Saturday 27 November 2010

Simple Future Tense(வருங்காலம்)-II

Positive  வாக்கியங்களை negative ஆக மாற்ற :
  • Simple present and simple past tense வாக்கியங்களை negative ஆக மாற்ற not மற்றும் helping verb(do,does,did) ஐப் பயன்படுத்தினோம் simple future tense வாக்கியங்களை negative ஆக மாற்ற not மட்டும் சேர்த்தால் போதும்.
  • Example :அவள் வாங்குவாள் (she will buy) என்பதை அவள் வாங்க மாட்டாள் என negative ஆக சொல்ல not சேர்த்து she will not buy என்று சொன்னால் போதும்
  • will மற்றும் not என்பதை பேசும்போது won't என்று சுறுக்கமாக சொல்லலாம்.shall மற்றும் not சேர்த்து சுறுக்கமாக shan't சொல்லலாம்.ஆனால் பேசும் போது பொதுவாக shan't use பண்ணுவது இல்லை
  • positive Negative
    நான் வாங்குவேன்(I will buy) நான் வாங்க மாட்டேன்(I will not buy/I won't buy)
    நாங்கள் வாங்குவோம்(We will buy) நாங்கள் வாங்கமாட்டோம்.(We wont buy)
    அவள் வாங்குவாள்(She will buy) அவள் வாங்கமாட்டாள்(she won't buy)
    அவன் வாங்குவான்(He will buy) அவன் வாங்கமாட்டான். (He won't buy)
    அவர்கள் வாங்குவார்கள் (They will buy) அவர்கள் வாங்கமாட்டார்கள். (They won't buy)
    நாளைக்கு நான் வருவேன்.(I will come tomorrow) நாளைக்கு நான் வரமாட்டேன். (I won't come tomorrow)
Simple future வாக்கியங்களை Questions ஆக மாற்ற : 
1.yes/no question type:
  • சில கேள்விகளுக்கு பதில் Yes அல்லது No என்று வர வேண்டும். அந்த மாதிரி கேள்விகளை Yes/No type question என்கிறோம்.
  • இனிமேல் செய்யப்போகும் செயல்களை questions ஆக கேட்க will/shall ஐ முதலிலும் அதன் பிறகு subject ஐயும்  அதன் பிறகு verb ஐயும் சேர்த்தால் கிடைக்கும்.

    Will/Shall+subject(I,we,you,they,it,he,she)+verb
  • அவள் வாங்குவாள்(she will buy), அவள் வாங்கமாட்டாள்(she won't buy) அவள் வாங்குவாளா? என்று கேட்க Will she buy? என்று கேட்கலாம்.
  •  Some More examples:


    அவள் வாங்குவாளா? Will she buy?
    அவன் வாங்குவானா? Will he buy?
    அவன் ஓடுவானா? Will he run?
    அவன் வருவானா? Will he come?
    அவர்கள் வருவார்களா? Will they come?
    அது கடிக்குமா? Will it bite?
2.Permission Questions:
  • Shall  என்ற keyword I மற்றும் we உடன் சேர்ந்து வாக்கியம் அமைக்கும் போது அது permission கேட்கும் கேள்வியாக அமையும்.
  • Example:


    நான் போகலாமா? Shall I go?
    நாம் போகலாமா? Shall we go?/Shall we move?
    நான் படிக்கலாமா? Shall I read?
    இந்த email அனுப்பட்டுமா? Shall I send this email?
    நான் உள்ளே வரலாமா? Shall I come in?
    உன்னுடைய room ஐ பண்னலாமா? Shall I use your room?
3.Information Questions:
  • Information qustion களை கேட்க என்ன,எங்கே,எப்பொழுது, ஏன், யார்,யாரை போன்ற question words தேவைப்படும்.

  • question word+Will/Shall+subject+verb?
     
  • Some example:


    அவன் என்ன வாங்குவான்? What will he buy?
    அவள் எப்பொழுது வருவாள்? When will she come?
    நீ எங்கு வாங்குவாய்? Where will you buy?
    நீ எப்படி போவாய்? How will you go?
    நீ எங்கே தங்குவாய்? Where will you stay?
    நான் எங்கே தங்குவது? Where will I stay?
    நான் எப்பொழுது வரலாம்? When will I come?
    அவர்கள் என்ன நினைப்பார்கள்? What will they think?
    நாம் எங்கே தூங்குவது? Where will we sleep?

5 comments: