- Present Perfect Tense வாக்கியங்களை negative ஆக மாற்ற subject உடன் helping words have/has மற்றும் not சேர்க்க வேண்டும்.
- subject ஆனது I,we,you,They வந்தால் helping word, have சேர்க்க வேண்டும். subject ஆனது he,she,it வந்தால் helping word, has சேர்க்க வேண்டும்.
- Example:
- நான் கவிதை எழுதியிருக்கிறேன் என்று சொல்ல I have written a poem . இதையே நான் கவிதை எதுவும் எழுதவில்லை என்று சொல்ல I have not written any poem என்று சொல்ல வேண்டும்.
- அவன் தன்னுடைய காலை உடைத்துக்கொண்டான் என்று சொல்ல He has broken his leg. இதையே அவன் தன்னுடைய காலை உடைத்துக்கொள்ளவில்லை என்று சொல்ல He has not broken his leg என்று சொல்ல வேண்டும்
- Have மற்றும் not சேர்த்து haven't என்றும் ,Has மற்றும் not சேர்த்து hasn't என்றும் சொல்லலாம்.
Example: I have not written any poem என்பதை I haven't written any poem என்றும் He has not broken his leg என்பதை He hasn't broken his leg என்றும் சொல்லலாம் - இப்பொழுது சில வாக்கியங்களை negative ஆக மாற்றலாம்
- அவர் இங்கே 10 வருடங்களாக வசிக்கிறார்.(He has lived here for 10 years)
அவர் இங்கே 10 வருடங்களாக வசிக்கவில்லை(He hasn't lived here for 10 years). - நான் எந்திரன் படம் நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.(I have seen enthiran movie lot of times)
நான் எந்திரன் படம் பார்த்திருக்கவில்லை(I haven't seen enthiran movie) - நான் என்னுடைய அறையை சுத்தம் செய்திருக்கிறேன்.(I have cleaned my room)
நான் என்னுடைய அறையை சுத்தம் செய்யவில்லை(I haven't cleaned my room)
- அவர் இங்கே 10 வருடங்களாக வசிக்கிறார்.(He has lived here for 10 years)
subject+have/has+not+past participle form of verb |
1.Yes/No question Type:
- Present Perfect Tense வாக்கியங்களை Questions ஆக மாற்ற முதலில் have/has helping word ம் அதன் பின் subject ம் அதன் பிறகு past participle form of verb ம் வர வேண்டும்.
have/has+subject+past participle form of verb - Example:
- நான் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன் (I have written a letter). இதை நீ ஏதாவது கடிதம் எழுதியிருக்கிறாயா? என்று கேட்க Have you written any letter? என்று கேட்க வேண்டும்.
- நான் அவனைப் பார்த்திருக்கிறேன் (I have seen him). இதை நீ அவனைப் பார்த்திருக்கிறாயா? என்று கேட்க Have you seen him ? என்று கேட்க வேண்டும்.
- அவன் ஒரு புத்தகம் அனுப்பியிருக்கிறான்.(He has sent a book) இதை அவன் புத்தகம் ஏதாவது அனுப்பியிருக்கானா? என்று கேட்க Has he sent any book? என்று கேட்க வேண்டும்.
- இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது ஆமாம் என்று சொல்ல yes,subject have/has என்றும் இல்லை என்று சொல்ல no,subject haven't/hasn't என்று சொல்லவேண்டும்.
- Example:
- நீ அவனைப் பார்த்திருக்கிறாயா? (Have you seen him?) என்று கேட்கும் போது பார்த்திருக்கிறேன் என்று சொல்ல yes, I have என்றும் பார்க்கவில்லை என்று சொல்ல No, I haven't என்றும் சொல்லலாம்.
- அவன் புத்தகம் ஏதாவது அனுப்பியிருக்கானா? ( Has he sent any book?) என்று கேட்டால் ஆமாம் அனுப்பியிருக்கிறான் என்று சொல்ல Yes, he has என்றும் இல்லை என்று சொல்ல No, he hasn't என்றும் சொல்லலாம்.
- Present Perfect Tense வாக்கியங்களை Information Questions ஆக மாற்ற முதலில் question word அதன் பிறகு have/has
helping word ம் அதன் பின் subject ம் அதன் பிறகு past participle form of
verb ம் வர வேண்டும்.
Qnword+have/has+subject+past participle of form - Example:
- இதுவரை நீ என்ன செய்திருக்கிறாய்?(What have you done so far?)
- அவர்கள் ஏன் சீக்கிரம் புறப்பட்டுவிட்டார்கள்?(Why have they left so early?)
Have you seen him?
ReplyDeleteWhom are you talking about?
ha,ha,ha,ha,ha,ha,ha,ha....
வழக்கம்போலவே பாடங்கள் அருமை,
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி
பாடங்கள் அருமை, THANKS
ReplyDeletepresent
ReplyDeleteThanks madam
Thank you chitra,மாணவன்,rajvel,சிவ சதிஷ்
ReplyDeleteதிரு பதிப்பாளர் அவர்களுக்கு
ReplyDeleteதயவு செய்து ஆங்கில இலககணத்தை பாட வாரியாக பதிவு செய்யுங்கள். அங்கொன்றும், இங்கொண்றுமாக பதிவு செய்து புதிதாக பயில்பவர்க்ளுக்கு குழப்பம் அடைவார்கள்
தயவு செய்து தவறுகளை பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்டு நல்லபடியாக பாடங்களை பதிவு செய்யுங்கள்
அன்புடன்
தமிழ்செல்வன்
கோலாலம்பூர்
thanks madam
ReplyDelete