Tuesday, 21 December 2010

Past Perfect Tense(கடந்த கால வினைமுற்று)-1

  • கடந்த காலத்தில் முடிவடைந்த செயல்களைப் பற்றி சொல்லும் போது Simple past Tense பயன்படுத்துகிறோம்
  • ஆனால் கடந்த காலத்தில் நடைப்பெற்ற இரண்டு செயல்களைப் பற்றி சொல்லும் போது முதலில் நடைப்பெற்ற செயலை Past perfect tense லும் அடுத்து நடைப்பெற்ற செயலை simple past tense லும் சொல்ல வேண்டும்.
  • Example:
     நான் Railway station செல்வதற்க்கு முன் train புறப்பட்டு விட்டது

    இவ்வாக்கியத்தில் நான் Railway station சென்றது ஒரு செயல். ட்ரைன் புறப்பட்டது இன்னொரு செயல். இரண்டு  செயலுமே கடந்த காலத்தில் நடைப்பெற்ற செயல்.நான் Railway station முதலில் சென்றிருந்தால் trainல் சென்றிருக்கலாம். அதனால் இதில் train புறப்பட்டது முதலில் நடைப்பெற்ற செயல் .
    So இதில் train புறப்பட்டு விட்டது. என கூறும் போது Past Perfect லும் நான் Railway station சென்றதை simple past tense லும் சொல்ல வேண்டும்.
Past Perfect Tense வாக்கியத்தை அமைக்க:
  • Subject எதுவாக இருந்தாலும்  Past Perfect Tense வாக்கியத்தை அமைக்க had என்ற helping verb தான் வரும்
  •  I,We,You,They,He,She,It எதுவாக இருந்தாலும் had என்பது தான் சேரும்

    subject+Had +past participle
  • Example:
    1. நான் ஏற்கனவே ஒரு கவிதை எழுதியிருந்தேன். I had already written a poem.
    2. Train  ஏற்கனவே போய் விட்டது. Train had already left.
  • Past Perfect Tense வாக்கியத்தை அமைக்கும் போது அவ்வாக்கியத்தில் சில conjunctionகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
  • When,While இரண்டும் பொழுது என்ற அர்த்தத்தை தருகிறது.
    Example


    I go நான் போகிறேன்
    When I go நான் போகும் போது
    When I see நான் பார்க்கும் போது
    When she comes அவள் வரும் போது
    When he comes  அவன் போகும் போது
    When I went there நான் அங்கே போன போது
Past Perfect Tense Examples:
  1. நாங்கள் station செல்வதற்க்கு முன் train சென்று விட்டது Before we reached the station, the train had already left 
  2.  நாங்கள் station  ஐ அடைந்த போது train ஏற்கனவே  சென்று விட்டது When we reached the station, the train had already left
  3. நான் 9 மணிக்கு கடைக்கு சென்றேன் ஆனால் கடையை பூட்டிவிட்டார்கள் I went to the shop at 9'0 clock but they had closed the shop
  4. அவன் வந்த போது ராணி போய்விட்டாள் When he arrived,Rani had left.
  5. Interview attend பண்ண பிறகு அவனுக்கு வேலை கிடைத்தது. After he had attended the interview, he got the job
  6. விருந்தாளிகள் போனதும் வேலைக்காரன் tableஐ சுத்தம் செய்தான். The servent cleared the table after the guests had left.

Tuesday, 14 December 2010

Test your English-4(Present Perfect Tense கேள்விகள்)

  1. கீழே உள்ள வாக்கியங்களை ஆங்கிலத்தில் சொல்லிப்பார்க்கவும். அதையே Negative ஆகவும் மாற்றிப்பார்க்கவும்.
    1. நான் அவனை ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.
    2. நான் இங்கே 2005லிருந்து வேலை பார்க்கிறேன்.
    3. நான் 10 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.
    4. நான் அந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன்.
    5. நான் dinner சமைத்திருக்கிறேன்.
    6. நான் இப்பொழுது தான் சாப்பிட்டு முடித்திருக்கிறேன்.
    7. அவர்கள் என்னை அழைத்திருக்கிறார்கள்.
    8. நான் அந்த பையனை முன்பே பார்த்திருக்கிறேன்.
    9. நான் kingfisher ல் பயணித்திருக்கிறேன்.
    10. நான் எனது mobile ஐ தொலைத்திருக்கிறேன்.
  2. கீழே உள்ள question வாக்கியங்களை ஆங்கிலத்தில் சொல்லிப்பார்க்கவும்.
    1. யாராவது வந்திருக்கிறார்களா?
    2. Anna nagar பஸ் போய்விட்டதா?
    3. இன்றைய பேப்பர் படித்தாயா?
    4. நீ எப்பொழுதாவது pizza சாப்பிட்டிருக்கிறாயா?
    5. விஷயத்தைக் கேள்விப்பட்டாயா?
    6. அவன் எப்பொழுதாவது பேசியிருக்கிறானா உன்னிடம் இந்த problem பற்றி?
    7. மாமா வந்திருக்கிறாரா?
    8. நீ lunchக்கு சமைத்திருக்கிறாயா?
    9. நீ வீட்டுப்பாடங்களை செய்திருக்கிறாயா?
    10. நீ எப்பொழுதாவது museum போயிருக்கிறாயா?
    11. ஏதாவது வாங்கி வந்திருக்கிறாயா?
    12. 1000Rs க்கு சில்லறை இருக்கிறதா?
    13. lunch சாப்பிட்டாச்சா?
    14. ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?
    15. உன்னுடைய குடை கொண்டுவந்திருக்கிறாயா?
  3. கீழே உள்ள வாக்கியங்களை ஆங்கிலத்தில் சொல்லிப்பார்க்கவும். அதையே negative மற்றும் question களாக மாற்றிப்பார்க்கவும்
    1. அவன் ஒரு car வாங்கி இருக்கிறான்.
    2. ஆனந்த தனது நிலத்தில் காய்கறி பயிரிட்டிருக்கிறான்.
    3. நான் 2 மொழிகள் படித்திருக்கிறேன்.
    4. அவர்கள் ஒரு வீடு வாங்கியிருக்கிறார்கள்.
    5. நான் இங்கே பலதடவைகள் வந்திருக்கிறேன்.
    6. நான் londonக்கு 5 தடவைகள் போயிருக்கிறேன்.
    7. ராஜா அனிதாவை ஏமாற்றியிருக்கிறான்.
    8. நான் அந்த திரைப்படத்தை பலதடவைகள் பார்த்திருக்கிறேன்.
    9. நான் இங்கே 2000லிருந்து வேலை செய்திருக்கிறேன்.
    10. அவன் SSLC தேர்வு எழுதியிருக்கிறான்.
  4. Complete the following sentences with has or have.
    1. My dog ______ a long shiny coat. 
    2. Our teacher  ______ a very kind face. 
    3. You ______ a lot of homework to do. 
    4. Sara and I  ______ desks near the front of the class. 
    5. Paul  ______ two brothers and a sister.
    6. My friend Rani ______a big house. 
    7. Mice ______ long tails. 
    8. Most dogs  ______ sharp teeth.
    9. I ______ more toys than my friend . 
    10. These flowers ______a strange smell.
  5. Complete the sentence with the present perfect tense of the verbs in parentheses.
    1. The children ______ (make) the house very messy.
    2.  I______ (see) that actor in several movies.
    3. The boys______ (drink) all the juices in the refrigerator.
    4. Our dog ______(hurt) its leg.
    5. One of the workmen ______ (fall) off his ladder.
    6. She’s sad because her friends______(go) to the park without her.
    7. Dad______(have) a shower already.
    8. I’ve been shouting so much that I______(lose) my voice.
    9. My sister’s husband______(buy) her a diamond ring.
    10. Anand______(do) this jigsaw puzzle so many times that he could do it with his eyes shut.
  6. Choose the correct past participle in each sentence below.
      
      
      
    1. Your child has ______ (broke/broken) my window!
    2. Have you ______ (eaten/ate) all your dinner?
    3. I have ______(known/knew) Sally since we were in kindergarden.
    4. Michael has ______(drew/drawn) a picture for his grandad.
    5. The new girl seems nice, but I haven’t ______(spoke/spoken) to her yet.
    6. We’ve ______(drank/drunk) all the milk.
    7. The ball has______(went/gone) over the garden fence.
    8. Has Tom ______(did/done) all his homework?
    9. You have ______ (been/was) late for school every day this week.
    10. Help! I’ve ______(fell/fallen) down a hole!

Thursday, 9 December 2010

கடந்த காலமா? நிகழ்கால வினைமுற்றா?(difference)

  • பேசும் போது சில செயல்களை கடந்த காலத்தில் சொல்ல வேண்டுமா அல்லது நிகழ்கால வினைமுற்றா என்று சந்தேகம் வரும். 
  • கடந்த காலத்தில் தொடங்கி கடந்த காலத்தில் முடிவடைந்த செயல்களைக் குறிப்பிட Simple Past Tense பயன்படுகிறது. ஓரு செயல் கடந்த காலத்தில் தொடங்கி அதனுடைய பாதிப்பு நிகழ்காலத்தில் இருக்குமாயின் அந்தச் செயல்களைக் குறிப்பிட Present Perfect tense பயன்படுகிறது
  • Important POint toRemember:கடந்த கால சரியான நேரத்தைக் குறிப்பிடாமல் செயலை மட்டும் குறிப்பிட விரும்பும்போது Present Perfect Tense ஐப் பயன்படுத்த வேண்டும். செயல் நடைபெற்ற சரியான  நேரத்தைக் குறிப்பிட விரும்பும்போது Simple Past Tense ஐப் பயன்படுத்த வேண்டும்.
    கடந்த கால சரியான நேரத்தைக் குறிப்பிடாமல் செயலை மட்டும் குறிப்பிட விரும்பும்போது Present Perfect Tense ஐப் பயன்படுத்த வேண்டும். செ நடைபெற்ற சரியான  நேரத்தைக் குறிப்பிட விரும்பும்போது Simple Past Tense ஐப் பயன்படுத்த வேண்டும்.
  •  Example: நாங்கள் 2 வாரம் முன்னால் ஒரு oven வாங்கினோம். இது ஒரு கடந்த கால செயல் அதனால் We bought a new Oven 2 weeks back என்று சொல்லலாம், இதையே நேரத்தைக் குறிப்பிடாமல்We have bought a new Oven. என்று Present Perfect ல் சொல்லலாம் ஆனால் கண்டிப்பாக We have bought a new Oven 2 Weeks back என்று சொல்லகூடாது.
  • Present Perfect tense வாக்கிய்ங்களை முடிக்கும் போது நேரத்தைக் குறிக்கும் சொற்கள் வ்ராது.
  • Present Perfect tense வாக்கிய்ங்களில் கண்டிப்பாக இடம்பெறக்கூடாத சொற்கள்          Yesterday, Last Year, 3 years ago, in 1990
  • ஆனால்  Present Perfect செயல்கள் கடந்த காலத்திலே தொடங்குவதால் சில காலத்தைக்குறிக்கும் சொற்களை சேர்த்துக் கொள்ளலாம்.அவை
    This morning  இன்று காலை
    This afternoon இன்று மதியம்
    This evening இன்று மாலை
    Till now இது வரை
    Yet இன்னும்
    Ever எப்பொழுதும்
    Since இருந்து
    For ஒரு குறிப்பிட்ட நேரத்தில்
    Already ஏற்கனவே
    Never ஒரு போதுமில்லை
    Just இப்பொழுது தான்
    So far இதுவரை
  • Example:
    1. நான் அந்த படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டேன்.(I have already seen that movie) இதையே I have seen that movie last week என்பது தவறான வாக்கியம்.
    2. போன வாராத்திலிருந்து சளி பிடித்திருக்கிறது.(I have got cold since last week).  
  • Time of the action is not important only the completion of the action is important

Tuesday, 7 December 2010

Present Perfect Tense-II(நிகழ்கால வினைமுற்று)

