Monday 1 November 2010

Simple Present Tense( நிகழ்காலம்)-II

Simple Present Tense-I பற்றி தெரிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்

1.Simple Present வாக்கியங்களை Negative ஆக மாற்ற :
  • Simple Present வாக்கியங்களை Negative ஆக மாற்ற 'இல்லை' என்ற பொருள் தரும் 'Not' என்ற word ம், Do,  Does  என்ற helping verb களைப் பயன்படுத்த வேண்டும்.
  • III person singular subject வந்தால் Does என்ற helping verb ம் மற்ற அனைத்து subject க்கும் Do என்ற helping verb ம் use பண்ண வேண்டும்.
  • உதாரணமாக நான் விரும்புகின்றேன்(I like) இதை நான் விரும்பவில்லை என்று Negative ஆக மாற்ற not,do சேர்த்து I do not like என்று சொல்ல வேண்டும்.
  • Do மற்றும் not சேர்த்து simple ஆக don't என்றும் சொல்லலாம். I do not like என்பதை I dont like என்றும் சொல்லலாம்.
    Person Subject Helping Verb
    I I do

    We do
    II You do
    III He does

    She does

    They do

    It  does

  • Example:
    Like என்பதை subject க்கு ஏற்ப எவ்வாறு எதிர்மறை வாக்கியம் ஆகிறது என பார்க்கலாம்.
    Positive Negative
    I Like tea
    ( நான் tea விரும்புகிறேன்)
    I don't like tea (நான் tea விரும்பவில்லை)
    We like tea ( நாங்கள் tea விரும்புகிறோம்) We don't like tea( நாங்கள் tea விரும்பவில்லை )
    You like tea(நீ/நீங்கள் tea விரும்புகிறாய்) You don't like tea( நீ/நீங்கள் tea விரும்பவில்லை)
    They like tea(
    அவர்கள் tea விரும்புகிறார்கள்)
    They don't like tea (
    அவர்கள் tea விரும்பவில்லை)
    He likes tea( அவன் tea விரும்புகிறான்) He doesn't like tea( அவன் tea விரும்பவில்லை)
    She likes tea( அவள் tea விரும்புகிறாள்) She doesn't like tea ( அவள் tea விரும்பவில்லை)
    It likes tea (அது tea விரும்புகிறது) It doesn't like tea (அது tea விரும்பவில்லை)
2.Simple Present வாக்கியங்களை Questions ஆக மாற்ற :
1.yes/no question type:
  • சில கேள்விகளுக்கு பதில் Yes அல்லது No என்று வர வேண்டும். அந்த மாதிரி கேள்விகளை Yes/No type question என்கிறோம்.
  • இந்த மாதிரி கேள்விகளை கேட்க Do மற்றும் Does helping verb உதவுகிறது. இதில் helping verb subjectக்கு முன்னால் வர வேண்டும்.
  • Example:


    உனக்கு பிடிக்குமா? Do you like?
    உனக்கு தெரியுமா? Do you know?
    நீ போகிறாயா? Do you go?
    அது வேலை செய்கிறாதா? Doe's it work?
    அவன் வருகிறானா? Doe's he come?
    நீ கேட்கிறாயா? Do you ask?
2.Information Question:
  • நாம் ஒருவரிடம் உனக்கு பிடிக்குமா? எனக் கேட்க Do you like? எனக் கேட்கலாம். இது அவர் பிடிக்காது(No) எனப் பதில் சொன்னால் ஏன் பிடிக்காது? எனக் கேட்க வேண்டும்.
  • இதைப் போலமேலும் தகவல் சேகரிக்க கேட்கும் கேள்விகளை Information question என்கிறோம்.
  • Information qustion களை கேட்க என்ன,எங்கே,எப்பொழுது, ஏன், யார்,யாரை போன்ற question words தேவைப்படும்.
  • தெரிந்து கொள்ள வேண்டிய வினாச் சொற்கள்(Question words)
    Question words வினாச் சொற்கள்
    What? என்ன?
    When? எப்பொழுது?
    Where? எங்கே?
    Which? எது?
    Why? ஏன்?
    Who? யார்?
    Whom? யாரை?
    How? எப்படி?
    How far? எவ்வளவு தூரம்?
    How long? எவ்வளவு நேரம்?
    How often? எப்பொழுதெல்லாம்?
    How much? எவ்வளவு?
    How many? எத்தனை?
    To whom? யாருக்கு?
  • Information question களை உருவாக்க helping verb do/does முன்னால் question word(what,when,why,how போன்ற)  சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • Example:
    1. நீ எப்பொழுது எழும்புகிறாய்?
      When do you get up?
    2. நீ எங்கே வேலை செய்கிறாய்?
      Where do you work?
    3. உன்னுடைய Officeக்கு எப்படி செல்கிறாய்?
      How do you go to your office?
    4. உனக்கு எவ்வளவு பணம் வேணும்?
      How much money do you want?
Note: 
Work என்ற செயல் நிகழ்காலத்தில் எவ்வாறு Subjectக்கு ஏற்ப மாறுகிறது எனவும் negative, question sentence ஆக எவ்வாறு மாற்றலாம் என்றும் பார்க்கலாம்
PositiveNegativeQuestion
IWorkIdo not(don't)workDoIWork?
YouYouyou
WeWewe
TheyTheythey
HeWorksHedoes not(doesn't)workDoesheWork?
SheSheshe
ItItit
படித்தது புரிந்ததா எனத் தெரிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்

