Thursday, 30 September 2010

ஆங்கில இலக்கணம்-Conjunction( இணைப்புச் சொல் )

  • சொல் அல்லது சொற்றொடரை இணைக்கும் சொல் conjunction எனப்படும்
  • It is a word which joins or connects words or phrases.
  • Example:



    1. He studied well but he failed.(அவன் நன்கு படித்தான் ஆனாலும் fail ஆகிவிட்டான்)
      இதில் நன்கு படித்தது ஒரு வாக்கியம்.அவன் fail ஆகி விட்டான் என்பது ஒரு வாக்கியம். இந்த 2 வாக்கியங்களை இணைக்கும் ஆனாலும் என்பது இணைப்புச்சொல்.
    2. SAm is playing football and Eric is reading a book
    3. Meera phoned her friend Anna, but she wasn't at home
    4. Would you like to go to the movies or shall we go for a burger?
commonly used Conjunction
ConjunctionMeaning
after பிறகு
although இருந்தாலும் கூட
and உம்/மேலும்
as   போல/ஆதலால்
as soon as உடனே விட
because, since    ஆதலால்
before  முன்பு
but  ஆனால்
either or இது அல்லது அது
even if   இருந்த போதிலும்
eventhough  இருந்தாலும் கூட
for ஆக/ஏனென்றால்
if   ஆல்/இருந்தால்
neither nor  இதுவுமில்லை அதுவுமில்லை
no sooner than  உடனே
oncondition that   நிபந்தனையின் பேரில்
only மாத்திரம்
provided thatஇருக்கும்பட்சத்தில்
so thatஎன்பதற்காக
than   காட்டிலும்
thoughஇருந்தாலும் கூட
unless ஆல்/ஒழிய
until வரை
whenபொழுது
whetherஉண்டா என்று
while பொழுது
Conjunction Word And க்கு பதிலாக‌
  • சில இடங்களில் and க்கு பதிலாக வேறு Conjunction ம் பயன்படுத்தலாம்
  • Example:


    1. Dad Washed the car and he polished it
      Dad not only washed the car, but he also polished it
    2. Nivi baked the cake and she decorated it.
      Nivi not only baked the cake but she decorated as welll.
    3. They visited Sydney and they also visited America and LOndon
      They visited Sydney as well as America and London
Conjunction Word But க்கு பதிலாக‌
  • சில இடங்களில் For க்கு பதிலாக வேறு Conjunction ம் பயன்படுத்தலாம்
  • Example:


    1. Grandpa is old but very fit
      Although Granpa is old,he's very fit
    2. The weather was sunny but cold
      Eventhough the weather was sunny,it was cold
    3. The bus id slower than the train but it's cheaper.
      While the bus is slower than the train,its cheaper
    4. This computer is very old but reliable
      Though this computer is very old, it is very reliable
Conjunction Word or க்கு பதிலாக‌
  • There are other words for or that name choices or join two sentences
  • Example:


    1. The movie wasn't funny. It wasn't interesting
      The movie was neither funny nor interesting
    2. You can do your homework now. or you can do your homework after dinner
      You can do your homework either now or after dinner.
    3. We could walk or we could take a taxi.
      We could walk, or else take a taxi

Tuesday, 28 September 2010

ஆங்கில பேச்சு பயிற்சி-Video Excercise 2

Watch this video and pay attention to the way they engage in conversation. Incase you dont understand what they talk, read the subtitle given below and watch the video again..

Subtitles 

Lady: Well Meyers. How are you holding up?

Meyers: Fine... fine... I had a very interesting topic buzzled out.

Lady: Good. Now What more can I tell you about the company or the position?

Meyers: I am Pretty clear about the job itself. But I would like to know something about the company policies.

Lady: Go Ahead. Thats what I am here for

Meyers: Great. As I told you earlier, I have been doing some work on my own. Does your company have an policy on freelancing.

Lady: Yes we do. Generally we require that our employees limit freelance work to projects unrelated to the company

Meyers: Where do you draw the line?
Lady: For example giving motivational speeches is fine on the other hand developing advertising campaigns for other companies will be unacceptable

Meyers:Okay. That makes sence. You mentioned Europe earlier. Do you have an idea of how much time I would be travelling

Lady: We are expanding in to new markets. So to begin with I would expect frequent trips to europe atleast once a month

Meyers: How long will each trip lost?

Lady: I couldnt really say until we are more deeply involved.

Meyers: I am just looking for a ballpark figure? (ballpark figure means a rough estimate)

Lady: In the beginning,as you developing new accounts I would say the trips will lost from one to two weeks.

Meyers: So I would be spending half the year travelling

Lady: Thats just starting out. I would say with in 5 or 6 months we have things set up so
that you can pull back and let your subordinates handle most of the easy travel.

Meyers: That sound fine. Could we talk about benefits for a moment?

Lady: 0fcourse. Cool beans offers a full range of health benefits as well as stock options for employees.

Meyers: Is there a pension program?

Lady: No. Not a pension per-se (Latin word meaning "in itself") but we do offer a four-oh-one K (401k) plan

Meyers: Is there any matching of contributions on the companys part?

Lady: Yes upto 5 percent(%) of your salary.

Meyers: And when do the benefits kick in?

Lady: With the exception of the 401k plan, you would be eligible, the day you start working here.

Meyers: What about the 401k?

Lady: Enrollment in that is quarterly. So you would be able to enroll with in 3 months, at the most, from the date of hire.

Meyers: Okay and finally, can you tell me about your vacation policy?

Lady: Full time employees receive 2 weeks paid vacation after the first year. After 5 years it goes upto 3 weeks

Meyers: I think that answeres most of my questions

Lady: I will have Willer get you a copy of employee manual. It outlines all the benefits and explains company policies. You can review at you leasure.

Meyers: Thank you. If other questions occur to me, may I call you?

