Thursday 9 December 2010

கடந்த காலமா? நிகழ்கால வினைமுற்றா?(difference)

  • பேசும் போது சில செயல்களை கடந்த காலத்தில் சொல்ல வேண்டுமா அல்லது நிகழ்கால வினைமுற்றா என்று சந்தேகம் வரும். 
  • கடந்த காலத்தில் தொடங்கி கடந்த காலத்தில் முடிவடைந்த செயல்களைக் குறிப்பிட Simple Past Tense பயன்படுகிறது. ஓரு செயல் கடந்த காலத்தில் தொடங்கி அதனுடைய பாதிப்பு நிகழ்காலத்தில் இருக்குமாயின் அந்தச் செயல்களைக் குறிப்பிட Present Perfect tense பயன்படுகிறது
  • Important POint toRemember:கடந்த கால சரியான நேரத்தைக் குறிப்பிடாமல் செயலை மட்டும் குறிப்பிட விரும்பும்போது Present Perfect Tense ஐப் பயன்படுத்த வேண்டும். செயல் நடைபெற்ற சரியான  நேரத்தைக் குறிப்பிட விரும்பும்போது Simple Past Tense ஐப் பயன்படுத்த வேண்டும்.
    கடந்த கால சரியான நேரத்தைக் குறிப்பிடாமல் செயலை மட்டும் குறிப்பிட விரும்பும்போது Present Perfect Tense ஐப் பயன்படுத்த வேண்டும். செ நடைபெற்ற சரியான  நேரத்தைக் குறிப்பிட விரும்பும்போது Simple Past Tense ஐப் பயன்படுத்த வேண்டும்.
  •  Example: நாங்கள் 2 வாரம் முன்னால் ஒரு oven வாங்கினோம். இது ஒரு கடந்த கால செயல் அதனால் We bought a new Oven 2 weeks back என்று சொல்லலாம், இதையே நேரத்தைக் குறிப்பிடாமல்We have bought a new Oven. என்று Present Perfect ல் சொல்லலாம் ஆனால் கண்டிப்பாக We have bought a new Oven 2 Weeks back என்று சொல்லகூடாது.
  • Present Perfect tense வாக்கிய்ங்களை முடிக்கும் போது நேரத்தைக் குறிக்கும் சொற்கள் வ்ராது.
  • Present Perfect tense வாக்கிய்ங்களில் கண்டிப்பாக இடம்பெறக்கூடாத சொற்கள்          Yesterday, Last Year, 3 years ago, in 1990
  • ஆனால்  Present Perfect செயல்கள் கடந்த காலத்திலே தொடங்குவதால் சில காலத்தைக்குறிக்கும் சொற்களை சேர்த்துக் கொள்ளலாம்.அவை
    This morning  இன்று காலை
    This afternoon இன்று மதியம்
    This evening இன்று மாலை
    Till now இது வரை
    Yet இன்னும்
    Ever எப்பொழுதும்
    Since இருந்து
    For ஒரு குறிப்பிட்ட நேரத்தில்
    Already ஏற்கனவே
    Never ஒரு போதுமில்லை
    Just இப்பொழுது தான்
    So far இதுவரை
  • Example:
    1. நான் அந்த படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டேன்.(I have already seen that movie) இதையே I have seen that movie last week என்பது தவறான வாக்கியம்.
    2. போன வாராத்திலிருந்து சளி பிடித்திருக்கிறது.(I have got cold since last week).  
  • Time of the action is not important only the completion of the action is important

7 comments:

  1. Present, Madam!
    This is Present tense, Madam!

    ReplyDelete
  2. அருமை,

    தொடரட்டும் உங்கள் பணி...

    ReplyDelete
  3. ஆங்கிலத்திற்க்கு ஒரு அருமையான அகராதி

    http://thagavalthulikal.blogspot.com/

    ReplyDelete
  4. முன்னர் கேட்ட சந்தேகத்தை இப்போ தீர்த்து வைத்ததற்கு நன்றி Missசுனிதா!
    மிக முக்கியமான விதிகளை தெரிந்து கொள்ள முடிந்தது

    ஆமாம் ! I have got cold since last week

    present perfect tense la yesterday,last year வர கூடாதுன்னு சொன்னீங்களே!

    ReplyDelete