Wednesday, 1 December 2010

Present Perfect Tense(நிகழ்கால வினைமுற்று)

  • ஒரு செயல் கடந்த காலத்தில் தொடங்கி நிகழ்காலத்தில் முடிந்திருந்தால் அந்த செயலைச் சொல்ல Present Perfect tense உபயோகப்படுத்த வேண்டும்.
  • Example:
    என்னுடைய அப்பா ஊரிலிருந்து வந்திருக்கிறார்.
    இதில் அப்பா ஊரிலிருந்து வந்த செயல் முடிவடைந்து விட்டது. இதில் வந்திருக்கிறார் என்பது கடந்த காலமா? அல்லது நிகழ்காலமா?. இதில் வருதல் என்ற செயல் முடிவடைந்திருக்கிறது ஆனால் தற்போது தான் முடிவடைந்திருக்கிறது.\
  • சிறிது நேரத்திற்கு முன் நடந்து முடிந்த செயல்களை Present Perfect ல் குறிப்பிட வேண்டும். 
  • Example:
    1. அவர் இப்பொழுது தான் walking போனார்.(He has just gone for walking).
    2.  அவர் இப்பொழுது தான் market ல் இருந்து வந்தார்.(He has just returned from the market).
  • சில செயல்கள் கடந்த காலத்தில் நடைபெற்றாலும் அதன் பாதிப்பு நிகழ்காலத்திலும் இருக்கும் அந்த மாதிரி செயல்களைச் சொல்லவும் present perfect உதவுகிறது.
  • Example:
    1. நான் கடன் வாங்கியிருக்கிறேன்(I have borrowed).
      இதில் நான் ஏற்கனவே கடன் வாங்கி விட்டேன் ஆனால் இன்னும் பணத்தைக் கொடுக்கவில்லை அதனால் கடன் வாங்கிய செயல் இன்னும் முடிவடையவில்லை
    2. நான் என் காலை உடைத்துவிட்டேன்(I have broken my leg). கால் இன்னும் உடைந்து தான் உள்ளது.
Present Perfect Tense வாக்கியங்களை அமைக்க:
  •  Present Perfect Tense வாக்கியங்களை அமைக்க  helping verb களான have அல்லது has மற்றும் வினைச்சொல்லின் past participle form use பண்ண வேண்டும்.

    Present Perfect=have/has+past participle form of verb
Past Participle form of verbs
1.Regular Past participle
  • சில verb களை past tense ல் சொல்லும் போது verb உடன் வெறும் ed மட்டும் சேர்த்தால் போதும் அந்த verb களை past participle ஆக மாற்றவும் ed மட்டும் சேர்த்தால் போதும்>
     
     

     
     

    Present  Perfect=have/has+(verb)ed
     
  • சில
    Subject Helping verb
    call அழை
    walk நட
    play விளையாடு
    swim நீச்சல் அடி
    talk பேசு
    watch
    cook
    share
    open
    close
    pay
    borrow
    ask
    upload
    download
    store


Have/Has:
  • III person singular subject களுடன் has சேர்க்க வேண்டும். மற்ற அனைத்து subject களுடன் have வரும்.
    Subject Helping verb
    I have
    We have
    You have
    They have
    she has
    He has
    It has
  • Example:
    1. நான் இங்கே பல தடவைகள் வந்திருக்கிறேன்.(I have come here many times)
    2. உங்களுடைய plane ஏற்கனவே தரையிரங்கிவிட்டது.(Your plane has already landed)
    3. அவன் சாப்பிட மறுத்திருக்கிறான்.(He has refused to eat).
    4. அவள் தன்னுடைய பெயரைக்கொடுத்திருக்கிறாள்.(She has given her name).
    5. அது நின்று விட்டது.(It has stopped)

6 comments:

  1. மிகவும் பயனுள்ள பாடங்கள் அருமை,

    தொடரட்டும் உங்கள் பணி

    நன்றி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. I have studied these lessons just before

    Thanks Miss!

    ReplyDelete
  3. Thank you மாணவன்.
    Thank you chitra
    Thank you எஸ்.கே
    Welcome back priya

    ReplyDelete
  4. For clarification of my doubt i have gone through this post,I came to know,

    "Miss ! this is your 50th post.Best wishes !!"

    ReplyDelete