Lady: Ofcourse. Call me anytime

Meyers: Thakyou very much for your time. Will you be getting touch with me or shall I call you

Lady: We will contact you within 2 weeks

Meyers: Fine. I will look forward to hear in from you

Lady: Thanks for coming in Meyers. I have enjoyed talking to you

Meyers: I enjoyed it too. I hope to see you again. Good bye

Lady: Goodbye
 

Sunday, 26 September 2010

ஆங்கில இலக்கணம்-Verb( வினைச்சொல் )

Verb:
  • It is a word which says something about the noun. It tells us what did the noun do.
  • Noun செய்யும் செயல்களை வினைச்சொல் என்கிறோம்.
    Example:
        Anand is Playing foot ball ( Anand football விளையாடுகிறான்)
    இதில் விளையாடுகிறான் என்பது verb ஆகும். இதை போல் காலையில் படுக்கையிலிருந்து எழுவது, குளிப்பது, சாப்பிடுவது, நடப்பது, பேசுவது சிரிப்பது, தூங்குவது இவை அனைத்தும் செயல்களாகும்.இவற்றை சொல்வது வினைச்சொல்(verb)
  •  ஒரு வினைச்சொல்லின் அர்த்தம் அச்செயலைச் செய்யும் நபருக்கேற்ப மாறுபடும்.
    Example

    I walkநான் நடக்கிறேன்
    you walkநீ நடக்கிறாய்
    They walkஅவர்கள் நடக்கிறார்கள்
    We walkநாங்கள் நடக்கிறோம்
    இதில் walk என்ற verb அச்செயலை செய்பவருக்கு ஏற்ப நடக்கிறேன், நடக்கிறாய், நடக்கிறார்கள், நடக்கிறோம் என மாறி வருகிறது
Types Of Verbs:
  1. Regular Verb 
  2. Irregular Verb 
1.Regular Verb:
  • A verb is said to be regular when it forms the past tense by adding 'ed' to the present or 'd' if the verb ends in 'e'. 
  • கடந்த கால செயல்களை குறிக்க regular verb உடன் ed மட்டும் சேர்த்தால் போதும்.
    Example:
    Ask Advice call cry collect fail join
  • கீழே உள்ள Tableல் regular verb list உள்ளது. நேரம் கிடைக்கும் போது படித்து நினைவில் வைத்துக்கொள்ளவும். பேசும் போது இந்த verbகளை use பண்ணி கொள்ளவும்.
    Commonly used Regular Verbs
    Askகேள்
    Announceதெரிவி
    Agreeஒத்துக்கொள்
    Acceptஏற்றுக்கொள்
    Admitஒப்புக்கொள்
    Appearதோன்று
    Adviceஅறிவுரை வழங்கு
    Arrangeஅடுக்கி வை
    Aimகுறிவை
    Appointநியமி
    Arriveவந்தடை
    Argueவிவாதி
    Attackதாக்கு
    Abscondதலைமறைவாகு
    Actநடி
    Admireமெச்சு
    Advanceமுன்னேறு
    Affectபாதிக்கும்படி செய்
    Borrowகடன் வாங்கு
    Believeநம்பு
    Blameதிட்டு
    Botherகவலை கொள்
    Bewareஜாக்கிரதை
    callஅழை
    Considerகருது
    Changeமாற்று
    Cheatஏமாற்று
    Criticiseகுறைகூறு
    Cryஅழு
    Captureகைப்பற்று
    Carryசுமந்து செல்
    Collectசேகரி
    Continue தொடர்ந்து செய்
    Constructகட்டு
    Clashமோது
    Commenceஆரம்பி
    Compensateஈடுகட்டு
    Calculateகணக்கிடு
    canvass ஆதரவு தேடு
    Cautionஎச்சரிக்கைசெய்
    Clarifyதெளிவாக்கு
    Challangeசவால் விடு
    Communicateதெரிவி
    Closeமூடு
    Consultக‌லந்து ஆலோசி
    Countஎண்ணு
    Chaseதுரத்து

Thursday, 23 September 2010

ஆங்கில Vocabulary பயிற்சி-2(Vocabulary related with weather)

            ஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் சேர்ந்து தான் sentence /conversation ஆகிறது. இந்த பயிற்சியில் நாம் ஆங்கிலத்தில் தங்கு தடையின்றி பேசுவதற்கு தேவையான வார்த்தைகள் படிக்க இருக்கிறோம். இதில் பல உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவையாக இருக்கலாம். தெரிந்தது எனினும் ஒரு முறை படித்து கொள்ளவும்.
           இன்றைய பயிற்சியில் மழை, வெயில், பனி போன்ற கால நிலைகளை எவ்வாறு ஆங்கிலத்தில் சொல்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
Vocabulary related with weather
Rainமழை
Snowபனிமழை
fogமூடுபனி
iceபனிக்கட்டி
Sunசூரியன்/வெயில்
Sunshineசூரியஒளி/இனியவானிலை
Cloudபுகைமேகம்/பனிப்படலம்
Mistபார்வையை மறைக்கும் படலம்/மூடுபனி
Hailஆலங்கட்டி மழை
Windகாற்று
Breezeதென்றல்
Stormபுயல்/சூறாவளி
Thunderstormஇடிமின் புயல்
Galeபுயல்/கடுங்காற்று
Tornadoசூறாவளி
Hurricaneசூறாவளி/புயற்காற்று
Frostஉறைபனி
Rainbowவானவில்
Sleetஆலங்கட்டி மழை
floodவெள்ளப்பெருக்கு
Drizzleமழைத்தூறல்
Raindropமழைத்துளி
Snowflakeபனிப்படலம்
Hailstoneஆலங்கட்டி
Windyகாற்றோட்டமுள்ள
cloudyபுகைபோன்ற
Foggyமூடுபனி கவிந்த
Mistyமூடுபனி சூழ்ந்த
icyபனிக்கட்டியாலான
Frostyஉறைபனியால்
Stormyஅடிக்கடி புயல்வருகின்ற
dryநீர்ப்பசையற்ற
Wetஈரம்
Hotசூடாக
Coldகுளிர்
Chillyகடுங்குளிரான
Rainyமழைபெய்கிற
Sunnyவெயிலுள்ள
Meltஉருகிய
Freezeபனி உறையும் நிலை
Thawஉருகு
Temperatureதட்ப வெப்ப நிலை
Thermometerவெப்பம்அளந்து காட்டுங்கருவி
Barometerகாற்றழுத்தமானி
Weather forecastவானிலை முன் கணிப்பு
Droughtவறட்சி
Rainfallமழைப்பொழிவு
Heatwaveஅனல்
Global warmingபூமிவெப்பமாதல்

Wednesday, 22 September 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-5

            நம்முடைய போன பயிற்சிகளில் நண்பர்களை பார்த்தால் பேசவும், நலம் விசாரிக்கவும் வீட்டிற்க்கு  வந்தவரை உட்கார சொல்லி உபசாரம் செய்வதும், வந்தவரிடம் சகஜமாக பேசுவது பற்றியும்  பார்த்தோம்.இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் இங்கு சென்று பார்க்கவும்.
            இந்த பயிற்சியில் நீண்ட நாட்களாக பார்க்காத நண்பர் அல்லது உறவினரிடம் பேசுவது பற்றி பார்க்கலாம்.