Present  Perfect Tense வாக்கியங்களை negative ஆக மாற்ற:
  • Present  Perfect Tense வாக்கியங்களை negative ஆக மாற்ற subject உடன் helping words have/has மற்றும் not சேர்க்க வேண்டும்.
  • subject+have/has+not+past participle form of verb
  • subject ஆனது I,we,you,They வந்தால் helping word,  have சேர்க்க வேண்டும். subject ஆனது he,she,it வந்தால் helping word,  has சேர்க்க வேண்டும். 
  • Example:
    1. நான் கவிதை எழுதியிருக்கிறேன் என்று சொல்ல I have written a poem .  இதையே நான் கவிதை எதுவும் எழுதவில்லை என்று சொல்ல I have not written any poem என்று சொல்ல வேண்டும்.
    2. அவன் தன்னுடைய காலை உடைத்துக்கொண்டான் என்று சொல்ல He has broken his leg. இதையே அவன் தன்னுடைய காலை உடைத்துக்கொள்ளவில்லை என்று சொல்ல He has not broken his leg என்று சொல்ல வேண்டும்
  • Have மற்றும் not சேர்த்து haven't என்றும் ,Has மற்றும் not சேர்த்து hasn't என்றும் சொல்லலாம்.
    Example: I have not written any poem என்பதை I haven't written any poem என்றும் He has not broken his leg என்பதை He hasn't broken his leg என்றும் சொல்லலாம்
  •  இப்பொழுது சில வாக்கியங்களை negative ஆக மாற்றலாம்
    1. அவர் இங்கே 10 வருடங்களாக வசிக்கிறார்.(He has lived here for 10 years)
      அவர் இங்கே 10 வருடங்களாக வசிக்கவில்லை(He hasn't lived here for 10 years).
    2. நான் எந்திரன் படம் நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.(I have seen enthiran movie lot of times)
      நான் எந்திரன் படம் பார்த்திருக்கவில்லை(I haven't seen enthiran movie)
    3. நான் என்னுடைய அறையை சுத்தம் செய்திருக்கிறேன்.(I have cleaned my room)
      நான் என்னுடைய அறையை சுத்தம் செய்யவில்லை(I haven't cleaned my room)
Present  Perfect Tense வாக்கியங்களை Questions ஆக மாற்ற:
1.Yes/No question Type:
  •  Present  Perfect Tense வாக்கியங்களை Questions ஆக மாற்ற முதலில் have/has helping word ம் அதன் பின் subject ம் அதன் பிறகு past participle form of verb ம் வர வேண்டும்.  

    have/has+subject+past participle form of verb
  • Example:
    1. நான் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன் (I have written a letter). இதை நீ ஏதாவது கடிதம் எழுதியிருக்கிறாயா? என்று கேட்க Have you written any letter? என்று கேட்க வேண்டும்.
    2. நான் அவனைப் பார்த்திருக்கிறேன் (I have seen him). இதை நீ அவனைப் பார்த்திருக்கிறாயா?  என்று கேட்க Have you seen him ? என்று கேட்க வேண்டும்.
    3. அவன் ஒரு புத்தகம் அனுப்பியிருக்கிறான்.(He has sent a book)  இதை அவன் புத்தகம் ஏதாவது அனுப்பியிருக்கானா? என்று கேட்க Has he sent any book? என்று கேட்க வேண்டும்.
  • இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது ஆமாம் என்று சொல்ல yes,subject have/has என்றும் இல்லை என்று சொல்ல no,subject haven't/hasn't என்று சொல்லவேண்டும்.
  • Example:
    1. நீ அவனைப் பார்த்திருக்கிறாயா? (Have you seen him?) என்று கேட்கும் போது பார்த்திருக்கிறேன் என்று சொல்ல yes, I have என்றும் பார்க்கவில்லை என்று சொல்ல No, I haven't என்றும் சொல்லலாம்.
    2. அவன் புத்தகம் ஏதாவது அனுப்பியிருக்கானா? ( Has he sent any book?) என்று கேட்டால் ஆமாம் அனுப்பியிருக்கிறான் என்று சொல்ல Yes, he has என்றும் இல்லை என்று சொல்ல No, he hasn't என்றும் சொல்லலாம்.
2.Information Question:
  • Present  Perfect Tense வாக்கியங்களை  Information Questions ஆக மாற்ற முதலில் question word அதன் பிறகு have/has  helping word ம் அதன் பின் subject ம் அதன் பிறகு past participle form of verb ம் வர வேண்டும். 

    Qnword+have/has+subject+past participle of form
  • Example:
    1. இதுவரை நீ என்ன செய்திருக்கிறாய்?(What have you done so far?)
    2. அவர்கள் ஏன் சீக்கிரம் புறப்பட்டுவிட்டார்கள்?(Why have they left so early?)

