Tuesday 22 February 2011

Study English every Day-21/02/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
  1. அப்படி செய்வதில் எனக்கு மகிழ்ச்சி.
    I will be glad to do so
  2. நீங்கள் சீட்டு விளையாட விரும்புகிறீர்களா?
    Would you like to play cards?
  3. உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
    I am glad to see you
  4. பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று.
    It is a long time since we met
  5. நான் உங்களைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
    I had heard a lot about you
  6. என்னைப் போக விடு.
    Let me go
  7. வீண் பேச்சு பேசாதே.
    Don't talk nonsense
  8. எனக்கு என் உடல்நலம் பற்றி கவலையாக உள்ளது.
    I am worried about my health
  9. அவள் தன் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறாள்.
    She is trying to reduce her weight.
  10. எனக்கு ஜீரமாக இருப்பது போல் இருக்கிறது.
    I am feeling feverish.
Try Yourself: 
         கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
  1. பகலில் சாப்பிட்டு விட்டு சற்று இளைப்பாறுங்கள்..இரவில் சாப்பிட்டு சற்று நடமாடுங்கள்.
  2. எனக்கு படகோட்டுதல் மிகவும் பிடிக்கும்.
  3. வாருங்கள்.விளையாடலாம்.
  4. நீ அந்த அலுவலகத்தில் வேலை செய்கிறாயா?
  5. நீங்கள் என்ன பதவியில் இருக்கிறீர்கள்?
  6. எனக்கு இன்று வேலை அதிகம் இருக்கிறது.
  7. இந்தக் கண்ணாடி என் கையால் உடைந்தது.
  8. பிரயாணத்தில் குறைவான பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.
  9. எனக்கு ஏதாவது போன் வந்ததா?
  10. என்னுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.


8 comments:

  1. for the 5th sentence, shouldn't be 'I HAVE heard a lot about you'?

    ReplyDelete
  2. கற்றுக்கொண்டோம்.. மிக்க மகிழ்ச்சி. நன்றி..!

    ReplyDelete
  3. நல்ல முயற்ச்சி. ஆங்கிலத்தை சரிவர கற்றுத் தராத பள்ளிகளில் படித்து, பட்டம் பெற்றும் ஆங்கிலக் குறைபாட்டால் தினறும் என் போன்றோர்க்கு நல்ல பயன் தருகிறது உங்கள் பதிவுகள்.

    நான் பயிற்ச்சிக்காக சில தமிழ் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.
    அதில் எத்தனை பிழை எத்தனை சரி என்று யாரேனும் திருத்தித் தந்தால் தான், எனக்கு ஒரு நம்பிக்கை வரும். ஆனால் படித்துத் திருத்துபவருக்கு நாளடைவில் போர் அடிக்கலாம்.

    ஆக, இது போல் கிராமர் செக் செய்து பிழைகளை சுட்டிக் காட்டுவதுடன், திருத்தங்கள் தருகிறாற் போல் எதாவது சாப்ட்வேர் இருக்கிறதா ? கொஞ்சம் சொல்லுங்களேன்.

    என் இமெயில்: naraicici@gmail.com

    ReplyDelete
  4. மிக்க நன்ரி

    ReplyDelete
  5. MEE
    THE FIRST THANK YOU TEACHER..

    ReplyDelete