Friday 26 November 2010

Simple Future Tense(வருங்காலம்)

  • இனி மேல் நடக்கப்போகும் செயல்களைச் சொல்ல Simple future tense பயன்படுகிறது.
  • Example:
    நான் நாளை ஊருக்கு போகிறேன். இதில் போவது என்ற செயல் இன்னும் நடைபெறவில்லை நாளை தான் நடக்கும்.இதே போல் இனிமேல் நடைபெற போகும் செயல்களைச் சொல்ல Simple future tense பயன்படுத்த வேண்டும்.
Simple future tense வாக்கியங்களை அமைக்க:
                 நான் ஒரு laptop வாங்குகிறேன் ( நிகழ்காலம்) I buy a laptop
                 நான் ஒரு laptop வாங்கினேன்(கடந்த காலம்) I bought a laptop
   நான் ஒரு laptop வாங்குவேன் என்று சொல்ல என்ன வினைச்சொல் பயன்படுத்த வேண்டும்?.
  • Simple future tense வாக்கியங்களை அமைக்க present tense form of verb use பண்னால் போதும் ஆனால் அதனுடன் will அல்லது shall என்ற keword use பண்ன வேண்டும்.

    Will/Shall+present tense verb
  • Shall என்பது I மற்றும் we  என்பதுடன் மட்டும் சேரும் .Will என்பது you,they,it,he  மற்றும் she போன்றவற்றுடன் சேரும். 
    Subject
    I/We Shall
    You will
    they will
    it will
    he  will
    she will
    so நான் ஒரு laptop வாங்குவேன் என்று சொல்ல I shall buy a laptop என்று சொல்ல வேண்டும.
  • ஆனால் தற்போது நடைமுறையில் I மற்றும் we உடன் will சேர்த்து பேசப்படுகிறது. எனவே I shall buy a laptop என்றும் I will buy a laptop என்றும் கூறலாம்.
சில Simple future tense வாக்கியங்கள: 
 


நான் பார்ப்பேன் I shall see/I will see
நாங்கள் பார்ப்போம் We shall see/We will see
நீ பார்ப்பாய் You will see
அவன் பார்ப்பான் He will see
அவள் பார்ப்பாள் She will see
அவர்கள் பார்ப்பார்கள் They will see
நான் போவேன் I shall go/I will go
நாங்கள் போவோம் We shall g/We will go
நீ போவாய் You will go
நான் வாங்குவேன் I shall buy/I will buy
நாங்கள் வாங்குவோம் We shall buy/We will buy
நீ வாங்குவாய் You will buy
நான் வருவேன் I will come/I shall come 
நான் காத்திருப்பேன் I will wait/I shall wait
நினைவில் வைத்துக்கொள்ளவும்:
  • எதிர்காலத்தில் நடக்கப்போகும் உண்மைகள், மாறுபடாத இவற்றைச் சொல்லும் போது simple present tense use பண்ண வேண்டும்.(To talk about facts in the future or plans that will not change use the simple present tense)
  • Example:
    1. Tomorrow is Sunday 
    2. Summer vacation ends on friday.
    3. The new library opens next week.
    4. We fly to London on Monday.
Going to +Verb 
  • எதிர்காலத்தில் செய்ய திட்டமிட்ட செயல்கள் மற்றும் செய்யப்போகும் வேலைகள் போன்றவற்றை சொல்லும் போது going to மற்றும் verb சேர்த்து சொல்லலாம்.
  • Example:
    1. I am going to visit the temple tomorrow.
    2. I am going to see the new movie next week
    3. My friend is going to move to london next year.
    4. Dad is going to buy a new cycle.
    5. My sister is going to have another baby soon
    6. It is going to be rain tomorrow
    7. I hope someone is going to fix the problem soon
    8. You are going to help me, aren't you?
    9. My friends are going to teach me how to play chess.
    10. Mom and dad are going to buy a new laptop.
    11. Are you going to read your book now?

6 comments:

  1. வழக்கம்போலவே பயனுள்ள பாடங்கள் அருமை,

    தொடரட்டும் உங்கள் பணி...

    நன்றி

    ReplyDelete
  2. Thank you மாணவன்.
    உங்கள் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  3. வாண்டு சித்ரா & சிவசதீஷ் வருகைக்கு மிகவும் நன்றி

    ReplyDelete