  1. சின்ன வயதில் பழகிய நபரை அல்லது நண்பரை சந்திக்கும் போது "உன்னை/உங்களை நான் இதுக்கு முன்னால் எங்கேயோ பார்த்திருக்கேன்" என்று சொல்ல I have seen you somewhere  என சொல்லலாம் இதையே கொஞ்சம் மரியாதையாக சொல்ல Sir, I have seen you before  என்றும் சொல்லலாம்.



  2. நீண்ட நாட்களாக பார்க்காத நண்பரிடம் இப்போது என்ன வேலை செய்கிறார் எனக் கேட்க  What are you doing now? (or) Where are you working now? எனக் கேட்கலாம். அவர் எங்கு தங்கி இருக்கிறார் எனக் கேட்க Where are you staying? என்று கேளுங்கள்



  3. உங்கள் நண்பரிடம் உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா? எனக் கேட்க Are you married? எனக் கேட்கலாம். அவர் திருமணம் ஆகி விட்டது என சொன்னால் எப்பொழுது திருமணம் ஆனது எனக்கேட்க When did you get married? எனக்கேளுங்கள்



  4. நீங்கள் நெடுநாளாக வீட்டிற்க்கு வெளியே பார்த்த நபரிடம் திடீரென பேசும் சந்தர்ப்பம் அமைந்தால் அவரிடம் முதலில் உங்கள் பெயர் சொல்லி அறிமுகம் ஆகி கொண்டு அவரைப்பற்றி விசாரியுங்கள்
       Hello I am Sunitha.
       Your face is quite familiar to me.
       Do you live around here?

    உங்கள் முகம் மிகவும் பழகிய முகம் போல இருக்கிறது. நீங்கள் அருகில் தான் வசிக்கிறீர்களா? எனக் கேட்கலாம்.



  5. உங்கள் நண்பர் வீட்டிலோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவரின் நண்பரையோ, உறவினரையோ சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் முதலில் உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு உங்கள் நண்பரை அவருக்குத் தெரியுமா எனக் கேட்க
        Hello, I am Sunitha.
        I have seen you  before
        Are you related to Mr.Prem?
    என்று கேளுங்கள்



  6. பொழுது போகாமல் Bus/train காத்திருக்கும் போது பக்கத்தில் இருப்பவரிடம் பேச்சு கொடுக்க weaher பற்றி பேசலாம். ரொம்ப குளிராக இருக்கு எனச்சொல்ல It is too cold today, isn't it? என்று ஆரம்பிக்கலாம். யாராவது உங்களிடம் It is too cold today, isn't it? எனச்சொன்னால் ஆமாம் எனச் சொல்ல  yes, it is so என்று சொல்லுங்கள்

Monday, 20 September 2010

ஆங்கில இலக்கணம்-Preposition

  • ஒரு வார்த்தையை இன்னொரு வார்த்தையுடன் இணைக்க preposition பயன்படுகிறது. (Prepositions are words that shows connection between other words).
  • Exampe:"நான் புரியாத பாடம் பற்றி படிக்க மாலையில் ஆசிரியர் வீட்டிற்க்கு சென்றேன்" இந்த வாக்கியத்தில் நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் 'பற்றி', படி'க்க', வீட்டிற்'க்கு', மாலை'யில்' போன்றவை preposition ஆகும்.
  • Preposition என்றால் முன்னிடைச்சொல் pre என்றால் 'முன்னால்' position என்றால் 'இடம்' என்று பொருள்
  •  Prepositionகள் பெரும்பாலும் Noun க்கு முன்னால் இடம் பெறுகின்றது. எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்கும் போது இந்தியாவிலிருந்து என சொல்ல From India என்று சொல்லலாம். அதே மாதிரி இந்தியாவுக்கு என சொல்ல To India என்று சொல்ல வேண்டும்
In and At:
  • பொதுவாக பெரிய நகரங்களைக் குறிப்பிடும்போது In என்பதையும், சிறிய ஊர்களைக் குறிப்பிடும் போது At என்பதையும் உபயோகிக்க வேண்டும் Example: In Chennai, At Nagercoil 
  • காலை, மாலை பற்றி குறிப்பிட In உதவுகிறது
    Example:

    1. In the morning ( காலையில் )
    2. In the evening ( மாலையில் )
    3. In my house ( என்னுடைய வீட்டில் )
  • மாதங்கள் மற்றும் கால நிலைகளை பற்றி பேசும் போது In பயன்படுகிறது. Examle: In January, In December, In April , In spring, In summer,In autumn, In winter
  • At என்பதை இடத்தைப் பற்றி குறிப்பிடவும், நேரத்தைப்பற்றி குறிப்பிடவும் பயன்படுத்தலாம்
    Example :

    1.  at Nagercoil (நாகர்கோவிலில்)
    2.  at 10'o clock ( 10 மணிக்கு/10 மணியளவில் )
    3.  at night ( இரவில் )

அடிக்கடி பேச்சு வழக்கில் use ஆகும் prepositions கீழே Table ல் கொடுக்கப்பட்டுள்ளது. சிரமம் பார்க்காமல் படித்து பேசும் போது பயன்படுத்திக்கொள்ளவும். 
Prepositions
PrepositionMeaning
Atஇல்
Afterபிறகு
Aboutபற்றி
Alongவழியே/ஊடே
Amongமத்தியில்
Amongமத்தியில்
Amongமத்தியில்
Aroundசுற்றிலும்
Againstஎதிராக
Asபோல
Aboveமேலே
Byஆல்/மூலமாக
Beforeமுன்னால்
Belowஅடியில்
Besideபக்கத்தில்
Betweenஇடையில்
Beyondஅப்பால்
Beneathஅடியில்
Exceptதவிர
Inஇல்/உள்ளே
Insideஉட்பக்கத்தில்
Forக்கு/க்காக
Fromஇருந்து
Likeபோல
Ofஉடைய
Onமேலே
Toக்கு
Throughமூலமாக
Towardsநேராக/சார்பாக
Uponமேலே
Underகீழே
Nearஅருகில்
Duringபொழுது
Withஉடன்/ஓடு
Withoutஇல்லாமல்
Withinஉள்/உள்ளே
Prepositions of place 
            சில prepositions இடத்துடன் தொடர்புடைய செயல்களை குறிப்பிட பயன்படுகிறது. under, underneath, over,  inside, beside, in , in front of, on top of, in the middle of போன்றவை இடத்தை பற்றி குறிப்பிட பயன்படுகிறது
Example:
  1. Nivi was sitting under a tree ( Nivi மரத்தின் அடியில் உட்கார்ந்து இருந்தாள்)
  2. There's a woodenfloor underneath the carpet (Carpetக்கு அடியில் மரத்திலான தரை உள்ளது)
  3. Some birds flew over  their houses
  4. John and smith were hiding inside the wardrobe.
  5. There was a tree beside the river
  6. I have a friend who lives in Chennai.
  7. A big truck parked in front of their car
  8. The cat jumped on top of the cupboard

