Thursday 18 November 2010

Simple Past Tense ( கடந்த காலம்)-II

2.Simple Past வாக்கியங்களை Questions ஆக மாற்ற :
1.yes/no question type:
  • சில கேள்விகளுக்கு பதில் Yes அல்லது No என்று வர வேண்டும். அந்த மாதிரி கேள்விகளை Yes/No type question என்கிறோம்.
  • இந்த மாதிரி கடந்த காலத்தில் நடந்து முடிந்த செயல்களை கேள்விகளாக கேட்க Did என்ற helping verb உதவுகிறது. இதில் helping verb subjectக்கு முன்னால் வர வேண்டும்.
  • Example : 
    I went (நான் போனேன்). இதை negative ஆக நான் போகவில்லை என்று சொல்ல I did not(didn't) goஎன்று சொல்ல வேண்டும்
    நான் போனேனா? என்று கேள்வியாக கேட்க Did I go? என்று கேட்க வேண்டும்.இதற்கு பதில் சொல்லும் போது ஆமாம் நான் போயிருந்தேன்(Yes,I went) என்று சொல்லலாம் அல்லது இல்லை நான் போகவில்லை(No, I didn't go) என்று சொல்லலாம்
  • கேள்வியானது past tense ல் இருந்தால் பதிலும் past tense ல் தான் இருக்க வேண்டும்,
    நீ அவளை பார்த்தாயா?(Did you see her?)
    ஆமாம் நான் அவளைப் பார்த்தேன்(yes, I saw her)
  • Some more Example
    1. நேற்று நீ சீக்கிரம் எழுந்தாயா?(Did you get up early yesterday?)
      ஆமாம் நான் சீக்கிரம் எழுந்தேன்.(Yes I got up early)
    2.  நீ இட்லி சாப்பிட்டாயா?(Did you eat idly?)
      ஆமாம்(yes, I did)
    3. இந்த கவிதை நீ எழுதினாயா?(Did you write this poem?)
      நான் இதை எழுதவில்லை. ஆனால் என் தம்பி எழுதினான்.(No, I didn't write it, but my brother did.)
2.Information Question:
  • நான் ஒரு laptop வாங்கினேன் என்று நண்பர் யாராவது சொன்னால் நமக்கு எப்பொழுது வாங்கினாய்?, எங்கு வாங்கினாய்? ஏன் வாங்கினாய்?, எவ்வளவு விலை? என்று கேட்க தோன்றும்.
  • இதைப் போலமேலும் தகவல் சேகரிக்க கேட்கும் கேள்விகளை Information question என்கிறோம்.
  • Information qustion களை கேட்க என்ன,எங்கே,எப்பொழுது, ஏன், யார்,யாரை போன்ற question words தேவைப்படும்.
  • தெரிந்து கொள்ள வேண்டிய வினாச் சொற்கள்(Question words)
    Question words வினாச் சொற்கள்
    What? என்ன?
    When? எப்பொழுது?
    Where? எங்கே?
    Which? எது?
    Why? ஏன்?
    Who? யார்?
    Whom? யாரை?
    How? எப்படி?
    How far? எவ்வளவு தூரம்?
    How long? எவ்வளவு நேரம்?
    How often? எப்பொழுதெல்லாம்?
    How much? எவ்வளவு?
    How many? எத்தனை?
    To whom? யாருக்கு?
  • கடந்த காலத்தில் நடைப்பெற்ற செயல்களை Information question களாக கேட்க  helping verb did முன்னால் question word(what,when,why,how போன்ற)  சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • Example:


    எப்பொழுது வாங்கினாய்? When did you buy?
    எங்கு வாங்கினாய்? Where did you buy?
    நீ என்ன வாங்கினாய்? What did you buy?
    எவ்வளவு விலை? How much did it cost?
    எங்கே ஒடினாய்? Where did you run?
    ஏன் ஒடினாய்? Why did you run?
    எப்பொழுது ஒடினாய்? When did you run?
    எப்படி ஒடினாய்? How did you run?
    நீ எங்கே போனாய்? Where did you go?
    நீ எப்படி போனாய்? How did you go?
    நீ எப்படி வந்தாய்? How did you come?
    நீ யாருடன் வந்தாய்? Whom did you come with?
    நீ ஏன் அவளுடன் போனாய்? Why did you go with her?
    நீ அவர்களை எப்பொழுது சந்தித்தாய்? When did you meet them?
    நேற்று நீ யாரைச் சந்தித்தாய்? Whom did you meet yesterday?
  • Who என்ற question word உடன் did என்ற helping verb சேராது.


    உன்னுடன் யார் வந்தது? Who came with you?
    யார் என்னுடைய புக் எடுத்தது? who took my book?
    கதவைத் தட்டியது யார்? Who knocked at the door?
    Biscuit எடுத்தது யார்? Who took the biscuit?
    யார் எல்லா கதவையும் மூடியது? Who closed all the doors?

10 comments:

  1. வழக்கம்போலவே இன்றும் படங்கள் அருமை மிகவும் பயனுள்ளது

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    ReplyDelete
  2. சமீபத்தில்தான் இந்த ப்ளாக் எனக்கு அறிமுகமானது, மிகவும் பயனுள்ள பதிவுகள், தொடரட்டும் உங்கள் பணி, நன்றி!!

    ReplyDelete
  3. hai mam,

    how are you?

    thank you for you teaching mam.

    thank for your kind information mam.

    congrats for all your sucuess mam.

    ReplyDelete
  4. Thank you மாணவன், Vaigai, Kalai

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி சுனிதா

    ReplyDelete
  6. விளம்பரத்தை அழுத்தி உதவி செய்துள்ளேன்.

    ReplyDelete
  7. Thank you மகாதேவன்-V.K

    ReplyDelete
  8. hi
    ur blog simply awesome...

    ReplyDelete