Saturday, 4 December 2010

Test your English-3(Simple Future Tense கேள்விகள்)

இந்த பதிவில் Simple future tense நன்கு புரிவதற்க்காக சில பயிற்ச்சிகளை கொடுத்துள்ளேன்.சந்தேகம் இருப்பின் ஒருமுறை பாடங்களை இங்கு சென்று Lesson 1 மற்றும் Lesson 2 இங்கு சென்று படித்துக் கொள்ளவும்.
  1. கீழே உள்ள வாக்கியங்களை Positive,Negative மற்றும் Question களாக மாற்றி எழுதிப்பழகுங்கள்.
    1. Prime Minister காரில் வந்து சேருவார்.
    2. Nivi இங்கே தங்குவாள்.
    3. நான் உன்னிடம் வாங்கிய கடனை அடுத்த மாதம் திருப்பி தருகிறேன்.
    4. நான் ஆங்கிலத்தில் fluent ஆக பேசுவேன்.
    5. நான் பள்ளி செல்வேன்
    6. நாளை நான் வருவேன்.
    7. நான் என்னுடைய அழுகையை கட்டுபடுத்துவேன்.
    8. நான் நாளை customer கிட்ட பேசுவேன்.
    9. அடுத்த வாரம் என்னுடய வீடு கட்டும் வேலை முடிவடையும்.
    10. அடுத்த வருடம் என்னுடைய பாட்டி வீட்டில் christmas கொண்டாடுவேன்.
    11. நான் வூருக்கு போய்ட்டு letter போடுறேன்.
    12. நான் இன்று இரவு சினிமா செல்கிறேன்.
    13. என்னுடைய அக்கா வீட்டிற்க்கு 10 மணிக்கு வருவாள்.

Wednesday, 1 December 2010

Present Perfect Tense(நிகழ்கால வினைமுற்று)

  • ஒரு செயல் கடந்த காலத்தில் தொடங்கி நிகழ்காலத்தில் முடிந்திருந்தால் அந்த செயலைச் சொல்ல Present Perfect tense உபயோகப்படுத்த வேண்டும்.
  • Example:
    என்னுடைய அப்பா ஊரிலிருந்து வந்திருக்கிறார்.
    இதில் அப்பா ஊரிலிருந்து வந்த செயல் முடிவடைந்து விட்டது. இதில் வந்திருக்கிறார் என்பது கடந்த காலமா? அல்லது நிகழ்காலமா?. இதில் வருதல் என்ற செயல் முடிவடைந்திருக்கிறது ஆனால் தற்போது தான் முடிவடைந்திருக்கிறது.\
  • சிறிது நேரத்திற்கு முன் நடந்து முடிந்த செயல்களை Present Perfect ல் குறிப்பிட வேண்டும். 
  • Example:
    1. அவர் இப்பொழுது தான் walking போனார்.(He has just gone for walking).
    2.  அவர் இப்பொழுது தான் market ல் இருந்து வந்தார்.(He has just returned from the market).
  • சில செயல்கள் கடந்த காலத்தில் நடைபெற்றாலும் அதன் பாதிப்பு நிகழ்காலத்திலும் இருக்கும் அந்த மாதிரி செயல்களைச் சொல்லவும் present perfect உதவுகிறது.
  • Example:
    1. நான் கடன் வாங்கியிருக்கிறேன்(I have borrowed).
      இதில் நான் ஏற்கனவே கடன் வாங்கி விட்டேன் ஆனால் இன்னும் பணத்தைக் கொடுக்கவில்லை அதனால் கடன் வாங்கிய செயல் இன்னும் முடிவடையவில்லை
    2. நான் என் காலை உடைத்துவிட்டேன்(I have broken my leg). கால் இன்னும் உடைந்து தான் உள்ளது.
Present Perfect Tense வாக்கியங்களை அமைக்க:
  •  Present Perfect Tense வாக்கியங்களை அமைக்க  helping verb களான have அல்லது has மற்றும் வினைச்சொல்லின் past participle form use பண்ண வேண்டும்.

    Present Perfect=have/has+past participle form of verb
Past Participle form of verbs
1.Regular Past participle
  • சில verb களை past tense ல் சொல்லும் போது verb உடன் வெறும் ed மட்டும் சேர்த்தால் போதும் அந்த verb களை past participle ஆக மாற்றவும் ed மட்டும் சேர்த்தால் போதும்>
     
     

     
     

    Present  Perfect=have/has+(verb)ed
     
  • சில
    Subject Helping verb
    call அழை
    walk நட
    play விளையாடு
    swim நீச்சல் அடி
    talk பேசு
    watch
    cook
    share
    open
    close
    pay
    borrow
    ask
    upload
    download
    store