Sunday, 19 September 2010

ஆங்கில பேச்சு பயிற்சி-Video Excercise1

           Watch this video and pay attention to the way he pronounces the words we normally use. Incase you dont understand what he says, read the subtitle given below and watch the video again.

           ஆங்கிலத்தில் பேசுவதற்க்கு grammar படித்தால் மட்டும் போதாது. ஆங்கிலத்தில் பேசி பழகுவது மிகவும் முக்கியம். நாம் ஒருவரிடம் ஆங்கிலத்தில் பேசும் போது அவர் பேசுவது நமக்கு புரிய வேண்டும் நாம் பேசுவது அவ்ருக்கு புரிய வேண்டும் அதற்கு தான் இந்த பேச்சு பயிற்சி. Videoவில் பேசுவது புரிகிறதா என பாருங்கள் இல்லை என்றால் videoவை ஓட விட்டு கீழே உள்ள subtitles i படியுங்கள். அப்புற்ம் videoவை மட்டும் ஒட விட்டு subtitles பார்க்காமல் பேசி பழகுங்கள்.






Subtitles



Hello Again, This is Michael
Today's lesson is a simple conversation lesson using five words
What.. Where.. Who.. Why.. and How..


This is a conversation lesson, short conversation lesson, but also a past-tense lesson. 


For example,


What - What did you do yesterday?
I went to beach...


Where - Where did you go?
I went to Venice, in Southern California...


Who - Who did you go with?
I went with my friends...


Why - Why did you go?
I love the beach. It was a beautiful day...


How - How was it?
I was very warm... crowded; but very relaxing...


Now follow-up
How about you? What did you do yesterday?
I went for a walk..


Where?
In my neighbourhood


With who?
With or by myself


Why?
It was my day-off and it was a beautiful day


How was it?
It was very relaxing and good exercise may be


Thats it.. Who Where.. Excuse me
What, Where, Who, Why , How


Five question words for english learners? And these can also be used for future tense too
For example,


What will you do today? What will you do tonight?
Where will you go?
Who with?
Why?
and How?


So, weather it is past or future or the present tense, these are five useful words for simple english conversation
Thank you for listening and see you next time
Bye bye.. so long



Wednesday, 15 September 2010

ஆங்கில Vocabulary பயிற்சி-1 (Vocabulary related with family and Marriage)

           ஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் சேர்ந்து தான் sentence /conversation ஆகிறது. இந்த பயிற்சியில் நாம் ஆங்கிலத்தில் தங்கு தடையின்றி பேசுவதற்கு தேவையான வார்த்தைகள் படிக்க இருக்கிறோம். இதில் பல உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவையாக இருக்கலாம். தெரிந்தது எனினும் ஒரு முறை படித்து கொள்ளவும்.
            இன்றைய பயிற்சியில் குடும்பத்தில், உறவுகளில் உள்ளவர்களை எவ்வாறு ஆங்கிலத்தில் அழைப்பது,உறவு முறைகளை எவ்வாறு ஆங்கிலத்தில் சொல்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
 

Vocabulary related with the family
Fatherஅப்பா
Motherஅம்மா
Sonமகன்
Daughterமகள்
Parentபெற்றோர்
Childகுழந்தை
Husbandகணவர்
Wifeமனைவி
Brotherசகோதரன்
Sisterசகோதரி
Uncleமாமா/சித்தப்பா
Auntyமாமி/அத்தை/சித்தி
Nephewஉடன்பிறந்தார் மகன்( சகோதரன்/சகோதரி மகன்)
Nieceஉடன்பிறந்தார் மகள்( சகோதரன்/சகோதரி மகள்) 
Relationசொந்தம்/உறவு
Relativeசொந்தக்காரங்க
Twinஇரட்டைக் குழந்தைகளுள் ஒன்று
Grandfather/Granddad/Grandpaதாத்தா
Grandmother/Granny/Grandmaபாட்டி
Grandparentபெற்றோரைப் பெற்றவர்
Grandsonபேரன்
Grand daughterபேத்தி
Grand childபேரக்குழந்தைகள்
Cousinஅத்தை/மாமா/சித்தப்பா/பெரியப்பா குழந்தைகள்
God fatherஞானத்தகப்பன்
Godmohterஞானத்தாய்
Stepfatherதாயின் கணவன்
Stepmotherதந்தையின் மனைவி/மாற்றாந்தாய்
Stepsonகணவன்/மனைவியின் மகன்
Stepdaughterகணவன்/மனைவியின் மகள்
Stepbrother/half-brotherமாற்றாந்தந்தை/மாற்றாந்தாயின் மகன் 
Stepsister/half-sisterமாற்றாந்தந்தை/மாற்றாந்தாயின் மகள்