18 comments:

  1. இன்றைய பாடமும் அருமை
    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  2. EXCELLENT! அற்புதம்!!

    மிகவும் நேர்தியாகவும், எளிதில் புரிந்து கொள்ளும்படியாகவும் விளக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. ஈடுபாட்டை ஏற்படுத்தும் விதமாய் இருக்கிறது உங்களின் பாடங்கள்! நன்றி.

    ReplyDelete
  4. Madam
    As usual your class is super..
    keep it up madam

    Regards,
    Shiva Satish.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Present, Madam!

    Do we have a holiday for Deepavali festival, Madam?

    HAPPY DEEPAVALI!!!

    ReplyDelete
  7. இன்றைய பாடமும் மிகவும் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக இருந்தது

    ReplyDelete
  8. Thank you மாணவன்

    ReplyDelete
  9. Thank you சைவகொத்துப்பரோட்டா

    ReplyDelete
  10. Thank you சிவ சதிஷ்.

    ரொம்ப நாள் கழித்து classக்கு வந்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete
  11. Welcome chitra.
    பட்டாசு விட வேண்டி இருப்பதால் classக்கு leave

    ReplyDelete
  12. Suni Madam

    Daily I'm attending the class.But I'm not putting the comments daily.I will do it present comment regular basics.

    ReplyDelete
  13. நன்றாக புரிந்தது டீச்சர்
    நீங்கள் third person singular subject வந்தால் Do என்ற உதவி வினை சொல் (helping verb ) மற்ற அனைத்திற்கும் does பயன் படுத்த வேண்டும் என்று போட்டு இருந்தீர்கள்
    ஆனால்third person singular subject வந்தால் Does தானே வர வேண்டும் மிஸ் சுனிதா

    work என்ற செயல் subject க்கு ஏற்ப எவ்வாறு மாறுகிறது என்பதை சார்ட் போட்டு விளக்கிய விதம் சற்று வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது



    அப்புறம் க்ரீன்லில் underline செய்வதை கிளிக் செய்தால் shaadi .காம் கொண்டு செல்லும் உங்கள் நகைசுவையை (கொஞ்சம் குறும்பு தனமும் தான்! )
    ரசிக்க முடிகிறது சுனிதா

    ReplyDelete
  14. மிகவும் நன்றி ப்ரியா. table ல் correcta எழுதியிருக்கேன். எழுதும் போது தப்பாக எழுதியிருக்கிறேன்.
    சரி செய்து விடுகிறேன். இவ்ளோ ஆர்வமா class கவனிக்கிறீங்க. Really நீங்க ரொம்ப நல்ல student.
    இதே போல் தொடர்ந்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்.

    ReplyDelete
  15. Hello madam,

    அது வேலை செய்கிறாதா? Doe's it work?
    அவன் வருகிறானா? Doe's he come?

    Doe's என்பதற்குப் பதிலாக Does என்றுதானே போட வேண்டும்.

    ReplyDelete