Have/Has:
  • III person singular subject களுடன் has சேர்க்க வேண்டும். மற்ற அனைத்து subject களுடன் have வரும்.
    Subject Helping verb
    I have
    We have
    You have
    They have
    she has
    He has
    It has
  • Example:
    1. நான் இங்கே பல தடவைகள் வந்திருக்கிறேன்.(I have come here many times)
    2. உங்களுடைய plane ஏற்கனவே தரையிரங்கிவிட்டது.(Your plane has already landed)
    3. அவன் சாப்பிட மறுத்திருக்கிறான்.(He has refused to eat).
    4. அவள் தன்னுடைய பெயரைக்கொடுத்திருக்கிறாள்.(She has given her name).
    5. அது நின்று விட்டது.(It has stopped)

Saturday, 27 November 2010

Simple Future Tense(வருங்காலம்)-II

Positive  வாக்கியங்களை negative ஆக மாற்ற :
  • Simple present and simple past tense வாக்கியங்களை negative ஆக மாற்ற not மற்றும் helping verb(do,does,did) ஐப் பயன்படுத்தினோம் simple future tense வாக்கியங்களை negative ஆக மாற்ற not மட்டும் சேர்த்தால் போதும்.
  • Example :அவள் வாங்குவாள் (she will buy) என்பதை அவள் வாங்க மாட்டாள் என negative ஆக சொல்ல not சேர்த்து she will not buy என்று சொன்னால் போதும்
  • will மற்றும் not என்பதை பேசும்போது won't என்று சுறுக்கமாக சொல்லலாம்.shall மற்றும் not சேர்த்து சுறுக்கமாக shan't சொல்லலாம்.ஆனால் பேசும் போது பொதுவாக shan't use பண்ணுவது இல்லை
  • positive Negative
    நான் வாங்குவேன்(I will buy) நான் வாங்க மாட்டேன்(I will not buy/I won't buy)
    நாங்கள் வாங்குவோம்(We will buy) நாங்கள் வாங்கமாட்டோம்.(We wont buy)
    அவள் வாங்குவாள்(She will buy) அவள் வாங்கமாட்டாள்(she won't buy)
    அவன் வாங்குவான்(He will buy) அவன் வாங்கமாட்டான். (He won't buy)
    அவர்கள் வாங்குவார்கள் (They will buy) அவர்கள் வாங்கமாட்டார்கள். (They won't buy)
    நாளைக்கு நான் வருவேன்.(I will come tomorrow) நாளைக்கு நான் வரமாட்டேன். (I won't come tomorrow)
Simple future வாக்கியங்களை Questions ஆக மாற்ற : 
1.yes/no question type:
  • சில கேள்விகளுக்கு பதில் Yes அல்லது No என்று வர வேண்டும். அந்த மாதிரி கேள்விகளை Yes/No type question என்கிறோம்.
  • இனிமேல் செய்யப்போகும் செயல்களை questions ஆக கேட்க will/shall ஐ முதலிலும் அதன் பிறகு subject ஐயும்  அதன் பிறகு verb ஐயும் சேர்த்தால் கிடைக்கும்.

    Will/Shall+subject(I,we,you,they,it,he,she)+verb
  • அவள் வாங்குவாள்(she will buy), அவள் வாங்கமாட்டாள்(she won't buy) அவள் வாங்குவாளா? என்று கேட்க Will she buy? என்று கேட்கலாம்.
  •  Some More examples:


    அவள் வாங்குவாளா? Will she buy?
    அவன் வாங்குவானா? Will he buy?
    அவன் ஓடுவானா? Will he run?
    அவன் வருவானா? Will he come?
    அவர்கள் வருவார்களா? Will they come?
    அது கடிக்குமா? Will it bite?
2.Permission Questions:
  • Shall  என்ற keyword I மற்றும் we உடன் சேர்ந்து வாக்கியம் அமைக்கும் போது அது permission கேட்கும் கேள்வியாக அமையும்.
  • Example:


    நான் போகலாமா? Shall I go?
    நாம் போகலாமா? Shall we go?/Shall we move?
    நான் படிக்கலாமா? Shall I read?
    இந்த email அனுப்பட்டுமா? Shall I send this email?
    நான் உள்ளே வரலாமா? Shall I come in?
    உன்னுடைய room ஐ பண்னலாமா? Shall I use your room?
3.Information Questions:
  • Information qustion களை கேட்க என்ன,எங்கே,எப்பொழுது, ஏன், யார்,யாரை போன்ற question words தேவைப்படும்.

  • question word+Will/Shall+subject+verb?
     
