- இனி மேல் நடக்கப்போகும் செயல்களைச் சொல்ல Simple future tense பயன்படுகிறது.
- Example:
நான் நாளை ஊருக்கு போகிறேன். இதில் போவது என்ற செயல் இன்னும் நடைபெறவில்லை நாளை தான் நடக்கும்.இதே போல் இனிமேல் நடைபெற போகும் செயல்களைச் சொல்ல Simple future tense பயன்படுத்த வேண்டும்.
நான் ஒரு laptop வாங்குகிறேன் ( நிகழ்காலம்) I buy a laptop
நான் ஒரு laptop வாங்கினேன்(கடந்த காலம்) I bought a laptop
நான் ஒரு laptop வாங்குவேன் என்று சொல்ல என்ன வினைச்சொல் பயன்படுத்த வேண்டும்?.
- Simple future tense வாக்கியங்களை அமைக்க present tense form of verb use பண்னால் போதும் ஆனால் அதனுடன் will அல்லது shall என்ற keword use பண்ன வேண்டும்.
Will/Shall+present tense verb - Shall என்பது I மற்றும் we என்பதுடன் மட்டும் சேரும் .Will என்பது you,they,it,he மற்றும் she போன்றவற்றுடன் சேரும்.
so நான் ஒரு laptop வாங்குவேன் என்று சொல்ல I shall buy a laptop என்று சொல்ல வேண்டும.Subject I/We Shall You will they will it will he will she will - ஆனால் தற்போது நடைமுறையில் I மற்றும் we உடன் will சேர்த்து பேசப்படுகிறது. எனவே I shall buy a laptop என்றும் I will buy a laptop என்றும் கூறலாம்.
நான் பார்ப்பேன் | I shall see/I will see |
நாங்கள் பார்ப்போம் | We shall see/We will see |
நீ பார்ப்பாய் | You will see |
அவன் பார்ப்பான் | He will see |
அவள் பார்ப்பாள் | She will see |
அவர்கள் பார்ப்பார்கள் | They will see |
நான் போவேன் | I shall go/I will go |
நாங்கள் போவோம் | We shall g/We will go |
நீ போவாய் | You will go |
நான் வாங்குவேன் | I shall buy/I will buy |
நாங்கள் வாங்குவோம் | We shall buy/We will buy |
நீ வாங்குவாய் | You will buy |
நான் வருவேன் | I will come/I shall come |
நான் காத்திருப்பேன் | I will wait/I shall wait |
- எதிர்காலத்தில் நடக்கப்போகும் உண்மைகள், மாறுபடாத இவற்றைச் சொல்லும் போது simple present tense use பண்ண வேண்டும்.(To talk about facts in the future or plans that will not change use the simple present tense)
- Example:
- Tomorrow is Sunday
- Summer vacation ends on friday.
- The new library opens next week.
- We fly to London on Monday.
- எதிர்காலத்தில் செய்ய திட்டமிட்ட செயல்கள் மற்றும் செய்யப்போகும் வேலைகள் போன்றவற்றை சொல்லும் போது going to மற்றும் verb சேர்த்து சொல்லலாம்.
- Example:
- I am going to visit the temple tomorrow.
- I am going to see the new movie next week
- My friend is going to move to london next year.
- Dad is going to buy a new cycle.
- My sister is going to have another baby soon
- It is going to be rain tomorrow
- I hope someone is going to fix the problem soon
- You are going to help me, aren't you?
- My friends are going to teach me how to play chess.
- Mom and dad are going to buy a new laptop.
- Are you going to read your book now?
வழக்கம்போலவே பயனுள்ள பாடங்கள் அருமை,
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி...
நன்றி
Present Madam.
ReplyDeletepresent mam
ReplyDeleteThank you மாணவன்.
ReplyDeleteஉங்கள் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி
வாண்டு சித்ரா & சிவசதீஷ் வருகைக்கு மிகவும் நன்றி
ReplyDeletethankyou teacher.
ReplyDelete