 
Vocabulary related with the marriage
Singleதிருமணமாகாதவர்
Engagedநிச்சயம் செய்யபட்ட
Marriedதிருமணம் ஆன
Separetedபிரிந்து தனிதனியாக வாழ்பவர்
Divorsedவிவாகரத்தான
Marriage/Weddingதிருமணம்
Brideமணமகள்
Bridegroomமணமகன்
Fianceநிச்சையிக்கப்பட்ட ஆண்
Fianceeநிச்சையிக்கப்பட்ட பெண்
Boyfriendகாதலிக்கும் பையன்
Girlfriendகாதலிக்கும் பெண்
Mother-in-lawமாமியார்
Father-in-lawமாமனார்
Son-in-lawமருமகன்
Daughter-in-lawமருமகள்
Sister-in-lawநாத்தனார்
Brother-in-lawகணவன்/மனைவியின் அண்ணன்/தம்பி
Adoptedதத்து எடுத்த
Widowவிதவை
Widowerமனைவியை இழந்தவர்
Infantபிறந்த குழந்தை/7 வயதுக்கு உட்பட்ட குழந்தை
Toddlerதளிர்நடை நடக்கும் குழந்தை
Note: 
  1. Grandfather என்பதை சுருக்கி Grand'pa எனவும், Grandmother என்பதை சுருக்கி Grand'ma எனவும் கூறலாம்.
  2. Father என்பதற்கு dad அல்லது daddy எனவும், Mother என்பதற்கு mom அல்லது mummy எனவும் கூறலாம்.
  3. ஆங்கிலத்தில் சித்தப்பா,பெரியப்பா,மாமா என்ற எல்லா ஆண் உறவையும் Uncle என்று தான் கூப்பிட வேண்டும். அது போல சித்தி, பெரியம்மா, அத்தை, மாமி என்ற எல்லா பெண் உறவையும் Aunt அல்லது Aunty  என்று  கூப்பிட வேண்டும். 
  4. எந்த ஆணையும் மரியாதையுடன் அழைக்க Sir என்றும், பெண்ணை மரியாதையுடன் அழைக்க Madam அல்லது Mam என்றும் சொல்ல வேண்டும்.
  5. தாயின் உடன்பிறந்தவர்களுடைய குழந்தைகள் மற்றும் தந்தையின் உடன்பிறந்தவர்களுடைய குழந்தைகளை Cousin என்று தான் சொல்ல வேண்டும். Cousin brother அல்லது Cousin sister என்று கண்டிப்பாக சொல்லக்கூடாது.
  6. Husband ஐ Hubby என்றும் சொல்லலாம்.

Tuesday, 14 September 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-4

            நம்முடைய போன பயிற்சியில் நண்பர்களை பார்த்தால் பேசவும், நலம் விசாரிக்கவும் வீட்டிற்க்கு  வந்தவரை உட்கார சொல்லி உபசாரம் செய்வது வரை பார்த்தோம்.இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் இங்கு சென்று பார்க்கவும்.
            இந்த பயிற்சியில் வீட்டிற்க்கு வந்தவரிடம் சகஜமாக பேசுவது பற்றி பார்க்கலாம்.




  1. வீட்டிற்க்கு வந்த நண்பர் எதுவும் வேண்டாம் என்று சொன்னால் அவரிடம் கொஞ்சம் juice ஆவது குடியுங்கள் என்று சொல்ல  Why don't you have some juice atleast? என்று சொல்லுங்கள்.




  2. நாம் சாப்பிடும் போது அல்லது வீட்டிற்க்கு வந்த நண்பரை மதியம் சாப்பிட அழைக்க Come on,have lunch with us என்று கூப்பிடுங்கள் அல்லது How about having lunch with us? என்று கேட்கலாம்.





  3. சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சாதம் வேணும் என்று கேட்க Rice please? என்று சுருக்கமாக கேட்கலாம். விருந்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொது சாதம் வேண்டும் என்று பணிவாக கேட்க May I have some more rice please? என்று கேட்கலாம்.





  4. நண்பர் உங்களிடம் snacks/drinks/tea/coffee ஏதாவது சாப்பிடுகிறீர்களா எனக் கேட்டால் உங்களுக்கு வேண்டும் என்றால் Yes please என்று சொல்லலாம் அல்லது 'நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்' என்று விளையாட்டாக சொல்ல I won't say no என்று சொல்லலாம்.





  5. நண்பரிடம் பேசி விட்டு விடை பெறும் போது சுருக்கமாக Bye.See you , See you soon அல்லது See you later என்று சொல்லலாம். நேரமாகிறது புறப்பட வேண்டும் என்று சொல்ல Sorry, it is getting late, I have got to leave now. See you later என்று கூறுங்கள். மீண்டும் சந்திக்கலாம் என்று சொல்ல See you again என்று சொல்லலாம். பிறகு சந்திக்கலாம் என்று சொல்ல See you later என்று சொல்லலாம்.

  6. நண்பரிடம் விடை பெறும் போது அவர் ஏதாவது தூரமாக பயணம் செய்தால் Have a nice journey என்று சொல்லலாம். இது போல் Have a niceday , Have a nice week end என்றும் சொல்லலாம்

Saturday, 11 September 2010

ஆங்கிலத்தில் கேள்வி கேட்க‌ & பதில் சொல்ல‌

           ஆங்கிலத்தில் பேசும் பொது நமக்கு வரும் doubt களை கேள்விகளாய் கேட்க கீழே உள்ள short questions i படித்து பேசும் போது use பண்ணி பழகவும்.
  1. அது என்ன?
    What is that?
  2. யார் அது?
    Who is that?
  3. எதற்கு/எதற்காக?
    What for?
  4. எது?
    Which one?
  5. அடுத்தது என்ன‌?
    What next?
  6. ஏன் கூடாது?
    Why not?
  7. ஏன் அப்படி?
    Why so?
  8. எவ்வளவு நேரம்?
    How long?
  9. எவ்வளவு தூரம்?
    How far?
  10. எவ்வளவு?
    How much?
  11. எத்தனை?
    How many?
  12. உனக்குத்தெரியுமா?
    Do you know?
  13. உனக்குத்தெரியாதா?
    Dont you know?
  14. உனக்கு ஞாபகமிருக்கிறதா?
    Do you remember?
  15. உனக்கு ஞாபகமில்லையா?
    Dont you remember?
  16. அது நன்றாக வேலை செய்கிறதா?
    Does it work well?
  17. நீ புகை பிடிப்பாயா?
    Do you smoke?
  18. நீ புகை பிடிப்பதில்லையா?
    Dont you smoke?
  19. உனக்கு coffee பிடிக்குமா?
    Do you like coffee?
  20. உனக்கு coffee பிடிக்காதா?
    Dont you like coffee?
யாராவது உங்களிடம் ஆங்கிலத்தில்questions  ஏதாவது கேட்டால் அதற்கு தமிழில் பதில் சொல்வதற்கு பதிலாக கீழே உள்ள பதில்களை பேசும் போது use பண்ணவும்.
  1. ஆமாம்
    Yes
  2. இல்லை
    No.
  3. அவ்வளவுதான்.
    Thats all.
  4. சரி பரவாயில்லை
    Ok. Its all right.
  5. ஒன்றுமில்லை
    Nothing 
  6. கவலைப்பட எதுவுமில்லை
    Nothing to worry
  7. நிச்சயமாக‌
    Surely/Certainly
  8. உண்மையில்
    Of course/Indeed
  9. அப்படித்தான் நினைக்கிறேன்.
    I think so
  10. அப்படித்தான் நம்புகிறேன்
    I hope so/I believe so
  11. அப்படித்தான் தெரிகிறது
    It seems so
  12. அப்படித்தான் தோன்றுகிறது.
    It appears so
  13. நான் அப்படி நினைக்கவில்லை
    I dont think so
  14. நான் அப்படி நம்பவில்லை
    I dont believe so
  15. அப்படித் தெரியவில்லை
    It doesn't seem so
  16. அப்படித் தோன்றவில்லை.
    It doesn't appear so.
  17. ரொம்ப மோசம்
    It's too bad
  18. காலம் கடந்து விட்டது
    Its too late.


