyDelete
  8. கமலேஷ் "காலை வாரி விட்ராதடா" இங்கிலிஷ்ல சொல்றதுக்கு Don't pull my leg off என்று சொல்லலாம்.

    ReplyDelete