  • Some example:


    அவன் என்ன வாங்குவான்? What will he buy?
    அவள் எப்பொழுது வருவாள்? When will she come?
    நீ எங்கு வாங்குவாய்? Where will you buy?
    நீ எப்படி போவாய்? How will you go?
    நீ எங்கே தங்குவாய்? Where will you stay?
    நான் எங்கே தங்குவது? Where will I stay?
    நான் எப்பொழுது வரலாம்? When will I come?
    அவர்கள் என்ன நினைப்பார்கள்? What will they think?
    நாம் எங்கே தூங்குவது? Where will we sleep?

Friday, 26 November 2010

Simple Future Tense(வருங்காலம்)

  • இனி மேல் நடக்கப்போகும் செயல்களைச் சொல்ல Simple future tense பயன்படுகிறது.
  • Example:
    நான் நாளை ஊருக்கு போகிறேன். இதில் போவது என்ற செயல் இன்னும் நடைபெறவில்லை நாளை தான் நடக்கும்.இதே போல் இனிமேல் நடைபெற போகும் செயல்களைச் சொல்ல Simple future tense பயன்படுத்த வேண்டும்.
Simple future tense வாக்கியங்களை அமைக்க:
                 நான் ஒரு laptop வாங்குகிறேன் ( நிகழ்காலம்) I buy a laptop
                 நான் ஒரு laptop வாங்கினேன்(கடந்த காலம்) I bought a laptop
   நான் ஒரு laptop வாங்குவேன் என்று சொல்ல என்ன வினைச்சொல் பயன்படுத்த வேண்டும்?.
  • Simple future tense வாக்கியங்களை அமைக்க present tense form of verb use பண்னால் போதும் ஆனால் அதனுடன் will அல்லது shall என்ற keword use பண்ன வேண்டும்.

    Will/Shall+present tense verb
  • Shall என்பது I மற்றும் we  என்பதுடன் மட்டும் சேரும் .Will என்பது you,they,it,he  மற்றும் she போன்றவற்றுடன் சேரும். 
    Subject
    I/We Shall
    You will
    they will
    it will
    he  will
    she will
    so நான் ஒரு laptop வாங்குவேன் என்று சொல்ல I shall buy a laptop என்று சொல்ல வேண்டும.
  • ஆனால் தற்போது நடைமுறையில் I மற்றும் we உடன் will சேர்த்து பேசப்படுகிறது. எனவே I shall buy a laptop என்றும் I will buy a laptop என்றும் கூறலாம்.
சில Simple future tense வாக்கியங்கள: 
 


நான் பார்ப்பேன் I shall see/I will see
நாங்கள் பார்ப்போம் We shall see/We will see
நீ பார்ப்பாய் You will see
அவன் பார்ப்பான் He will see
அவள் பார்ப்பாள் She will see
அவர்கள் பார்ப்பார்கள் They will see
நான் போவேன் I shall go/I will go
நாங்கள் போவோம் We shall g/We will go
நீ போவாய் You will go
நான் வாங்குவேன் I shall buy/I will buy
நாங்கள் வாங்குவோம் We shall buy/We will buy
நீ வாங்குவாய் You will buy
நான் வருவேன் I will come/I shall come 
நான் காத்திருப்பேன் I will wait/I shall wait
நினைவில் வைத்துக்கொள்ளவும்:
  • எதிர்காலத்தில் நடக்கப்போகும் உண்மைகள், மாறுபடாத இவற்றைச் சொல்லும் போது simple present tense use பண்ண வேண்டும்.(To talk about facts in the future or plans that will not change use the simple present tense)
  • Example:
    1. Tomorrow is Sunday 
    2. Summer vacation ends on friday.
    3. The new library opens next week.
    4. We fly to London on Monday.
Going to +Verb 
  • எதிர்காலத்தில் செய்ய திட்டமிட்ட செயல்கள் மற்றும் செய்யப்போகும் வேலைகள் போன்றவற்றை சொல்லும் போது going to மற்றும் verb சேர்த்து சொல்லலாம்.
  • Example:
    1. I am going to visit the temple tomorrow.
    2. I am going to see the new movie next week
    3. My friend is going to move to london next year.
    4. Dad is going to buy a new cycle.
    5. My sister is going to have another baby soon
    6. It is going to be rain tomorrow
    7. I hope someone is going to fix the problem soon
    8. You are going to help me, aren't you?
    9. My friends are going to teach me how to play chess.
    10. Mom and dad are going to buy a new laptop.
    11. Are you going to read your book now?