     

Wednesday, 8 September 2010

ஆங்கில இலக்கணம்-Adjective

  • Adjective என்பது பெயர்ச்சொல்லை சிறப்பிக்கும் சொல்
  • Noun and Pronouns  சிறப்பித்து சொல்ல Adjective பயன்படுகிறது.
  • Adjective மக்கள், இடங்கள் ,பொருட்கள் இவற்றை பற்றி விரிவாக சொல்ல உதவுகிறது.
    Example:
    (1) Good Boy (2) Beautiful Car (3) Bad Weather.

    இதில் Boy, Car Weather என்பது Noun ஆகும். Good, Beautiful and Bad ஆகியவை Adjective ஆகும். அவை Noun பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்கிறது.
  • (ie) Adjectives describe nouns and pronouns. They give you more information about
    people, places, and things.

Types of Adjectives:
  • சில  Adjectives நிறங்களை பற்றி கூறுகிறது.(Some adjectives tell about the color of things.)
    Example:

    (1)a red carpet (2)a gray suit (3)a brown bear
    (4)a white swan (5)an orange balloon (6)green peppers
  • சில  Adjectives மனிதன் அல்லது பொருட்களின் size பற்றி கூறுகிறது. (Some adjectives tell about the size of people or things.)
    Example:

    (1)a big house (2)a long bridge (3)tiny feet
    (4)a large army (5)a high mountain (6)big hands
  •  சில  Adjectives மனிதன் அல்லது பொருட்களின் quality பற்றி கூறுகிறது. (Some adjectives tell what people or things are like by describing their quality.)
    Example:

    (1)a handsome boy (2) an old uncle (3)a hot drink
    (4)a poor family (5)a kind lady (6)a cold winter
  •  சில Adjectives பொருட்கள் எதனால் ஆனது என்பதை பற்றி சொல்கிறது. அது substances ஆகும் (Some adjectives tell what things are made of. They refer to substances.)
    Example:

    (1)a plastic folder (2)a stone wall (3)a paper bag
    (4) a metal box (5)a glass door (6) a silk dress
  • சில Adjectives இடங்களை வைத்து பொருட்களை அல்லது மக்களை கூறும். அது adjectives of origin எனப்படும் (Some adjectives are made from proper nouns of place. These adjectives are called adjectives of origin.)
    Example:

    (1)a Mexican hat (2)a British police officer (3)an American custom
    (4)Washington apples (5)an Indian temple (6)an Italian car

The Order of Adjectives
  • சில நேரம் ஒரு noun அல்லது pronoun பற்றி சொல்ல 2 அல்லது 3 Adjectives use ஆகும். அப்போது Adjectives i "size, quality, color,origin, substance" என்ற order ல் போடவும்
    Example:
     (1)a small green plastic box
             size   color substance
     (2)a stylish red Italian car
            quality color origin

Commonly Used Adjectives:
  • மக்கள், இடங்கள் ,பொருட்கள் இவற்றுடன் பொதுவாக பேச்சு வழக்கில் use ஆகும் Adjectives கீழே உள்ள Table ல் உள்ளது. இதை 2 அல்லது 3 தரம் படித்து பேசும் போது use பண்ணி பழகவும்.

    Adjective related with Person
    Affectionateபாசமுள்ள‌
    Arrogantகர்வமான‌
    Adamantபிடிவாதமான‌
    angryகோபமாக‌
    Braveதைரிய‌மான‌
    Cleverபுத்திசாலியான‌
    Dangerousஆபத்தான‌
    deadஇறந்த
    Efficientதிறமையான‌
    Fairஅழகான‌
    Famousபுகழ்வாய்ந்த‌
    Generousதாராள‌மான
    Gentleமேன்மையான
    Helpfulஉதவிகர‌‌மான
    Honestநேர்மையான
    hungryபசியாக
    Indifferentஅலட்சியமான‌‌
    Innocent‌வெகுளியான
    Jealousபொறாமையான
    Kindஅன்பான‌
    Lavishஊதாரித்தனமாக
    Mischievous/naughtyகுறும்புத்தனமான‌
    Miserlyகருமித்தனமான
    Notoriousதீயவைகளில் பிரபலமான‌
    Humorousநகைச்சுவையான
    Politeபணிவான‌
    Proudபெருமிதமான‌
    Plainவெளிப்படையான
    Quietஅமைதியான
    roughகடினமான
    responsibleபொறுப்பான
    reliableநம்பிக்கையான
    Sensitiveஉணர்ச்சிவசப்படும்
    Short temperedமுன் கோபம் கொண்ட
    Sincereஉண்மையுள்ள‌
    Selfishசுயநலமான
    Strictகண்டிப்பான
    Straight forwardஒளிவு மறைவற்ற
    Sensibleஅறிவுள்ள‌
    Suspiciousசந்தேகத்திற்கிடமான
    Talentedபுத்திசாலியான‌/திறமையான
    Timidதைரியமில்லாத/கோழைத்தனம்
    tiredகளைப்பாக
    thirstyதாகமாக
    Uselessஉபயோகமற்ற
    Usefulஉபயோகமான
    Violentகொடுமையான
    Well educatedநன்கு படித்த
    Weakமெலிந்த
    Well offவசதியுள்ள

  • இடங்கள் பற்றி குறிப்பிடும் Adjectives

    Adjective related with Place
    Narrowகுறுகலான‌
    Broadஅகலமான
    Crowdedகூட்டம் நிறைந்த
    Congestedநெரிசலான
    Cleanசுத்தமான
    Smoothமென்மையான
    Waterloggedதண்ணீர் தேங்கிய
    Slushyசேறும் சகதியுமாக
    Slipperyவழுக்கலாக
    Unevenசமமில்லாமல்

  • வீட்டைப்பற்றி குறிப்பிடும் Adjectives.

