Monday 24 January 2011

Study English every Day-24/01/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
  1. ஜன்னலை கொஞ்சம் திறந்து வைக்கிறீர்களா?
    Would you please open the window?
  2. அவர்கள் ஒய்வு எடுத்துக்கொள்ளட்டும்.
    Let them relax
  3. நீ இதை நம்பவில்லையா?
    Don't you believe it?
  4. இது நடக்காது
    It is impossible
  5. நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.
    Help yourself
  6. நீ எப்பொழுது எழுந்திருக்கிறாய்?
    When do you wakeup?
  7. நீங்கள் இரவு சாப்பாடு எப்பொழுது சாப்பிடுவீர்கள்?
    When do you have your dinner?
  8. நாங்கள் இரவு சாப்பாடு 8.30க்கு சாப்பிடுவோம்.
    We have our dinner at half past 8.
  9. உன்னுடைய பிறந்த நாள் எப்பொழுது?
    When is your birthday?
  10. நாங்கள் மிகவும் முன்னதாக வந்துவிட்டோம்.
    We are too early
  11. நமக்கு நிறைய நேரம் இருக்கிறது.
    We have enough time.
Try Yourself:
      கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
  1. இன்று என்ன தேதி?
  2. அவர் ஆபிஸை விட்டு எத்தனை மணிக்கு வெளியே வருவார்?
  3. அவர் 6 மணிக்கு ஆபிஸை விட்டு வெளியே வருவார்.
  4. அவர் சரியான நேரத்திற்கு வந்துவிட்டார்.
  5. நீங்கள் அரைமணிநேரம் தாமதமாக வந்தீர்கள்.
  6. படுக்கையிலிருந்து எழும்பும் நேரமாகிவிட்டது.
  7. காலம் எவ்வளவு வேகமாக பறக்கிறது.
  8. நேரத்தைப் பயன்படுத்திக் கொள்.
  9. ஆசிரியர் பள்ளிக்கு எத்தனை மணிக்கு வருவார்?
  10. அவர் பள்ளிக்கு ஒன்பது மணிக்கு சற்று முன்பு வருவார்

10 comments:

  1. பகிர்வுக்கு நன்றிங்க மேடம்

    ReplyDelete
  2. உங்கள் பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துகள், பாடம் நடத்தும் விதம் ரொம்ப அருமை.

    அபு மர்யம் - துபை (U.A.E)

    ReplyDelete
  3. மிக்க நன்றி! ஆங்கிலத்தை தங்கள் வலைப்பூவின் வாயிலாக எளிமையாக அறிய தருகிறீர்கள்.. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நன்றி மேடம்.

    உங்களை நம்பி என் தங்கட்சிகிட்ட வாய விட்டுட்டேன்.

    இப்ப என்னடான்னா அவ "சுண்டைக்கா "வுக்கு இங்கிலிஷ்ல என்னான்னு சொல்லுன்னு சொல்லி
    என் உயிரை வாங்குறா...

    கொஞ்சம் உதவி பண்ணுங்க மேடம்.

    ReplyDelete
  6. Thank you Chitra,மாணவன்,அபுமர்யம்,தங்கம் பழனி,புதுவை சிவா
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  7. கமலேஷ்,
    என்மேல் நம்பிக்கை வச்சு உங்க தங்கச்சிகிட்ட சவால் விட்டதுக்கு ரொம்ப Thanks.சுண்டைக்கா "வுக்கு இங்கிலிஷ்ல Cherry eggplant (or) Pea eggplant ன்னு சொல்லலாம்.
    pea->பட்டாணி
    eggplant->கத்திரிக்காய்
    பட்டாணீ size ல கத்திரிக்காய் shape ல இருக்கதால pea eggplant னு name .

    ReplyDelete
  8. I am very interested in your blog. Keep writing.

    ReplyDelete