    Adjective related with House
    Airyகாற்றோட்டமான
    Brightவெளிச்சமான
    Big and spaciousபெரிய விசாலமான
    Convenientவசதியான
    Dilapilatedபாழடைந்த
    Remoteதொலைவில்‌
    Well ventilatedகாற்றோட்டமான
    Stuffyஅடைசலான ‌
    Untidyஒழுங்கற்ற
    Spick and spanசுத்தமாக
    Vacantகாலியாக

  • பொருட்கள் பற்றி குறிப்பிடும் Adjectives.

    Adjective related with Things
    Adjective Meaning
    Fresh புதிதான 
    Frothy நுரைத்த/நுரை நிறைந்த
    Rotten அழுகிய
    Sour புளிப்பான
    Dirty அழுக்காக
    Dry உலர்ந்த
    Costly விலை அதிகமாக
    Salty உவர்ப்பாக
    Tender இளசான
    Thin மெலிந்த
    Murky கலங்கலாக

Monday, 6 September 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-3

நம்முடைய போன பயிற்சியில் நண்பர்களை பார்த்தால் பேசவும், நலம் விசாரிக்கவும் வீட்டிற்க்கு  வந்தவரை உட்கார சொல்வது வரை பார்த்தோம்.
இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் இங்கு சென்று பார்க்கவும். 

             இந்த பதிவில் வீட்டிற்க்கு வந்தவர்களை எப்படி உபசரிப்பது என பார்க்கலாம்
  1. வீட்டிற்க்கு வந்தவரிடம் coffee or tea குடிக்க சொல்ல Have some coffee (or) Have some Tea என்று சொல்லுங்கள் coffee குடிக்கிறீர்களா எனக் கேட்க Would you like to have some coffee? (or) Would you like to have some tea? எனக் கேளுங்கள். இதையே சுருக்கமாக How about coffee? அல்லது How about a cup of coffee? என்று கேட்கலாம்.
  2. நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள் என்று கேட்க What would you like to have? எனக் கேளுங்கள். coffee குடிக்கிறீர்களா? அல்லது tea குடிக்கிறீர்களா? என்று கேட்க Would you like to have coffee or tea?
  3. நீங்கள் நண்பர் வீட்டிற்க்கு சென்ற போது நண்பர் உங்களிடம் How about a cup of coffee? என்று  கேட்டால் உங்களுக்கு coffeeவேண்டாம் என்றால் No. Thank you என்று சொல்லுங்கள். உங்களுக்கு coffee சாப்பிடும் பழக்கம் இல்லை என்றால் I dont take coffee என்று சொல்லுங்கள் . வீட்டிலிருந்து  இப்பொழுது தான் சாப்பிட்டு வந்ததாகக் கூற  No. thank you. just now I had என்று சொல்லுங்கள்.
  4.  வீட்டிற்க்கு வந்தவர் coffee குடிக்காமல் பேசிக்கொண்டு இருந்தால் அவரிடம்  Please have your coffee Sir, it is getting cold அல்லது சுருக்கமாக Have it please சொல்லுங்கள்.
  5. நண்பருக்கு குடுத்த coffee யில் sugar போதுமானதாக இருக்கிறதா என்று கேட்க விரும்பினால் Is your coffee sweet enough? என்று கேளுங்கள். இன்னும் கொஞ்சம் சேர்க்கட்டுமா என்று கேட்க Shall I add some more sugar? என்று கேளுங்கள்

Saturday, 4 September 2010

ஆங்கில இலக்கணம்-Pronoun Part2

இந்த பதிவில் பேச்சுவழக்கில் use ஆகும் மேலும் சில வகையான Pronouns பற்றி பார்க்கலாம். என்ன வகையான pronoun என்பது முக்கியமல்ல. ஆனால் கீழே உள்ள Table களை ஒருமுறை படித்து நினைவில் வைத்துக்கொள்ளவும்.
Pronoun என்றால் என்ன என்பதைஇங்கு(click here) சென்று பார்க்கவும்
  1. Reflexive Pronouns
  2. Demonstrative Pronouns
  3. Interrogative Pronouns
  4. Inedefinite Pronouns
1.Reflexive pronoun:
        The words myself, yourself, himself, herself, itself, ourselves, yourselves and themselves are reflexive pronouns.

Myselfநானே
yourselfநீயே
himselfஅவனே
herselfஅவளே
itselfஅதுவே
ourselvesநாமே/நாங்களே
yourselvesநீங்களே
themselvesஅவர்களே
Example:
1.My brother built this computer himself (என் அண்ணன் அவனே இந்த computer செய்தான்)
2.We baked the cake by ourselves. ( நாங்களே இந்த cake செய்தோம் )

2.Demonstrative Pronouns:
        பொருட்களை குறிப்பிட்டு சொல்ல demonstrative pronoun use ஆகிறது.  The words this, that, these and those are demonstrative pronouns.

thisஇது
thatஅது
theseஇவை
thoseஅவை
theyஅவர்கள்
Note: 
1.These, Those இவற்றிற்கு பதிலாக They என்பதையும் பயன்படுத்தலாம்.
2.Use this and these when you are talking about things near you.
3. Use that and those when you are talking about things farther away.
Example:
1.These are my books.( இவை என்னுடைய புத்தகங்கள் )
2.This is my desk. ( இது என்னுடைய மேசை)
3.They are my friends. ( அவர்கள் என்னுடைய நண்பர்கள் )


3.Interrogative Pronouns:
        கேள்வி கேட்பதற்கு Interrogative pronouns use ஆகிறது. The words who,whose, what, which and whom are interrogative pronouns.

whoயார்
whoseயாருடைய‌
whatஎன்ன‌
whichஎந்த‌
whomயாருக்கு
Example:
 1.Whose pen is this? (யாருடைய பேனா இது? )
2. What is your brother’s name? ( உன்னுடைய தம்பியின் பெயர் என்ன? )


4.Inedefinite Pronouns:
        Most indefinite pronouns express the idea of quantity.

allஎல்லாம்
eachஒவ்வொன்றும்
mostகண்டிப்பாக
otherமற்றொன்று
anotherஇன்னொன்று
eitherஏதாவது
neitherஎதுவுமில்லை
severalநிறைய‌
anyஎதாவது
everybodyஎல்லோரும்
nobodyயாருமில்லை
someசில,சிலர்
anybodyயாரகிலும் ஒருவர்
everyoneஒவ்வொருவரும்
noneஒருவரும் இல்லை
somebodyயாரோ ஒருவர்
anyoneயாராவது ஒருவர்
fewகொஞ்சம்
no oneஒருவரும் இல்லை
someoneயாராவது ஒருவர்
both இருவரும்
manyபல,ப‌லர்
suchஅது போன்ற‌
somethingஏதாவது ஒன்று
Nothingஒன்றுமில்லை
 
Practice Exercise


Exercise 1: Fill with the suitable demonstartive pronouns(this,that,these,those)
Henry and I went for a walk on the beach. “What’s _____ over there?” I asked. “It looks like broken glass,” said Henry. He gave me a bag. “Put it in _______,” he said. I put the broken glass into the bag. “We’d better put ____ in the trash,” I said. He took the bag from me. “You have to hold it like _______ ,” said Henry, “so that you don’t cut your hand.”

Exercise 2: Fill with the suitable pronouns(mine, yours, his, hers, ours and theirs)
1. I chose this seat first so it’s ___________.
2. Can we borrow your coloring pens? We’ve lost ________.
3. We live in the city and they live in the countryside. Our house is smaller than _________.
4. John, is this pencil _______?
5. Sally is looking for her gloves. Are these gloves ____________?
6. Can Julie use your bike? _________ is broken.
7. Tom got the books mixed up. He thought mine was ______ and his was __________.

Exercise 3: Fill with the suitable pronouns
1. Sometimes I wash the dishes all by ______ .
2. Dad had an accident. He cut________with a knife.
3. Sally washes the car by ______.
4. Do you think the doctor can cure _______when he is ill?
5. The cat stays clean by licking _____.
6. Anna and May made the dinner all by_________.
7. Mom lets me walk to school by _______ .
8. Can you dress ________ , boys and girls?
9. David can swim all by __________ now.
10. This light is automatic. It switches ________on at night.


Exercise 4: Fill with the suitable pronouns(who, whose, what, which and whom)
1.____ used all my paper?
2._____ is Mom talking to?
3._____ are those people?
4._____ pen is this?
5._____ are these shoes?
6._____ is your brother’s name?
7._____ does Tom want?
8._____ is the date today?
9._____ do you want to be
10._____you grow up?
11._____ of these desks is yours?
12._____ do you prefer?
13._____of your sisters is the tallest?
14._____ did the President criticize?

Friday, 3 September 2010

ஆங்கிலத்தில் எளிதாக பேச‌(Tips for fluent English)

 எந்த மொழி பேச வேண்டும் என்றாலும் அந்த மொழி இலக்கண புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது. அந்த மொழியை நம் பேச்சு வழக்கில் கொண்டு வர வேண்டும்.அதற்க்கு எது பேச வேண்டும் என்றாலும் அந்த மொழியிலே நினைக்க வேண்டும். ஆங்கிலம் பேச வேண்டும் என்றாலும் என்ன பேச வேண்டுமோ அதை ஆங்கிலத்திலே நினைக்க வேண்டும்.அப்புறம் நினைத்ததை பயமில்லாமல் பேச வேண்டும்.

           Speaking is the first step for any English learner. So if you are a novice at English, please focus on your speaking and listening skills prior to studying grammar. After being able to speak English fluently, you will realize how much easier grammar is. But it does not work the other way around. Being fluent in English speaking will help you with your grammar studies, but studying grammar will NOT help you with your speaking.

             In order to obtain English fluency,studying grammar can slow your progress down significantly. Basic grammar is a necessity, but focusing on grammar will prevent you from being able to speak English fluently in a reasonable time frame.
              Reading and Listening is NOT enough. Practice Speaking what you hear! Reading, listening, and speaking are the most important aspects of any language. The same is true for English. However, speaking is the only requirement to be fluent. It is normal for babies and children to learn speaking first, become fluent, then start reading, then writing. So the natural order is listening, speaking, reading, then writing

            ஒரு சின்ன exercise.ரொம்ப வருடங்கள் கழித்து உங்களுடன் school படித்த நண்பரை சந்திக்கிறீர்கள். அவரிடம் நலம் விசாரித்துவிட்டு அவர் வீட்டில் உள்ளவர்களை நலம் விசாரிக்கிறீர்கள். நண்பரிடம் வேலை பற்றி விசாரிக்கிறீர்கள். அப்புறம் நண்பருக்கு திருமணம் ஆகி விட்டதா எனக்கேட்கிறீர்கள் அவர் ஆமாம் என்று சொல்கிறார். அவரிடம் எப்பொழுது திருமணம் ஆனது என கேட்க வேண்டும். இதை englishல எப்படி பேசுவது என நினைத்துப்பாருங்கள். அப்படியே நினைத்ததை commentla எழுதி அனுப்புங்கள்

Thursday, 2 September 2010

Daily Tips-2

பேசும் போது use ஆகும் சின்ன சின்ன ஆங்கில வார்த்தைகள். Include the following small sentences in your daily usage.


என்ன ஆச்சர்யம்What a surprise
என்ன அபத்தம்/கொடுமைWhat nonsense
என்ன வெட்கக்கேடுWhat a shame
இன்னாள் மீண்டும் மீண்டும் வரட்டும்Many happy returns of the day
சீக்கிரம் வேகமாக நட‌Hurry up.Walk fast
ஆமாம் அப்படித்தான்yes it is
இதோ வருகிறேன்just coming
உங்கள் விருப்பப்படிAs you like
வேறு ஏதாவதுAnything else
அது போதும்Thats enough
ஏன் இல்லை?Wny not?
கொஞ்சம் கூட இல்லைNot a bit(or) Not the least
மிகவும் அதிகம்Too much
இல்லை.ஒரு போதும் இல்லைNO. Not at all
பரவாயில்லைIt's ok
இன்னும் ஒன்றும் இல்லைNothing more
ஒன்றும் விஷேச‌ம் இல்லைNothing special
தயாராக இருBe ready (or) get ready
மெதுவாக செல்/நட‌Go slowly/Walk slowly
அதை உடைக்காதேDon't break it
மறக்காதேDon't forget